இது 1930-ம்
ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு சூரியக்
குடும்பத்தின் ஒன்பதாவது
கோள் எனும்
தகுதி கொடுக்கப்பட்டது. புளூட்டோ
ஒரு பனிக்கட்டிக் கோள்.
1977 வாக்கில் நிறைய
பணிக்கட்டிக் குறுங்கோள்கள் நமது
சூரியனைச் சுற்றி
வருவதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள், அவற்றை
ஒப்பு நோக்குகையில், புளூட்டோவும் ஒரு
குறுங்கோள் எனும்
முடிவுக்கு வந்தனர்.
இது சூரிய
சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில்
செல்வதாகவும் உறுதிசெய்ததின் விளைவு,
2006-ல் இதன்
கோள் தகுதியை
நீக்கிவிட்டனர்.
·
புளூட்டோவிற்கு
ஐந்து சந்திரன்கள் உள்ளன.
·
1930-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
·
முதலில் இதற்கு வைக்கப்பட்ட பெயர்
எக்ஸ் கோள்
·
சூரியக்குடும்பத்தின்
ஒன்பதாவது கோள்
(என இருந்தது)
·
சூரிய சுற்றுவட்டப் பாதையை
விட்டு விலகியும்
செல்கிறது.
·
இதன் விட்டம் 2274 கி.மி. சூரியனிலிருந்து 591.35 கோடி
கி.மி.தொலைவில் உள்ளது.
·
இது சூரியனைச் சுற்றிவர
எடுத்துக்கொள்ளும் கால
அளவு 248 ஆண்டுகள்.
·
தனது முழு சுற்றில்
ஒருமுறை இது
நெப்டியூனின் சுற்றுப்
பாதைக்குள் நுழைகிறது.
இருபது ஆண்டுகள்
இருந்துவிட்டு மீண்டும்
விலகி செல்கிறது.
·
தன் சுற்று வட்டப்பாதையை ஆக்கிரமித்து வைத்துக்
கொள்ளவில்லை என்பதாலும் கோள்தகுதியை இழந்துவிட்டதாம்.
·
பொதுவாக நெப்டியூனுக்கு அடுத்த
சுற்றில் வருகிறது.
·
மற்ற கோள்கள் போல்
அல்லாமல், எதிர்
சுற்றில் சுற்றிவருகிறது.
·
பனிக் கோள் என்பதால்
இதன் வெப்ப
நிலை -235 செல்சியஸ்.
·
70% திடப்பொருளும், 30% திரவப்
பொருளும் அமைந்தது.
·
பெருமளவு நைட்ரஜன், சிறிதளவு
மீத்தேன், ஈதேன்,
கரியமிலவாயு.
·
காந்தப்புலம் பற்றிய பதிவுகள்
இல்லை.
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அடுத்து … முன் கதைச் சுருக்கம்