Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, June 16, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-46 – மரங்களின் குணங்கள்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  மூன்று (தொடர்ச்சி)

விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகம்


7.         நவாம்சத்தின் இலக்கினாதிபதி சூரியனாக() இருந்தால், அந்த மரமானது வலிமை மிக்கதாக இருகும்; சனியாக இருந்தால் அந்த மரம் அருவருப்பான ஒன்றாக இருக்கும்; சந்திரனாக இருந்தால் அது ஒரு பால் மரமாக இருக்கும்; செவ்வாயாக இருந்தால் முள் மரமாக இருக்கும்; வியாழனாக இருந்தால் பழ (கனி) மரமாக இருக்கும்; புதனாக இருந்தால் பழமில்லாத மரமாக இருக்கும்; சுக்கிரனாக இருந்தால் பூ மரமாக இருக்கும்; மறுபடியும், சந்திரனாக இருந்தால் எண்ணெய் மரமாக இருக்கும்; செவ்வாயாக இருந்தால் புளிப்பு சுவையுடைய மரமாக இருக்கும்.


குறிப்பு: திரு சிதம்பரம் அய்யர் அவர்கள்

() சென்ற பத்தியில்(6) கொடுக்கப்பட்ட விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.


8.         நவாம்சத்தின் இலக்கினாதிபதி சுபக் கோளாக இருந்து அசுபர் வீட்டில்() இருந்தால், அந்த மரமானது உயர்வகை மரமாக ஆனால் மோசமான இடத்தில் வளரும்; அவ்வாறு இல்லையெனில், அதற்கு நேர்மாறாக இருக்கும்; மரங்களின் எண்ணிக்கையும் நவாம்சத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதாவது நவாம்ச இலக்கினாதிபதி அதனுடைய சொந்த நவாம்சத்திலிருந்து விலகி இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கும்.


குறிப்பு: திரு சிதம்பரம் அய்யர் அவர்கள்

() இதர விதிகள் பத்தி 6-ல் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.

() அதாவது, நவாம்சத்தின் இலக்கினாதிபதி அசுபக்கோளாக இருந்து, சுபர் வீட்டில் இருந்தால், அந்த மரமானது நல்ல நிலத்தில் விளையும் தாழ்ந்த வகையினைச் சார்ந்தாக இருக்கும்.


குறிப்பு: நிமித்திகன்

            இத்துடன் விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதகங்கள் முடிவடைந்துள்ளன. அடுத்து மானிட இனத்தின் சாதக விவரங்கள் தொடர்கின்றன. அதாவது, மிகக் குறைவாக, எட்டு பத்திகளில் மட்டுமே வராக மிகிரர் மானிட இனமில்லாதவற்றின் சோதிட விவரங்களைப் பதிவு செய்துள்ளார். எவரேனும், சாதகம் என்பது மனிதனுக்கு மட்டும்தானா என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலாக, உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் சாதகம்/சோதிடம் உண்டு என்று நிலை நிறுத்தவே, இது பற்றி ஓரளவு தகவல்களைப் பதிவிட்டுள்ளது தெரிய வருகிறது.


பகுதி மூன்றுமுடிவுற்றது


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: