Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, February 16, 2015

இராசிகளில் பிரிவுகளும் உட்பிரிவுகளும் - அறிமுகம்




             இதுவரையில் இராசிச் சக்கரத்தில் இராசிகளின் அமைப்பு, அதில் கோள்களின் இட ஒதுக்கீடு என்பனவற்றைப் பார்த்தோம். இனிஇராசிகளை வகைப்படுத்தும் முறையினைப் பார்ப்போம்.

            சோதிட அறிஞர்கள் இராசிகளை பல்வேறு நிலைகளில் வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், அவைகளை விண்ணியல் விதிப்படியோ அல்லது கணித முறைமையிலோ வகைப்படுத்தவில்லை என்பதே உண்மை.

            அதே சமயம் அவைகளைத் தர்க்க வரிசையில் (logical sequence) வரிசைப்படுத்தியுள்ளனர். தர்க்க வரிசையில் வகைப்படுத்தியது சரியா என்பது கேள்விக்குறியதே.

            நிமித்திகன் பதிவினைத் தொடர்ந்து படிப்பவர்களில் சோதிடப் பெருமக்களும் உள்ளனர். ஆய்வறிஞர்களும் உள்ளனர். ஆர்வம் மிக்கவர்களும் உள்ளனர். எதிர்மறையாளர்களும் உள்ளனர். முன்பே கூறியதுபோல் இது ஆய்வு நோக்கில் எழுதப்படும் பதிவு என்பதால் நிறைகளைப் பதிவு செய்யும் அதே வேளையில் சோதிட அமைப்பில் உள்ள குறைகளையும் பதிவு செய்ய வேண்டியக் கடமையில் உள்ளோம்.

            எனவே, பதிவில் இடப்படும் கருத்துக்களில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதனைத் தெரிவித்தால், ஏற்புடையதாயின், பதிவில் நிச்சயம் மாற்றம் செய்யப்படும். ஆய்ந்து தெளிதலே அறிவியல் அல்லவா?

            சரி, இனி இராசிகளின் பிரிவுகளைப் பார்ப்போம்.

            இராசிகள் பல பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் நிலை, தன்மை, வரிசை, காலம், என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், குறிப்பாக கீழ்வரும் வகைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

1.       பிரபஞ்ச அடிப்படை
2.       உயிர்நிலை
3.       பாலினம்
4.       நிலைத் தன்மை
5.       எண் முறை
6.       திசைகள்
7.       பொழுது
8.       வடிவ நிலை
9.       விழித்தல்

இவை மட்டுமின்றி இன்னும் பல பிரிவுகளிலும் இராசிகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவை பற்றி தேவை எழும்போது பார்ப்போம்.


இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்க்கலாம்.


No comments: