2. பத்ர
மகா புருச யோகம் – புதனின் தொடர்பு
புதன், இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர
வீடுகளான (கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது புதனின் ஆட்சி அல்லது
உச்ச வீடுகளாக இருந்தால், அது பத்ர மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு
சொல்வதென்றால், புதனானது மிதுனம் அல்லது கன்னியில் இருக்க வேண்டும். அந்த வீடானது இலக்கினம்
அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.

மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் பத்ர மகா யோக அமைப்பு உடையவைதான்.
ஆனால், 5-வது எடுத்துக்காட்டில், புதன் சந்திரனுக்கு 4-ல் இருந்தாலும், இலக்கினத்திற்கு
8-ல் உள்ளதையும், 6-வது எடுத்துக்காட்டில், புதன் சந்திரனுக்கு 7-ல் உள்ளதையும், இலக்கினத்திற்கு
6-ல் உள்ளதையும் கவனிக்க வேண்டும். அதாவது, இங்கு பத்ர மகா யோக அமைப்பினைச் சந்திரன்
கொடுக்க முயன்றாலும், இலக்கினத்திற்கு மறைவில் (8, 6) இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
குறிப்பாக 6வது எடுத்துக்காட்டில், புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய நிலையில்
சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும், இலக்கினத்திற்கு 6-ல் இருப்பது பத்ர மகா யோக
பலன்களை முழுமையாக வழங்காது என்பதே உண்மை. அதே வேளையில், புதனின் மறைவானது, மறைந்த
புதன் நிறைந்த கல்வி எனும் நிலையினை வழங்கும். ஆக முன்பே கூறியபடி, யோக அமைப்பினைக்
கவனிக்கும்போது பிற நிலைகளையும் கவனிக்க வேண்டும்.
பத்ர மகா யோகத்தின் பலன்கள்:
1. நீண்ட
ஆயுள்
2. புத்திக்
கூர்மை
3. பெரியோரின்
பாராட்டு
4. செல்வ
நிலை
5. தலைமைப்
பண்பு
6. தர்ம
சிந்தனை
பஞ்ச
மகா யோகங்கள் தொடரும்.