வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினொன்று
அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி
செவ்வாயின் தொடர்பில் அரசனாகும் யோகம்
8. மீனம் இலக்கினமாக இருக்க, அதில் சந்திரன் இருக்க, கும்பம், மகரம், சிம்மத்தில் முறையே சனி, செவ்வாய், சூரியன் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசன் ஆவார்.
மேலும், செவ்வாய் மேசத்திலும், வியாழன் கடகத்திலும் இருக்க, மேசம் இலக்கினமாகவோ அல்லது கடகம் இலக்கினமாகவோ இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அரசன் ஆவார்.
9. கடகம் இலக்கினமாக இருக்க, அதில் வியாழன் இருக்க, சந்திரன், வெள்ளி, புதன் ஆகியவை ரிசபத்தில் இருக்க, சூரியன் மேசத்தில் இருக்க பிறக்கும் ஒருவர், பேரரசன் ஆவார்.
10. மகரம் இலக்கினமாக இருக்க, அதில் சனி இருக்க, மேசம், கடகம், சிம்மத்தில் அதன் அதிபதிகள் இருக்க, மிதுனம் மற்றும் துலாத்தில் முறையே, புதனும் வெள்ளியும் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் புகழ் மிக்க அரசன் ஆவார்.
11. கன்னியானது இலக்கினமாக இருக்க, அதில் புதன் இருக்க, வெள்ளி மிதுனத்திலும், சந்திரனும் வியாழனும் மீனத்தில் இருக்க, செவ்வாயும் சனியும் மகரத்தில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசன் ஆவார்.
12. மேலே குறிப்பிட்ட பல்வேறு யோகங்களில்(1) பிறந்தவர்கள், அவர்கள் கீழ்நிலைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசன் ஆவார்கள். அத்தகையவர்கள் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால், சந்தேகமில்லாமல் அரசன் ஆவார்கள். நாம் இப்போது அரசக் குடும்பத்தில் பிறந்து அரசன் ஆகக் கூடிய நிலை இல்லையெனில் செல்வந்தர் ஆகக்கூடிய யோகங்களைப் பற்றி பார்ப்போம்,
குறிப்பு:
(1) அதாவது, மொத்தத்தில் மேலே குறிப்பிட்ட 96 வகையான யோகங்கள்.
யோகங்கள் தொடரும்….
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment