வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
12. மேசத்தில் அல்லது விருச்சிகத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் இராணுவத்தின் படைத்தளபதியாக இருப்பார்; பெரும் பணக்காரராக இருப்பார்; நிறைய மனைவிகளும் குழந்தைகளும் இருக்கும், கொடையாளியாக இருப்பார்; நல்ல வேலையாட்களைக் கொண்டிருப்பார்; அமைதியான குணம் கொண்டிருப்பார்; நல்ல தோற்றம் கொண்டிருப்பார்; மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பார்; புகழ் பெற்றவராக இருப்பார்.
ரிசபம் அல்லது துலாத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நோய்நொடிகள் இன்றி இருப்பார்; வாழ்க்கை வசதியானதாக இருக்கும்; செல்வந்தராக இருப்பார்; நண்பர்களும் குழந்தைகளும் கொண்டிருப்பார்; கொடையில் தாராளமாக இருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்.
மிதுனம் அல்லது கன்னியில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நிறைய உடைகள், வீடுகள், வேலையாட்கள், குழந்தைகள், நண்பர்கள் கொண்டிருப்பார்; அமைச்சராக இருப்பார்; வசதியாக வாழ்வார்.
13. கடகத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நவரத்தினங்களும், குழந்தைகளும், சொத்தும், மனைவியும் கொண்டிருப்பதுடன், செல்வாக்கு மிக்கவராகவும், புத்திக் கூர்மையானவராகவும், வசதியானவராகவும் இருப்பர்.
சிம்மத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், கடகத்தில் வியாழன் இருந்தால் கூறப்பட்டவை அனைத்தும் கொண்டிருப்பதுடன், இராணுவத்தில் படைத் தளபதியாகவும் இருப்பார்.
தனுசு அல்லது மீனத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், ஒரு பகுதியை ஆள்பவராகவோ அல்லது அரசரின் கீழ் அமைச்சராகவோ அல்லது இராணுவத் தளபதியாகவோ இருப்பார்; பெரும் செல்வந்தராக இருப்பார்.
கும்பத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், கடகத்தில் சந்திரன் இருந்தால் கூறப்பட்டவை அனைத்தும் கொண்டிருப்பார்.
மகரத்தில் வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், அவருடைய தகுதிக்கு குறைவான வேலையை தம்முடைய வாழ்வில் மேற்கொள்வார்; மிகக்குறைவான செல்வம் கொண்டிருப்பார்; துன்பத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment