வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - நான்கு
கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்
18. சனியும் செவ்வாயும், புதனின் வீட்டிலோ அல்லது அதன் நவாம்சத்திலோ(1) இருந்தால், அப்போது பிறக்கும் குழந்தை பல் முளைத்து பிறக்கும்; கடகம் உதய இராசியாக இருந்து, அதில் சந்திரன் இருந்து, சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால், அக்குழந்தயானது கூனாக பிறக்கும்; மீனம் உதய இராசியாக இருந்து அது சனி, சந்திரன், செவ்வாய் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்தால் அக்குழந்தை முடமாகப் பிறக்கும். ஒரு அசுபக் கோளும்(2), சந்திரனும், ஏதேனும் ஒரு கடைசி நவாம்சமான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ஒன்றில் இருந்தால், அக்குழந்தை செவிடாகப் பிறக்கும். மேற்சொன்ன யோகங்கள் அனைத்தும் பிறக் கோள்கள் சுபக் கோள்களுடன்(3) தொடர்பில் இல்லாத நிலையில் மட்டுமே செயல்படும்.
குறிப்பு (திரு சிதம்பரம்):
(1) வேறு சில உரையாசிரியர்கள் கருத்துப்படி, அல்லது இரண்டு இராசிகளும் அதன் நவாம்சங்களும்.
(2) சூரியன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கோள்களில் ஒன்று.
(3) அதன்படி, கோள்கள் பலமிகுந்த கோள்களுடன் தொடர்பில் இருந்தால், இது நிகழாது.
19. கடைசி நவாம்சமான மகரம் உதயமாக, அது சனி, சந்திரன், சூரியன் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பானது குள்ளமாக இருக்கும். செவ்வாயானது, உதய திரேக்கானத்திலோ அல்லது ஐந்தாம் வீட்டிற்கு அல்லது ஒன்பதாம் வீட்டிற்கு(1) உரிய திரேக்கானத்திலோ இருந்தால், செவ்வாயானது சூரியன், சந்திரன், சனி ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பானது, முறையே, தலை இல்லாமல், கைகள் இல்லாமல் அல்லது கால்கள் இல்லாமல் பிறக்கும்.
குறிப்பு (திரு சிதம்பரம்):
(1) வேறு சில உரையாசிரியர்கள், இப்பத்தியினை வேறு வகையில் கூறுகிறார்கள்: செவ்வாயானது உதய இராசிக்கு, 1வது அல்லது 2வது அல்லது 3வது ஆகியவற்றின் திரேக்கானத்தில் இருந்தால். இது காரகரின் கருத்திற்கு முரணானது.
20. சிம்மம் உதய இராசியாக இருந்து, அதில் சூரியன், சந்திரன் ஆகியவை இருக்க, மேலும் செவ்வாய் சனி ஆகியவற்றின் தொடர்பில் இருந்தால், அப்பிறப்பின் குழந்தை குருடாக(1) இருக்கும்; மேற்படி நிலையில், சுபக் கோள்கள் உதய இராசியுடன் தொடர்பில் இருக்க, அக்குழந்தையானது கண்களில் புள்ளிகளுடன் பிறக்கும். சந்திரன் அல்லது சூரியன், உதய இராசியிலிருந்து(2) 12வது வீட்டில் இருக்க, அக்குழந்தை, முறையே இடது அல்லது வலது கண் குருடாகப் பிறக்கும்(3).
ஒவ்வொரு யோகமும் சுபக் கோள்களுடன் தொடர்பில் இருந்தால், மேலே(4) கூறிய யோகங்கள் முழுமையாக செயல்படாது.
குறிப்பு (திரு சிதம்பரம்):
1. உரையாசிரியரின் கருத்துப்படி, சூரியன் மட்டும் சிம்மத்தில் இருந்தால், அது செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பில் இருந்தால், அக்குழந்தை வலது கண் குருடாகப் பிறக்கும்; சந்திரன் மட்டும் சிம்மத்தில் இருக்க, அது செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பில் இருந்தால், அக்குழந்தை இடது கண் குருடாகப் பிறக்கும்.
2. அது நிஷேக காலம்(கரு உண்டாகிய நேரம்) அல்லது பிறக்கும் நேரம்.
3. உரையாசிரியர் சுபோதினியின் கருத்துப்படி, அதே வேளையில், சூரியன் அல்லது சந்திரனானது, செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
4. அதாவது பத்தி-17லிருந்து இந்த பத்தி வரையில்.
பகுதி நான்கு – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment