வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - மூன்று (தொடர்ச்சி)
விலங்குகள்
மற்றும் தாவரங்களின் சாதகம்
1. பிறக்கும் நேரத்தில்(1),
அசுபக் கோள்கள்(2) பலம் மிகுந்தும்(3), சுபக் கோள்கள்(4) பலமிழந்தும், இருபாலின(அலி)
கோள்களில்(5) ஒன்று ஏதேனும் ஒரு கேந்திரத்திலும் (கோணம்)(6) அல்லது இலக்கினத் தொடர்புடனும்
இருக்குமானல்; அந்த உயிரினத்தின் பிறப்பானது அச்சமயத்தில் சந்திரன் இருக்கும்(8), குறிப்பிட்ட
துவாதசாம்சத்தால்(7) குறிக்கப்படும்.
குறிப்பு
– திரு சிதம்பரம் அவர்கள்.
(1) அல்லது
கேள்வி எழும் நேரத்தில், உரையாசிரியரின் இணைப்பு
(2) அசுபக்
கோள்கள் – II. 5. குறிப்பிடப்பட்டவாறு
(3) கோள்களின்
வலிமை - II. 19, 20 & 21. குறிப்பிடப்பட்டவாறு
(4) சுபக்
கோள்கள் - II. 5. குறிப்பிடப்பட்டவாறு
(5) இருபாலினக்
(அலி) கோள்கள் - II. 6. குறிப்பிடப்பட்டவாறு
(6) கேந்திரம்
அல்லது கோணம் - I. 17. குறிப்பிடப்பட்டவாறு
(7) துவாதசாம்சம்
- I. 6. குறிப்பிடப்பட்டவாறு
(8) எடுத்துக்காட்டாக,
ஒருவேளை பிறந்த நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் 210-இல், இருப்பதாகக்
கொள்வோம். ஒரு துவதசாம்சம் 2½ பாகைக் கொண்டது என்பதால், சிம்மத்தின் 210 என்பது
சிம்மத்தின் ஒன்பதாவது துவாதசாம்சமாக இருக்கும். சிம்மத்தின் துவாதசாம்சம் சிம்மத்திலிருந்தே
தொடங்கும் என்பதால், ஒன்பதாவது துவாதசாம்சம் மீனம் ஆக இருக்கும். அதன் படி அந்த உயிரினமானது
மீனாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, தளிர்களின் எண்ணிக்கையானது,
சந்திரனால் ஆளப்படும் துவாதசாம்சங்களின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கும்.. இதன்படி,
ஒற்றைப்படை எண்ணிக்கையிலான துவாதசாம்சங்கள் ஆண் பிறப்பையும், இரட்டைப்படை எண்ணிக்கையிலான
துவாதசாம்சங்கள் பிண் பிறப்பையும் குறிக்கும்; பிறப்பிற்குப் பிறகு உடனடியாக அழியக்கூடிய
எண்கள் என்பன, அசுபக் கோள்கள் அல்லது வலிமையற்ற கோள்கள் ஆகியவற்றினால் கொள்ளப்பட்டிருக்கும்
துவாதசாம்ச எண்ணிக்கைகள் ஆகும்.
@வாசிப்பவர்கள், இனிவரும் காலங்களில், முன்னுரையைத்
தொடர்ந்து தொகுக்கப்பட்டுள்ள பார்வைக்குறிய அட்டவணையினைப் பார்த்து வார்த்தைகளுக்குப் பொருள் அறிந்துகொள்ளவும்.
குறிப்பு - நிமித்திகன்
சோதிடம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே என்று
எண்ணிக் கொண்டிருந்த வேளையில், சோதிடத்தின்படி, உயிரினங்கள் உருவாகும், பிறக்கும்,
அழியும் கால நேரங்களையும் அறிய முடியும் என்பதை வராக மிகிரர், பிருகத் ஜாதகாவில் இதற்கெனத்
தனிப்பிரிவு ஒன்றை எழுதி இருப்பது வியப்பிற்குரியதாக இருக்கிறது.
@திரு சிதம்பரம் அவர்கள் தமது மொழியாக்கத்தில்,
சோதிடப் பதங்களுக்கு பொருள் அல்லது விளக்கம் அறிந்து கொள்ள, ஒரு அட்டவணையினை அளித்துள்ளார்.
அதில் எந்த பகுதி – எந்த பத்தி என தொகுத்துள்ளார். அதனை நான் பின்னர் அளிக்கிறேன்.
பகுதி மூன்று – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment