வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - மூன்று (தொடர்ச்சி)
விலங்குகள்
மற்றும் தாவரங்களின் சாதகம்
2. அசுபக் கோள்கள் தங்களுடைய நவாம்சத்திலும்,
பலம் மிகுந்தும் இருந்தால், சுபக் கோள்கள் அவைகளின் நவாம்சத்தில் இல்லாமலும் பலம் குறைந்தும்
இருந்தால், மற்றும் (அதே நேரத்தில்) இலக்கினமானது (உதய இலக்கினம்) மனிதனாக(அ) இல்லாமல்
இருந்தால், அப்பொழுது நிகழும் பிறப்பானது அதற்கு முந்தைய (ஆ) கீழின விலங்காக இருக்கும்.
குறிப்பு
– திரு சிதம்பரம் அவர்கள்.
(அ) உதய இலக்கினமானது
மிதுனம், கன்னி, துலாம், தனுசுவின் இரண்டாம் பகுதி, கும்பம் ஆகியவைத் தவிர்த்து இருந்தால்.
(ஆ) அதாவது, அந்த உயிரினமானது, சந்திரனால் ஆளப்படும் துவாதசாம்சத்தால்
குறிக்கப்படும்.
3. நான்கு கால் உயிரினங்கள் எனும்பொழுது, மேசம் தலை;
ரிசபம் முகம், கழுத்து; மிதுனம் முன்கால்கள், தோள்பட்டை; கடகம் பின்புறம்; சிம்மம்
மார்பு; கன்னி பக்கங்கள்; துலாம் அடிவயிறு; விருச்சிகம் குதம்; தனுசு முழங்கால்கள்;
மகரம் உயிர் உறுப்பு அல்லது விதைகள்; கும்பம் பின்தொடைகள்; மீனம் வால் என இருக்கும்.
குறிப்பு
– திரு சிதம்பரம் அவர்கள்.
பறவைகள் எனும் பொழுது, இறக்கைகள் என்பவை முன்கால்கள் எனக் கொள்ளவேண்டும்.
இந்த பத்தியின் மூலம் நம்மால் உயிரினத்தின் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வண்ணம்
அல்லது அடையாளங்களை உறுதி செய்ய முடியும்.
பகுதி மூன்று – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment