ஒரே
இராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் – விளக்கம்
சோதிடம்
என்பது permutation and combination மற்றும் probability அடிப்படையில் கணிக்கப்பெறுவது.
ஒரு
சாதகக் கட்டங்களில் இருக்கும் கோள்களின் நிலைபோல் மீண்டும் அதேபோல், இருப்பதற்குரிய நிகழ்தகவு
(probability) அதாவது இரண்டு சாதகங்கள் ஒன்றுபோல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன
தெரியுமா, ஏறக்குறைய 1/53,00,00,000 ஆகும். அதாவது 53 கோடி சாதகத்தில் ஒரு சாதகம் ஒன்றுபோல்
இருக்கக்கூடும்.(இதுபற்றிய விரிவான விவரங்கள் நிமித்திகனின் பிருகத் சாதகம் தொகுப்பினில்
காணவும்).
தற்போது
விவாதப் பொருளாய் இருக்கும் ஒரே இராசியில் ஆறு கோள்கள் என்பது 25.12.2019 முதல்
27.12.2019 வரையிலான கால அளவில் இருக்கும் நிலையில், சோதிட பலன் குறித்து பல்வேறு அறிஞர்கள்
பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், பொதுவான கருத்தாக, இந்த அமைப்பு அனைத்து இராசிகளுக்கும்
அவ்வளவு நல்லதல்ல என்பதாகவே பதியப்பட்டு வருகின்றன.
இந்த
குறிப்பிட்ட நாட்களில் இராசிக் கட்ட அமைப்பு இருக்கும் நிலையானது (திருக்கணித அடிப்படையில்):
இராகு
|
|||
இராசி
|
|||
சுக்கிரன்
|
|||
சனி
புதன்
குரு
சூரியன்
சந்திரன்
கேது
|
செவ்வாய்
|
மேற்கண்ட
அமைப்பில் கோள்கள் வரும் நிலையில், 12 இராசிக்காரர்களும் பாதிப்படைவார்கள் எனக் கூறினால்
பின்பு யார்தான் பலன் அடைவார்கள்? அல்லது இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்களா?
இது
சற்று மிகைப்படுத்தப்பட்டக் கணிப்பு என்பதே எனது கருத்தாகும்.
முதலில்
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு
சாதகத்தின் பலன் என்பது, 50-60 சதவீதம் பிறப்பு சாதக அமைப்பினாலும், 20-30 சதவீதம்
தசாபுத்தி பலன்களைச் சார்ந்தும், மீதமுள்ள 10-20 சதவீதம் மட்டுமே கோச்சார பலன் எனப்படும்
சந்திர இராசியினாலும் அமையும். அதாவது, தற்போது பேசப்படும் அல்லது பதிவிடப்படும் இராசிபலன்கள்
என்பது 10-20 சதவீதம் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். இது அனைத்து அறிவார்ந்த சோதிடர்களுக்கும்
தெரியும் என்றாலும், தற்போதைய வணிகச் சந்தையில் மக்களைக் கவர்வதற்காக இராசிபலனை வெளியிட்டு
வருகிறார்கள்.
ஒருவரின்
பிறப்பு சாதகமும், தசாபுத்தியும் நல்ல நிலையில் அமைந்திருந்தால், எவ்வித கோச்சார பலனும்,
அதாவது, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி ஆகியற்றால் ஏற்படக்கூடிய
எவ்வித தீய தாக்கமும் ஒன்றும் செய்துவிட முடியாது. அதுபோலவே எவ்வித நல்ல தாக்கமும்,
அடிப்படை சாதக அமைப்பு கெட்டிருந்தால், அதன் பலன் கிடைப்பதும் கடினம்.
ஆக,
தற்போது பேசப்பட்டுவரும் ஆறு கோள்களின் சேர்க்கை என்பது அவரவர் சாதக அமைப்பினைப் பொறுத்தே
நல்ல/தீய பலன்களைக் அளிக்கக்கூடும். இதுபற்றி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சோதிட
பலனிற்காக பரிகாரம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஏனெனில் அது மனம் சார்ந்த
செயல். சோதிடத்திற்கும் பரிகாரத்திற்கும் தொடர்பில்லை என்பதே என் தீர்க்கமான முடிவு.
அடுத்து,
ஒரு கேள்வி எழக்கூடும். அடிப்படை சாதக அமைப்பிலேயே ஒரு வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட
கோள்கள் இருந்தால், குறிப்பாக 25-12-19 முதல் 27-12-19 வரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு
சாதக அமைப்பு எப்படி இருக்கக் கூடும். ஒரே வீட்டில் ஆறு கோள்கள் இருக்கும் நிலையில்
பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் எனும் வினா எழும்.
இதுபற்றி
சோதிட நூல்கள் – பிருகத் சாதகம், சாதக பாரிசாதம், இன்னும் பிற, என்ன கூறியுள்ளன என்பதன்
தொகுப்பினைக் காண்போம்.
ஒரே வீட்டில்
|
பிற வீடுகளில்
|
பலன்
|
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், இராகு
(அ) கேது
|
சனி,
இராகு (அ) கேது
|
காடுகளிலும் மலைகளிலும்
வசிப்பார். மனைவி குழந்தை உண்டு, சொத்துக்கள் உண்டு, அறிவியல் நூல்கள் எழுதுவார்
|
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு (அ)
கேது
|
சுக்கிரன்,
இராகு (அ) கேது
|
திருட்டுத் தொழில், பெண்களின்
மீது இச்சை, உறவினரால் வெறுக்கப்படுதல், முட்டாள், குழந்தையின்மை, வெளிநாட்டில் சுற்றுதல்
|
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, இராகு
(அ) கேது
|
குரு,
இராகு (அ) கேது
|
தாழ்ந்த பிறப்பு, அடிமைத்
தொழில், குடிப்பழக்கம், பிறரால் வெறுக்கப்படுதல்
|
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு, சனி, இராகு
(அ) கேது
|
புதன்,
இராகு (அ) கேது
|
அமைச்சர் பதவி, மனைவி
மக்கள் அமைதல், சொத்து சுகம்
|
சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், குரு, சனி, இராகு (அ)
கேது
|
செவ்வாய்,
இராகு (அ) கேது
|
தலைவலி, மனநிலை பிறழ்தல்,
மக்கள் வசிக்காத இடங்களில் வாழ்தல், வெளிநாட்டில் சுற்றுதல்
|
சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு (அ)
கேது
|
சந்திரன்,
இராகு (அ) கேது
|
அறிவார்ந்த சுற்றுப்பயணம்,
அறிவாளி
|
சுக்கிரன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு
(அ) கேது
|
சூரியன்,
இராகு (அ) கேது
|
வசதிமிக்கவர், ஆன்மீக
பயனம் மேற்கொள்பவர்
|
ஆனால்,
பொதுவான கருத்து என்னெவெனில், ஒரு சாதகத்தில் ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள்
இருந்தால், அதாவது ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் இருந்தால் அந்த சாதகர், பிச்சைக்காரனாகவும்,
காடு மேடுகளில் சுற்றுபவனாகவும் இருப்பார். இது எப்போதும் உண்மையா?
இவ்வாறு
அமைப்புள்ள சாதகத்தில் பிறந்த ஒருவரின் சாதகத்தினைத் தற்போது பார்க்கலாம்.
ஒரே
வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் இருக்கும் நிலை என்பது 57 ஆண்டுகளுக்கு முன்பு,
அதாவது 1962-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 1 – 3 ஆகிய நாட்களில் நிகழ்ந்துள்ளது.
நாம்
இங்கு 01-02-1962-ல் பிறந்த ஒருவரின் சாதகத்தினை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.
செவ்வாய்
|
சனி
|
சூரியன்
|
||||||
இராசி
|
இராகு
|
இராகு
சந்திரன்
|
அம்சம்
|
சுக்கிரன்
|
||||
செவ்வாய்
சனி
சூரியன் (புதன்) சுக்கிரன்
கேது
|
கேது
குரு
|
|||||||
இலக்கினம்
|
சந்திரன்
|
இலக்கினம்
|
(புதன்)
|
தனுசு
இலக்கினம், விருச்சிக இராசி. 12-ம் வீட்டில் சந்திரன், இராகு தவிர்த்து அனைத்து கோள்களும் உள்ளன.
சுருக்க ஆய்வு:
தனுசு
இலக்கினம். முன்னும் பின்னும் பாவக் கோள்கள் – பாவகர்த்தாரி தோசம் – உயிர் பிழைக்கும்
வாய்ப்பு குறைவு
சந்திரன்
– 12-ல் நீச்சம் – தாயின் ஆதரவு அற்ற நிலை
குரு
– 2-ல் நீச்சம் – அறிவில் குறைபாடு, செல்வ நிலையில் ஏழ்மை
செவ்வாய்
– 2-ல் உச்சம் – கோபம் கொப்பளிக்கும்
சனி
– 2ல் - வறுமை
புதன்
– 2-ல் வக்கிரம் – கல்வியில் குறைபாடு, பேச்சுக் குறைபாடு
சூரியன்
– 2-ல் பிற கோள்கள் அஸ்தங்கம் – பிறகோள்கள் கொடுக்கும் பலன்கள் கெடும்
ஏழு
கோள்கள் – 2-ல் - கோள்கள் யுத்தம் - பிறகோள்கள் கொடுக்கும் பலன்கள் கெடும்
இராகு
– 8-ல் – உடற்பிணி, வம்பு வழக்குகள், ஆயுள் குறைபாடு
ஏழு
கோள்கள் ஒரே வீட்டில் – பிச்சைக்காரர், காடு மேடுகளில் சுற்றுபவர்.
ஆக,
இந்த சாதகம் சிறப்பான சாதகம் இல்லை என்பதுடன், மிக மோசமான சாதகம் என்றும் கூறலாம்.
செவ்வாய் மட்டுமே உச்சம் என்றாலும், இரண்டில் உச்சம் பெறுதல் சிறப்பல்ல என்று சோதிட
நூல்கள் கூறுகின்றன.
பாவகர்த்தாரி
தோசத்துடன் பிறந்த இந்த சாதகர் பிறக்கும்போது உயிருடன் பிறப்பாரா என்பதே கேள்விக்குறி.
மேலும்,
ஏழு கோள்கள் ஒரே வீட்டில் இருப்பதால், பிச்சைக்காரனாகவும், காடு மேடுகளில் சுற்றுபவராகவும்
இருக்க வேண்டும்.
பொதுவாக
அனைத்து சோதிடர்களும் இப்படித்தான் கணிப்பார்கள்.
ஆனால்
இந்த சாதகர் தற்போதும் நலமுடன் உள்ளார். நிறைந்த கல்வி, ஆய்வுத் திறன், பேச்சாற்றல்,
அரசில் உயர் அதிகாரி, மனைவி மக்கள் பேறு, நடுத்தர வாழ்வு என வாழ்க்கை நிலையில் உள்ளார்.
எவ்வாறு
இப்படி?
இந்த சாதகத்தினை வேறு விதமாக சுருக்க
ஆய்வு செய்வோம்.
1. தனுசு
இலக்கினம் – நேர்மையான எண்ணம் கொண்ட இராசி
2. இரண்டில்
செவ்வாய் உச்சம் – ஆட்சித் திறன்.
3. செவ்வாய்
2-ல் உச்சம் பெற்றதால், உடன் உள்ள குருவின் நீச்ச நிலையானது, நீச்சபங்க இராஜயோகமானது.
4. செவ்வாய்
2-ல் உச்சம் பெற்றதால், 12-ல் செவ்வாயின் வீட்டில் உள்ள நீச்ச சந்திரன் நீச்சபங்கம்
பெற்றது.
5. இரண்டில்
உள்ள சுக்கிரன் போதுமான செல்வ நிலையினை வழங்கியுள்ளது.
6. பத்தாம்
இடத்து அதிபதி புதன், ஒன்பதாம் இடத்து சூரியனுடன், 2-ம் வீட்டில் புத ஆதித்ய யோகத்தில்
அமைந்து அரசு பணியை வழங்கியுள்ளது.
7. இரண்டில்
உள்ள கேது, தர்க்க ஆய்வுக் கல்வியை வழங்கியுள்ளது
8. சனி
இரண்டில் இருந்தாலும், அதன் சொந்த வீட்டில் உள்ளதால் பாதிப்பு இல்லை என்பதுடன் பலன்
மட்டும் சற்று காலம் தாழ்ந்து கிடைக்கச் செய்யும்
9. எட்டில்
உள்ள இராகு கடகத்தில் இருந்தாலும், கடக இராகுவும் மகர கேதுவும் சிறப்பிற்குரியவை.
ஆக
அனைத்தும், அதாவது எவையெல்லாம் குறை என்று கண்டுணரப்பட்டதோ அவையெல்லாம் நிறை என கணிக்கப்பட்டுள்ளது,
சரி,
இந்த சாதகருக்கு குறை பலன்கள் அல்லது தீய பலன்கள் இல்லையா என்றால், எந்த சாதகமும் தீய
பலன்களையும் கொடுக்கத்தான் செய்யும், இங்கு இது முக்கியமில்லை, மிக மோசமான சாதகம் என
கணிக்கப்பட்ட ஒரு சாதகம் எப்படி நல்ல நிலையில் உள்ளது என்பதை மட்டுமே விளக்கியுள்ளேன்.
[தனிநபர் சுதந்திரம் கருதி வேறு சில தகவல்கள் இங்கு விளக்கப்படவில்லை].
இன்னும்
கூர்மையாக ஆய்வு செய்வதென்றால், இலக்கினம், இராசி, அதிபதிகள், அவை அமைந்த நட்சத்திர
அதிபதிகள், தசாபுத்திகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டே ஒரு சாதகத்தின் பலனை அறிய
வேண்டும்.
பொத்தம்
பொதுவான பலன் என்பது எப்போதும் 10% வீதம் கூட பலன் அளிக்காது என்பதே உண்மை.
அவரவர்
சாதகம் அவரவர்க்கு. பொதுப்பலன் என்பதை மறந்து விடுங்கள். குறிப்பாக நாளிதழ், வார இதழ், தொலைக்காட்சிகளில் வரும் இராசி பலனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
எனவே,
ஆறு கோள்கள் ஒரே வீட்டில் உள்ளது என்பதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த
நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித தீங்கும் நேர்வதற்கும் வாய்ப்பில்லை.
நன்றிது
தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்
அன்புடன்
நிமித்திகன்
No comments:
Post a Comment