அடுத்து வியாழன் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள வலிமை
அல்லது திறனைப் பார்ப்போம்.
ஆட்சி:
வியாழனுக்கு, பூமிமையக் கொள்கைப்படி செவ்வாய் இருக்கும் மேசத்திற்கு
அடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு மீனம் ஆகும். அதேபோல், சூரியமையக் கொள்கைப்படி
செவ்வாய் இருக்கும் விருச்சிகத்திற்கு அடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு தனுசு ஆகும்.
எனவே, வியாழனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு வீடுகளும்
அதன் ஆட்சி வீடுகளாகும்.
மூலத்திரிகோணம்:
மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க
வேண்டும் என பார்த்தோம்.
1. அக் கோளிற்கு
சொந்த வீடாக இருக்க வேண்டும்
2. அந்த
வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில்
இருக்க வேண்டும்.
4. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக்
கூடாது
5. ஐந்து
மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
மேற்கூறிய விதிகள், தனுசு மற்றும் மீனத்திற்கு பொருத்திப் பார்ப்போம்
தனுசு –
(1) அதன் சொந்த வீடு (2) தனுசு இராசியில் எந்த ஒரு கோளும் உச்சம்
பெறவில்லை. இங்கு இரண்டாவது விதி பொருந்த வில்லை. இருப்பினும் மிகச் சிறப்பான
ஒரு நிலை என்னவென்றால், தனுசுவில் எந்த ஒரு கோளும் பகையோ அல்லது நீச்சமோ பெறுவதில்லை
(3) தனுசுவிற்கு இரண்டாவது வீடான மகரத்தில்
வியாழன் நீச்ச நிலை, 12-வது வீடான விருச்சிகத்தில் நட்பு. இங்கும் மூன்றாவது விதியான
திரிகோண வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் நட்பாக இருக்க வேண்டும் என்பதில்
இரண்டாவது வீடான மகரத்தில் வியாழன் நீச்ச நிலையில் உள்ளது (4) முன்னும் பின்னும் உள்ள
வீடுகள் பகை இல்லை. (5) இரண்டாவது கோணமான 5-ம் வீடு மேசம் என்பது நட்பு வீடாகும். மூன்றாவது
கோணமான 9-ம் வீடு சிம்மம் என்பதும் நட்பு வீடாகும்.
மீனம்:
(1) அதன் சொந்த வீடு (2) மீனத்தில் வெள்ளி எனும் சுக்கிரன் உச்சம்
(3) மீனத்திற்கு 2-வது வீடான மேசமும், 12-வது
வீடான கும்பமும் நட்பு அல்லது சமம் வீடுகள் (4) எனவே முன்னும் பின்னும் உள்ள வீடுகள்
பகை இல்லை. (5) இரண்டாவது கோணமான 5-ம் வீடு கடகம். அங்கு வியாழன் உச்சம் அடைகிறது.
மூன்றாவது கோணமான 9-ம் வீடு விருச்சிகம் என்பதில் நட்பு.
ஆக, மேற்சொன்ன விதிமுறைகளில், தனுசுவைக் காட்டிலும்
அனைத்தும் பொருந்திவருவது மீனம்தான். எனவே, மீனம்தான் மூலத்திரிகோண வீடாக இருக்க
வேண்டும். ஆனால், சோதிட நூல்கள் தனுசுவை மூலத் திரிகோண வீடாக குறிப்பிடுகின்றன. இருக்கும் பன்னிரெண்டு வீடுகளில் எந்த ஒரு கோளும் உச்சமோ,
நீச்சமோ அல்லது பகையோ பெறாத நிலை என்பது தனுசு இராசிக்கு மட்டுமே இருக்கிறது எனும்
சிறப்பு விதி காரணமாக இருக்கலாம். வேறு ஏதேனும் ஏற்புடைய காரணம் இருந்தால் தெரிவியுங்கள்.
திருத்தம் மேற்கொள்ளப்படும். சோதிட நூல்களின் குறிப்பின்படி வியாழன் தனது இராசியான
தனுசுவில் 0-பாகை முதல் 10-பாகைவரையில் மூலத்திரிகோண நிலையில் இருக்கிறது.
உச்சம்:
உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சென்ற பதிவில் வடநகர்வு(உத்திராயணம்)
மற்றும் தென் நகர்வு(தட்சினாயணம்) பற்றியும் அவைகளின் சிறப்பு காரணமாக வடநகர்வு தொடக்கமான
மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைவதைப் பதிவு செய்தோம். அதேபோல், தென் நகர்வின் தொடக்கமான
கடகத்தில் வியாழன் உச்சம் அடைகிறது. அதாவது, சூரியன் மேசத்தில் உச்சம் அடையும் நிலையில்,
துலாத்தில் நீச்சம் அடையும் நிலை உள்ளது. இவை இரண்டிற்கு இடையே உள்ள 90-பாகை என்பது
வடக்கே மகரமாகவும், தெற்கே கடகமாகவும் உள்ளது. அதாவது, சூரியனின் கதிர்கள் மிதமான அளவில்
இருக்கும் இக்காலக்கட்டத்தில், மிக அதிக அளவில் வெப்பம் அல்லது கதிர்வீச்சினை செலுத்தக்
கூடிய வாய்ப்பு செவ்வாய்க்கு மகரத்திலும், வியாழனுக்கு கடகத்திலும் உள்ளது. மேலும்
செவ்வாயானது கடகத்தில் நீச்சமாக உள்ள நிலையில், வியாழன் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தக்
கூடிய இடமாக கடகம் இருக்கிறது. எனவே, வியாழன் கடகத்தில் உச்சம் அடைகிறது என்பது ஏற்புடையதே.
அதாவது 0-பாகை முதல் 5-பாகை வரையில் உச்ச நிலையினை அடைகிறது.
நீச்சம்:
நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில்
இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில்
வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரானதும் வட நகர்வின் (உத்திராயணம்)
தொடக்கமும் ஆன வீடானது மகர இராசி ஆகும். எனவே மகரத்தில் 0-பாகை முதல் 5-பாகை வரையில்
வியாழன் நீச்சமாக இருக்கம் நிலை உள்ளது.
நட்பு,
சமம், பகை:
ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும்
இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து,
2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும்
என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு 2-மகரம்(சனி), 4-மீனம்(வியாழன்), 5-மேசம்(செவ்வாய்),
8-கடகம்(சந்திரன்), 9-சிம்மம்(சூரியன்), 12-விருச்சிகம்(செவ்வாய்) என உள்ளது. இதில்
மகரத்தில்-நீச்சம், மீனம்-ஆட்சி, கடகம்-உச்சம் என இருப்பதை விலக்கிவிட்டால், மேசம்,
சிம்மம், விருச்சிகம் ஆகியவை நட்பு வீடுகள்.
அடுத்து, பகை எனும்போது, 3-கும்பம்(சனி), 6-ரிசபம்(வெள்ளி),
7-மிதுனம்(புதன்), 10-கன்னி(புதன்), 11-துலாம்(வெள்ளி) என உள்ளது. இதில், மகரம்(சனி)
வியாழனுக்கு நீச்ச வீடாக இருந்தாலும், மூலத் திரிகோனத்திற்கு 2வது வீடு நட்பு எனும்
நிலையில் இருப்பதை கவனத்தில் கொண்டால், 3-வது வீடான கும்பம்(சனி) பகை எனக் கொள்வது
இயலாது என்பதால், சமம் எனக் கொள்வதே முறை. எனவே, வியாழனுக்கு பகை வீடுகள் என்பது ரிசபம்,
மிதுனம், கன்னி, துலாம் ஆகும். சமம் என்பது கும்பம் மட்டுமே.
இங்கு வரயறை செய்த வகையில் இராசிகளில் வியாழனின் வலிமை அல்லது
நிலை
கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே
உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.
கோள்களுக்கிடையேயான உறவுகள்:
கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக்
கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல்
முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள்
எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள்
பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. வியாழனுக்கு நட்பு கோள்கள்: செவ்வாய், சந்திரன்,
சூரியன்; சமக் கோள்: சனி; பகைக் கோள்கள்: வெள்ளி, புதன் ஆகும்.
மேல் கூறியவற்றின் அடிப்படையில் வியாழனின் வலிமை அல்லது நிலை
பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.
மேசம்
|
நட்பு
|
துலாம்
|
பகை
|
ரிசபம்
|
பகை
|
விருச்சிகம்
|
நட்பு
|
மிதுனம்
|
பகை
|
தனுசு
|
ஆட்சி
(0-10)
|
கடகம்
|
உச்சம்
(0-5)
|
மகரம்
|
நீச்சம்
(0-5)
|
சிம்மம்
|
நட்பு
|
கும்பம்
|
சமம்
|
கன்னி
|
பகை
|
மீனம்
|
ஆட்சி
|
கோள்களுடன் உறவு நிலை
நட்பு
|
சமம்
|
பகை
|
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
|
சனி
|
புதன்
வெள்ளி
|
அடுத்து
.. சனியின் நிலை
No comments:
Post a Comment