வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - நான்கு
கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்
குறிப்பு: (நிமித்திகன்)
கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து கூறுவது தண்டனைக்குரிய குற்றம். இது மூல நூலின் மொழிபெயர்ப்பு. இங்கு மொழிபெயர்த்த கருத்தினைக் கொண்டு யாரும் பலன் அறியவோ அல்லது பலன் உரைக்கவோ வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
9. (கருவுற்ற நேரத்தில்) செவ்வாய் இலக்கினத்திலும், சூரியன் ஏழாவது வீட்டிலும் இருந்தால், கருவுற்ற பெண் ஆயுதத்தால் மரணம் அடைவாள். ஒரு குறிப்பிட்ட மாதத்தின் அதிபதி(1) பாதிக்கப்பட்டிருந்தால்(2), அந்தக் கருவானது அந்த மாதத்தில் கலைந்து விடும்.
குறிப்பு: (திருசிதம்பரம்)
(1) பத்தி 16-ல் குறிப்பிடப்பட்டவாறு கருவுற்ற அந்தந்த மாதங்களுக்கு உரிய அதிபதிகள்
(2) கருவுற்ற நேரத்தில் கோள்களின் யுத்தத்தில் தோல்வி அல்லது மறைவு
10. சுபக் கோள்கள்(1) சந்திரனுடனோ அல்லது இலக்கினத்திலோ(2), அல்லது
அவை சந்திரன் அல்லது இலக்கினத்திற்கு இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாவது
வீட்டில் இருந்தால், அது சுகப் பிரசவமாக இருக்கும், இருப்பினும், அசுபக் கோள்கள் சந்திரன்
அல்லது இலக்கினத்திற்கு மூன்றாவது அல்லது பதினொன்றாவது வீட்டிலும், அதே நேரத்தில் சந்திரன்
அல்லது இலக்கினமானது சூரியனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்(3).
குறிப்பு: (திருசிதம்பரம்)
(1) அவைகள் முறையே புதன், வியாழன், வெள்ளியாகும்
(2) அல்லது அதே நேரத்தில் அவை இரண்டும்
(3) வேறு சில உரைகளின்படி, வியாழனுடன்.
ஆனால் இது சாரவளிக்கு முரனானது.
11. (1)உதய இராசி, சூரியன், வியாழன், சந்திரன் பலமிகுந்தும் அவை இராசியிலும்
நவாம்சத்திலும் ஒற்றைப்படை (ஆண்) இராசியிலும் இருந்தால், அந்த பிறப்பு ஆண் குழந்தையாக
இருக்கும்(2); அவை இரட்டைப்படை (பெண்) இராசி அல்லது நவாம்சத்தில் இருந்தால் அந்த பிறப்பு
பெண் குழந்தையாக இருக்கும்(3); சூரியனும் வியாழனும்(4) ஒற்றைப்படை இராசியில் இருந்தால்,
அந்த பிறப்பு ஆண் குழந்தையாக இருக்கும், சந்திரன், வெள்ளி, செவ்வாய்(5) ஆகியவை இரட்டைப்படை
இராசியில் இருந்தால் அந்த பிறப்பு பெண் குழந்தையாக இருக்கும். மேலும், சூரியனும் வியாழனும்
இரு ஆண் இரட்டைஉடல் நவாம்சத்தில்(6) இருந்து அவை புதனுடன் தொடர்பில் இருந்தால், அந்த
பிறப்பு இரட்டை ஆண் குழந்தையாக இருக்கும்; வெள்ளியும் செவ்வாயும் இரு பெண் இரட்டைஉடல்
நவாம்சத்தில்(7) இருந்து, புதனுடன் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பு இரட்டை பெண் குழந்தையாக
இருக்கும்(8).
குறிப்பு: (திருசிதம்பரம்)
(1) கரு உருவான நேரம் அல்லது பிறப்பு அல்லது அதுபற்றிய கேள்வி பிறரால்
கேட்கப்படும் நேரம் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2) &(3) சில கோள்கள் ஆண் இராசியிலும் சில கோள்கள் பெண் இராசியிலும்
அல்லது நவாம்சத்திலும் இருந்தால், பாலினமானது வலிமை வாய்ந்த கோளைப் பொருத்து அமையும்.
(4) & (5) கோள்களும்
பலமிகுந்து இருக்க வேண்டும்.
(6) மிதுனம் மற்றும் தனுசு
ஆகியவற்றின் நவாம்சம்.
(7) கன்னி மற்றும் மீனம்
ஆகியவற்றின் நவாம்சம்
(8) நான்கு இரட்டைஉருவ
நவாம்சத்துடனும் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பு ஆண் இரட்டையர்களாகவும் பெண் இரட்டையர்களாகவும்
இருக்கும்.
பகுதி நான்கு – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment