வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
6. பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது புதனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் கலைஞர் அல்லது நாட்டியக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால்,
அவர் திருடராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் பெருங்கவிஞராக இருப்பார்; வியாழனால்
பார்க்கப்பட்டால், அவர் அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், இசையில்
திறமை மிக்கவராக இருப்பார், சனியால் பார்க்கப்பட்டால், எந்திரதொழில் நுட்பத்தில் சிறந்து
விளங்குவார்.
பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது கடக நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் சிறு உடலமைப்பு கொண்டவராக இருப்பார்; செவ்வாயால பார்க்கப்பட்டால் அவர்
ஒரு கருமியாக இருப்பார் அல்லது குறைவான செல்வம் கொண்டிருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால்
யோகக்கலையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், ஒரு தலைவராக
இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் பெண்களால் வளம் பெறுவார்; சனியால் பார்க்கப்பட்டால்
வேலையில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment