வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
இறப்பு நிலை ….தொடர்கிறது
4. ஒருவர்
பிறக்கும் நேரத்தில், 5வது அல்லது 9வது வீட்டில் இரண்டு தீயக்கோள்கள் இருக்க, அவை சுபக்
கோள்களால் பார்க்கப்படாமல் இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது, சிறையில் அடைக்கப்பட்டு
அல்லது இதர முறையில் அடைக்கப்பட்டு நிகழும். உதய இராசியிலிருந்து 8வது வீடானது சர்ப்ப
அல்லது பாச அல்லது நிகல திரேக்காணமாக(1) இருந்தாலும் இறப்பானது சிறையில் அல்லது இதர
முறையில் அடைக்கப்பட்டு நிகழும். உதய இராசியிலிருந்து கன்னியானது 7வது வீடாக இருக்க
அதில் சந்திரன் மற்றொரு சுபக் கோளுடன் இருக்க, சுக்கிரன் மேசத்திலும், சூரியன் உதய
இராசியிலும் இருந்தால், அந்த மனிதர் தனது சொந்த வீட்டிலேயே இறப்பதுடன், அத்தகைய இறப்பானது
ஒரு பெண்ணால் நிகழும்.
குறிப்பு
(1) : பகுதி-23, பத்தி 16 மற்றும் பகுதி 21 பத்தி 6-ன் படி.
5. ஒருவர் பிறக்கும் நேரத்தில், [1] உதய இராசியிலிருந்து
4வது வீட்டில் செவ்வாய் அல்லது சூரியன் இருக்க, 10வது வீட்டில் சனி இருக்க அல்லது;
[2] சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் ஆகியவை இலக்கினத்தில், 5வது மற்றும்
9வது வீடுகளில் இருக்க அல்லது [3] சூரியன் 4வது வீட்டில் இருக்க, செவ்வாய் 10வது வீட்டில் இருந்து, தேய்பிறைச் சந்திரனால் பார்க்கப்பட, ஆகிய
இத்தகைய நிலைகளில் இருந்தால், அந்த மனிதரின் இறப்பானது, மேற்சொன்ன ஒவ்வொரு வகைக்கேற்ப,
கூர்மையான ஈட்டியால் குத்தப்பட்டு நிகழும். மேலும், சூரியன் 4வது வீட்டில் இருந்து,
10வது வீட்டில் செவ்வாய் இருக்க, அது சனியால்
பார்க்கப்பட்டால், அந்த மனிதர் ஒரு மரக்கட்டையால் தாக்கப்பட்டு இறப்பார்.
……….
இறப்பு நிலை தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment