அடுத்து, இராசிகளை
அவைக் கொண்டிருக்கும் கால்களின் எண்ணிக்கையில் வகைப்படுத்தியுள்ளதைக் காண்போம். இதில்
பன்னிரெண்டு இராசிகளையும், அவற்றின் உருவ அமைப்பின் தன்மையினைக் கொண்டு, கால்களின்
எண்ணிக்கையினை வகைப்படுத்தியுள்ளனர்.
இராசிகள்
|
உருவம்
|
கால்கள்
|
இராசிகள்
|
உருவம்
|
கால்கள்
|
மேசம்
|
ஆடு
|
நான்கு
|
துலாம்
|
மனிதன்
|
இரண்டு
|
ரிசபம்
|
எருது
|
நான்கு
|
விருச்சிகம்
|
தேள்
|
பல
|
மிதுனம்
|
இருவர்
|
இரண்டு
|
தனுசு
|
மனிதன்-குதிரை
|
ஆறு
|
கடகம்
|
நண்டு
|
பல
|
மகரம்
|
மீன்
|
ஆறு
|
சிம்மம்
|
சிங்கம்
|
நான்கு
|
கும்பம்
|
ஆண்
|
இரண்டு
|
கன்னி
|
பெண்
|
இரண்டு
|
மீனம்
|
இரு
மீன்கள்
|
பல
|
இங்கு, துலாம் என்பது
தராசு ஏந்திய மனிதன் என்பதும், கும்பம் என்பது குடம் ஏந்திய மனிதன் என்பதும், நினைவில்
கொள்க. அதன் படி அந்தந்த உருவ அமைப்பிற்கேற்ப, அவற்றின் கால்கள் தீர்மானிக்கப் பட்டுள்ளன.
அதே நேரத்தில் மிதுனம் என்பது இரட்டையர் என்பதால், நான்கு கால்கள் என இருக்க வேண்டும்.
ஆனால் இரு கால் இராசி என வகைப்படுத்தியுள்ளனர். மகரமும் மீனமும் மீன் வகையைச் சார்ந்தவை
என்றாலும், முன்னது ஆறு எனவும், பின்னது பல எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இராசிகளின் உருவம்
என்பது, அந்தந்த இராசிகளில் அமைந்துள்ள நட்சத்திரக் கூட்டங்களின் ஒரு வடிவ அமைப்பே
ஆகும். அதாவது, எளிதில் புரிந்துகொள்ளும் பொருட்டும், அடையாளம் காணவும் எற்படுத்தப்பட்ட
அமைப்பே ஆகும். ஆனால், பிற்காலத்தில், அந்த வடிவத்தின் குணாதிசயமே அந்த இராசிக்கும்
இருக்கும் என பலன் சொல்ல பயன் படுத்தப்பட்டது சரியல்ல என்பதே என் முடிவு. அதுவே தான்,
இந்த இராசிகளின் கால்களிலும் உள்ள நிலைமை. எவரேனும் விரிவான ஏற்புடைய விளக்கம் அளித்தால்
நல்லது.
No comments:
Post a Comment