வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
7. பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் கோபக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் அரசரால் ஆதரிக்கப்படுவார்;
புதனால் பார்க்கப்பட்டால், புதையலைக் கண்டுபிடிப்பதன் மூலம் செல்வந்தராவார்; வியாழனால்
பார்க்கப்பட்டால் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பார்; வெள்ளியால்
பார்க்கப்பட்டால் குழந்தைகள் இருக்காது; சனியால் பார்க்கப்பட்டால் தீய செயல்களில் ஈடுபடுவார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது வியாழனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் அதிகாரமிக்கவராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் சண்டைகளின் விதிமுறைகளை
அறிந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நகைச்சுவைத் திறன் கொண்டவராக இருப்பார்;
வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் ஒரு அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால்
வீரியம் இல்லாத மனிதராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், அறக்கட்டளைகள நிர்வாகிப்பார்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment