Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, September 9, 2015

பிருகத் ஜாதகா – 54 – பிறப்பின் நேரம்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  நான்கு

கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்

21.        அக்குறிப்பிட்ட நேரத்தில்(1) இராசிமண்டலத்தின் எந்த இராசியிலிருந்தும் சந்திரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட துவாதசாம்களின் எண்ணிக்கையினைக் கணக்கில் கொள்ளுங்கள். துவாதசாம்சம் கொண்டுள்ள இராசிகளின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த இராசியிலிருந்து, எந்த குறிப்பிட்ட இராசியிலிருந்து சந்திரன் முன்னேறி இருக்கிறதோ, அதுவரையில் உள்ள துவாதசாம்களின் எண்ணிக்கையினை கணக்கில் கொள்ளுங்கள்அத்தகைய கடைசி இராசிக்கு சந்திரன் வரும்போது, குழந்தையின் பிறப்பு நிகழும்.

அடுத்து, அந்த நேரத்தில் உதய நவாம்சம், பகல் அல்லது இரவு நவாம்சமாக இருந்தால், அதற்கேற்றவாறு பிறப்பானது பகல் அல்லது இரவாக இருக்கும். உதய நேரத்தில் உதய நவாம்சம் கொண்டிருக்கும் கால அளவிற்கேற்ப பிறப்பானது, சூரிய உதயம் அல்லது சூரியன் மறைவு நேரத்தில் இருக்கும்.



குறிப்பு (திரு சிதம்பரம்):

(1)    உரையாசிரியரின் கருத்துப்படி, கரு உருவாகும் நேரம் அல்லது கேள்வி கேட்கும் நேரம்.
இந்த பத்தியில், குழந்தை பிறக்கும் நேரத்தினை, கரு உண்டாகிய நேரம் அல்லது கேள்வி கேட்கும் நேரத்தினைக் கொண்டு அறிய முயல்கிறார். சந்திரனானது, 8வது துவாதசாம்சமான கும்பத்தில் இருப்பதாகக் கொள்வோம். இந்த துவாதசாம்சமானது, கன்னியின் துவாதசாம்சமாகும். இராசியில் கன்னிக்கு அடுத்த வீடு துலாமாகும். சந்திரன் 8வது துவாதசாம்சமான கும்பத்தில் இருக்க, துலாத்தின் 8வது வீடு ரிசபம். அதன்படி, சந்திரன் ரிசபத்தினைக் கடக்கும்போது குழந்தை பிறக்கும்.

உரையாசிரியர் மேலும் கூறுவதாவது, பிறக்கும் நேரத்தில் சந்திரன் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இருப்பதனைக் கண்டறிய முடியும், அதாவது அது இருக்கும் குறிப்பிட்ட துவாதசாம்சத்திலிருந்து எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதனைக் கொண்டு என்கிறார். உதாரணமாக, சந்திரன் 8வது துவாதசாம்சமான கும்பத்தின் மத்தியில் இருப்பதாகக் கொள்வோம். அப்போது ரிசபத்தின் மத்தியில் உள்ளது 2ம் பாகமான நட்சத்திரம் ரோகிணி; ஆகவே, குழந்தை பிறக்கும் நேரமானது சந்திரன் ரோகிணியின் இரண்டாம் பாதத்தில் வரும்போது நிகழும்.

அடுத்து, உதய நவாம்சம், உதாரணமாக, இரவு இராசியான தனுசில் இருக்க, பிறப்பானது இரவில் இருக்கும். சூரியன் மறைவிலிருந்து பிறக்கும் நேரத்தினைக் கணிப்பதற்கு, தனுசின் நவாம்சம் உதயத்திலிருந்து எவ்வளவு கடந்துள்ளது எனும் கணக்கின் விகிதாச்சாரப்படி கணக்கிட வேண்டும்அதாவது அந்த முழு இரவில் நவாம்சம் கடந்துள்ள தூரத்தினைக் கணக்கிட வேண்டும்.

பிறப்பின் பாலினத்தை பத்தி 11 முதல் 15 வரை கூறியதைக் கொண்டு அறிய வேண்டும்.


22.        கரு உண்டான நேரத்தில், சனியின் நவாம்சம்(1) உதயமாக, சனியானது உதய இராசியிலிருந்து ஏழாவது வீட்டில் இருக்க, மூன்றாண்டுகள் கழித்து குழந்தை பிறக்கும்; அதே வகையில், அது சந்திரனாக(2) இருந்தால் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து பிறக்கும்.
 இந்த பகுதியில் கூறப்பட்ட பல்வேறு யோகங்கள்(3), அந்த யோகங்களின் தன்மைக்கேற்ப அது பிறப்பின் நேரத்திற்கும் பொருந்தும்.



குறிப்பு (திரு சிதம்பரம்):

(1)    அவை மகரம் மற்றும் கும்ப நவாம்சம் ஆகும்
(2)    கடகத்தின் நவாம்சம் உதயமாக, சந்திரன் உதய இராசியிலிருந்து ஏழாம் வீட்டில் இருந்தால்.
(3)    உதாரணமாக, குழந்தையானது அதிக அல்லது குறை உறுப்புகளுடன் பிறப்பதற்குறிய யோகங்கள் பிறக்கும் நேரம் அல்லது கரு உண்டாகும் நேரம் ஆகியவற்றிற்கும் பொருந்தும். கரு கலைவதற்கு உரிய அத்தகைய யோகங்கள், கரு உண்டாகும் நேரத்திற்கு மட்டும் பொருந்தும்.


பகுதி நான்குநிறைவு
பகுதி ஐந்து பின்னர் தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: