வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
இறப்பு நிலை ….தொடர்கிறது
13. ஒருவர்
பிறக்கும் நேரத்தில், உதய திரேக்காணத்திலிருந்து 22வது திரேக்காணம் நெருப்பு திரேக்கானமாக
இருந்தால்(1), இறப்பிற்குப் பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். 22வது
திரேக்கானம் நீர் திரேக்கானமாக இருந்தால்(2) அவரது உடல் தண்ணீரில் எறியப்படும். அத்தகைய
திரேக்கானம் இதர வகையாக [‘மிஸ்ர’](3) இருந்தால், அவரது உடல் எரிக்கவும்படாது நீரிலும்
எறியப்படாது, ஆனால் அது காய்ந்து போகும் வகையில் எறியப்படும். 8வது வீடு சர்ப்ப திரேக்கானமாக(4) இருந்தால், அந்த
உடல் நாய், நரிகள், காகங்கள் போன்றவற்றிற்கு இரையாக்கப்படும். இறப்பிற்கு பிறகு உடல்
அடையும் மாற்றங்கள் இவ்வாறாகும் என குறிப்பிடப்படுகிறது. ஒருவரின் முந்தைய மற்றும்
எதிர்கால நிலையியனை அறிந்துகொள்ள சாதகக் கல்வியின் உயர்நிலையைக் கற்று, தேர்தல் வேண்டும்.
குறிப்புகள்:
(1) நெருப்பு
திரேக்கானம் என்பது அசுபக்கோள்களின் திரேக்கானமாகும்.
(2) நீர்
திரேக்கானம் என்பது சுபக் கோள்களின் திரேக்கானமாகும்
(3) மிஸ்ர
திரேக்கானம் என்பது ஒரு சுபக் கோளிற்கு உரிய திரேக்கானத்தில் அசுபக் கோள்கள் இருப்பது
அல்லது அசுபக்கோளிற்கு உரிய திரேக்கானத்தில் சுபக்கோள்கள் இருப்பது.
(4) சர்ப்ப
திரேக்கானம் என்பது – கடகத்தின் 1வது 2வது திரேக்கானங்கள், விருச்சிகத்தின் 1வது 2வது
திரேக்கானங்கள், மீனத்தின் 3வது திரேக்கானங்கள். சுபோதினியின் கூற்றுப்படி, “வியல வர்கா”
என்பது வியல (சர்ப்பம்), கிரித்ர (கழுகு), கோல(காட்டுபன்றி) திரேக்கானங்கள் போன்றவையாகும்.
……….
இறப்பு நிலை தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment