‘
அந்த
அனுபவமே நான் தான்’ என்று கடவுள் சொல்வதாக கவியரசு கண்ணதாசன் சொல்வார். கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அனுபவம் என்பது நாம் உணர்ந்ததும், பிறர் உணர்ந்ததும்,
பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான, அறிவியல் எனக் கொள்ளலாம்.
ஆத்திகம்
ஆகட்டும் அல்லது நாத்திகம் ஆகட்டும், அவை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த கோட்டைகள்.
அவை கற்பனைக் கொள்கையாகவும் இருக்கலாம். நமக்கு புரியவில்லை என்பதற்காக மறுக்கவும்
கூடாது, பிறர்க்கு புரியவில்லை என்பதற்காக திணிக்கவும் கூடாது. உங்கள் கருத்துக்களை
ஆதாரங்களுடன் முன் வையுங்கள், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். ஆனால் உங்கள்
கருத்து உடைபடும்போது, எதிராளியின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும்.
உலகில்
எல்லாக் கருத்துக்களும், அறிவியல் கருத்துக்கள் எனத் தீர்மானிக்கப்பட்டவை உட்பட, மாறுதலுக்கு
உட்பட்டே வந்துள்ளன. ஏற்புடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் உலகம் எப்போதும் தயங்கியதில்லை.
தற்போதைய ஹிக்போஸான் துகள் வரை.
தொடரும்….
No comments:
Post a Comment