வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினொன்று
அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி
சனியின் தொடர்பில் அரசனாகும் யோகம்
4.
சனியானது கும்பத்தில் இருக்க, சூரியன் மேசத்திலும், சந்திரன் ரிசபத்திலும், புதன் மிதுனத்திலும், வியாழன் சிம்மத்திலும், செவ்வாய் விருச்சிகத்திலும் இருக்க, இலக்கினமானது கும்பம் அல்லது மேசம் அல்லது ரிசபமாக இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
சனியானது துலாத்தில் இருக்க, சந்திரன் ரிசபத்திலும், சூரியன், புதன் கன்னியிலும், வெள்ளி துலாத்திலும், செவ்வாய் மேசத்திலும், வியாழன் கடகத்திலும் இருக்க, இலக்கினமானது துலாம் அல்லது ரிசபமாக இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
5. செவ்வாய் மகரத்திலும், சூரியனும் சந்திரனும் தனுசுவிலும், சனி மகரத்திலும் இருக்க, இலக்கினமும் மகரமாக இருந்தால், அந்த நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
மேலும், இலக்கினம் மகரமாக இருக்க, செவ்வாயும் சந்திரனும் அதில் இருக்க, சூரியன் தனுசுவில் இருக்கும் நிலையில், பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
மேலும், மேசம் இலக்கினமாக இருக்க, அதில் சூரியன் இருக்க, சனியும் சந்திரனும் துலாத்தில் இருக்க, வியாழன் தனுசுவில் இருந்தால், அந்த நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
6. இலக்கினம் ரிசபமாக இருக்க, அதில் சந்திரன் இருக்க, சூரியன் சிம்மத்தில் இருக்க, வியாழன் விருச்சிகத்திலும், சனி கும்பத்திலும் இருக்க, பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.
மேலும், இலக்கினம் மகரமாகவும், அதில் சனியும் இருக்க, சந்திரன் 3வது வீட்டில் இருக்க, செவ்வாய் 6வது வீட்டில் இருக்க, புதன் 9வது வீட்டில் இருக்க, வியாழன் 12வது வீட்டில் இருக்க, அந்த மனிதன் ஒழுக்கம் மிகுந்த, புகழ்பெற்ற அரசனாக இருப்பார்.
7. சந்திரனும் வியாழனும் தனுசுவில் இருக்க, செவ்வாயனது மகரத்தில் இருக்க, இலக்கினமானது மீனமாகவும், அதில் சுக்கிரன் இருக்க அல்லது கன்னியானது இலக்கினமாகவும், அதில் புதன் இருக்க பிறக்கும் ஒருவர், அரசனாவார்.
மேலும், கன்னி இலக்கினமாகவும், அதில் புதன் இருக்க, செவ்வாயும் சனியும் 5வது வீட்டில் இருக்க, சந்திரனும், வியாழனும், வெள்ளியும் 4வது வீட்டில் இருக்க, பிறக்கும் ஒருவர் அரசான் ஆவார்.
குறிப்பு(நிமித்திகன்):
மேலே
குறிப்பிடப்பட்டவை மிக எளிமையானதாக இருப்பதால், திரு சிதம்பரம் அவர்கள் எவ்வித சிறப்புக்
குறிப்புகளும் எழுதவில்லை. ஆனால் இங்கு மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சனியும்
அரச யோகத்தினைக் கொடுக்கும் என்பதாகும். இதுபற்றி விரிவாகவும் விளக்கங்களுடனும் பின்னர் பார்க்கலாம்.
யோகங்கள் தொடரும்….
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment