Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, July 17, 2016

ஆயுர்தயம் - அம்சங்கள் விளக்கம் - பிருகத் ஜாதகா – 80


  
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


குறிப்பு: (திரு சிதம்பரம்) - தொடர்ச்சி

23. உதய இராசி மகரமாக இருக்க; செவ்வாய் முதல் சூரியன் வரை உள்ள கோள்கள்  அதில் இருக்க, வியாழனாது 3வது வீட்டில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன் ஒரு கல்பம் வாழ்வார்.

24.  மேசத்தின் கடைசி நவாம்சம் உதய நவாம்சமாக இருக்க, வியாழன் அல்லது சுக்கிரன் அதில் இருக்க; சந்திரனானது ரிசபம் அல்லது தனுசுவின் 5வது நவாம்சத்தில் இருக்க அல்லது செவ்வாய் சிம்மாசனாம்சத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன் எண்ணிக்கையில்லாத ஆண்டுகள் வாழ்வார்.

25. சூரியன் மற்றும் புதன் ஸ்திர இராசிகளில் இருக்க; சந்திரன் ரிசபத்திலும், சுக்கிரன் மிதுனத்திலும் இருக்க; உதய இராசி கடகமாக இருக்க அதில் வியாழன் இருப்பது; அல்லது உதய இராசியாக துலாம் இருக்க அதில் சனி இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராகவோ அல்லது ரிஷியாகவோ வாழ்வார்.

26. சந்திரன் தேவலோக அம்சத்தில் இருக்க; செவ்வாய் பரவத அம்சத்தில் இருக்க; சூரியன் உதய இராசியிலும், சிம்மாசன அம்சத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராகவோ அல்லது ரிஷியாகவோ வாழ்வார்.

27. சூரியன் மேசத்திலும், வியாழன் ஒன்பதாவது வீட்டிலேயோ அல்லது கடகத்திலேயோ இருக்க; அசுபக் கோள்கள் 3வது, 6வது மற்றும் 11வது வீடுகளில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் மனிதன், ஒரு முனிவராக வாழ்வார்.


அம்சங்களின் விளக்கம்

பகுதி-1 இல், இராசிமண்டலத்தினை 6 வகைப் பிரிவுகளாக, அதாவது ‘சட்வர்க்கம்’ என வகைப்படுத்தலாம் என பார்த்தோம். சில ஆசிரியர்கள் மேலும் நான்கு பிரிவுகளாக, அதாவது, சப்தாமாம்சம், தசாம்சம், சோடசாம்சம், சஷ்டியாம்சம் என பிரிக்கிறார்கள்.

சப்தமாம்சம் என்பது இராசி சக்கரத்தில் உள்ள ஒரு இராசியை 7 சம பாகங்களாகப் பிரிப்பது. ஒற்றைப்படை இராசிகளின் 7 பாகங்களின் அதிபதிகள் முறையே, இராசி சக்கரத்தின் ஒற்றைப்படை இராசியிலிருந்து தொடங்கும் 7 இராசிகளின் அதிபதிகள் ஆவர்;  இரட்டைப்படை இராசிகளின் 7 பாகங்களின் அதிபதிகள் முறையே, இராசி சக்கரத்தின் 7வது வீட்டிலிருந்து இரட்டைபடை இராசியில் தொடங்கும் 7 இராசிகளின் அதிபதிகள் ஆவர்;

தசாம்சம் என்பது இராசி சக்கரத்தில் உள்ளச ஒரு இராசியை 10 சம பாகங்களாகப் பிரிப்பது. 10 பாகங்களின் ஒற்றைப்படை இராசியின் அதிபதிகள் முறையே இராசி சக்கரத்தின் ஒற்றைபடை இராசியிலிருந்து 10வது இராசியிலிருந்து தொடங்கும் இராசிகளின் அதிபதிகள் ஆவர், 10 பாகங்களின் இரட்டைபடை இராசிகளின் அதிபதிகள் முறையே, இரட்டைபடை இராசியின் 10வது வீட்டிலிருந்து தொடங்கும் 10 இராசிகளின் அதிபதிகள் ஆவர்.

சோடசாம்சம் என்பது இராசி மண்டலத்தில் உள்ள ஒரு இராசியை 16 பாகங்களாகப் பிரிப்பது. ஒற்றைப்படை இராசியின் 16 பாகங்களின் அதிபதிகள், ஒற்றைப்படை இராசியில் தொடங்கி 12 இராசிகள் வரை அவைகளுக்குரிய அதிபதிகளுடன், பிரம்மன், விஷ்னு, ருத்ரன் மற்றும் சூரியன் ஆவர்; இரட்டைப்படை இராசியின் 16 பாகங்களின் அதிபதிகள், இரட்டைப்படை இராசியில் தொடங்கி 12 இராசிகள் வரை அவைகளுக்குரிய அதிபதிகளுடன், சூரியன், ருத்ரன், விஷ்னு மற்றும் பிரம்மன் ஆவர்.


………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16




No comments: