வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - நான்கு
கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்
4. கரு
உருவாகும் நேரத்தில்,
செவ்வாயோ அல்லது
சனியோ சூரியனிடமிருந்து அல்லது
சந்திரனிடமிருந்து 7வது
வீட்டில் இருந்தால்
கணவனும் மனைவியும்
நோயில் விழுவார்கள்(1); ஆனால்
செவ்வாய் மற்றும்
வியாழன் ஆகிய
இரு கோள்களில்
ஏதேனும் ஒன்று
12வது வீட்டிலும், மற்றொன்று சூரியன்
சந்திரனுக்கு இரண்டாம்
வீட்டிலும் இருந்தால்
அல்லது இரண்டில்
ஒரு கோள்
சூரியனுடன் அல்லது
சந்திரனுடன் இணைந்திருக்க மற்றொன்று
சூரியன் அல்லது
சந்திரனுடன் தொடர்பில்
இருந்தால், அந்த
மனிதரும் அவருடைய
மனைவியும் மரணத்தை
சந்திக்க நேரும்(2).
குறிப்பு (திரு. சிதம்பரம்)
(1) செவ்வாய் அல்லது
சனிக்கு உரிய
மாதத்தில் (பத்தி
16-ல் விவரிக்கப்பட்டவாறு)
(2) சனி
அல்லது செவ்வாய்
ஆகிய இருவரில்
எது பலமிகுந்து இருக்கிறதோ அந்த
மாதத்தில்.
உரையாசிரியரின் கருத்துப்படி இந்த
பத்தியில் கூறப்பட்ட
இரண்டு விளைவுகள்
குழந்தை பிறப்பதற்கு முன்புதான் ஏற்படும்,
பிறந்த பிறகு
அல்ல.
குறிப்பு: (நிமித்திகன்)
பத்தி 16-ல்
கரு உருவாகியதிலிருந்து அதன்
வளர்ச்சி ஒவ்வொரு
மாதமும் ஒரு
கோள் தொடர்புடையது என்று
விளக்கப்பட்டிருக்கிறது.
5. கரு
உண்டாவது(1) பகல்
என்றால், சூரியனும்
சுக்கிரனும் முறையே
தந்தை மற்றும்
தாயைக் குறிக்கும்; அதுவே
இரவு என்றால்
சனியும் சந்திரனும் முறையே
தந்தை மற்றும்
தாயைக் குறிக்கும். முதலில் குறிப்பிடப்பட்டதற்கு, சனியும்
சந்திரனும் முறையே
தந்தை வழி
மாமனையும், தாய்
வழி அத்தையையும் குறிக்கும்; இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டதற்கு சூரியனும்
சுக்கிரனும் முறையே
தந்தை வழி
மாமனையும், தாய்
வழி அத்தையையும் குறிக்கும். தந்தையையும் தந்தைவழி
மாமனையும் குறிக்கும் கோள்கள்
ஒற்றைப்படை இராசியில்
இருந்தால், அல்லது
தாயையும் தாய்வழி
அத்தையையும் குறிக்கும் கோள்கள்
இரட்டைப்படை இராசியிலும் அப்போது
இருந்தால், தந்தை
மற்றும் தந்தைவழி
மாமனும் அல்லது
தாய் மற்றும்
தாய்வழி அத்தையும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குறிப்பு (திரு. சிதம்பரம்)
(1)
அல்லது பிறப்பது - உரையாசிரியரின் கருத்துப்படி.
6. கரு உண்டாகும் நேரத்தில், அசுபக் கோள்கள் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால்(1) மேலும் உதய இராசியானது சுபக் கோள்களுடன் தொடர்பில்லாமல் இருந்தால், அல்லது சனியானது உதய இராசியில் இருந்து கொண்டு தேய்பிறை சந்திரனுடனும், செவ்வாயுடனும் (ஏதேனும் ஒரு வகையில்) தொடர்பில் இருந்தால், கருவுற்ற பெண் மரணமடைவாள்(2).
குறிப்பு (திரு. சிதம்பரம்)
(1) இரண்டாவது வீடு – சில உரையாசிரியர்களின் கருத்துப்படி
(2) பிரசவத்திற்கு முன்பு – உரையாசிரியர் கருத்துப்படி.
7. அந்த நேரத்தில் உதய இராசி அல்லது சந்திரன் அல்லது இரண்டும் அசுபக் கோள்களுக்கிடையே இருந்தால்(1) மேலும் அதே நேரத்தில் சுபக் கோள்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தால், கருவுற்ற பெண் மரணமடைவாள்(2)
குறிப்பு (திரு. சிதம்பரம்)
(1) இந்த குறிப்பிட்ட நிலையினைப் பொருத்தவரையில், அசுபக் கோள்கள் மூன்று மட்டுமே, முறையே, சூரியன், செவ்வாய் மற்றும் சனி – அதே நேரத்தில் இவைகளுக்கிடையே உதயஇராசியும்(இலக்கினம்) சந்திரனும் இருக்க வேண்டும் – அதாவது அவை இரண்டும் ஒன்றினைந்தோ அல்லது அடுத்தடுத்த வீடுகளிலோ இருக்க வேண்டும். உரையாசிரியரின் கருத்துப்படி இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது இரண்டிலிருந்தும் அல்லது அவை இருக்கும் நவாம்சத்தின் இரு பக்கங்களில் இருந்து, அசுபக் கோள்கள் 12வது அல்லது 2வது வீட்டில் இருக்க வேண்டும்.
(2) பிரசவத்திற்கு முன்பும் மற்றும் அசுபக் கோள் பலமிகுந்து இருக்கும் மாதத்திலும்.
8. (அந்த நேரத்தில்) அசுபக் கோள்கள் இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 4வது வீட்டிலும் செவ்வாய் எட்டாவது வீட்டிலும் அல்லது இலக்கினத்திலிருந்து செவ்வாய் 4வது வீட்டிலும் சூரியன் 12வது வீட்டிலும் இருக்கும் போது அது தேய்பிறை சந்திரனாக இருக்கும்போது, கருவுற்ற பெண் மரணமடைவாள்.
பகுதி நான்கு – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment