வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபது
பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி
7. ஒருவர் பிறக்கும்போது, வியாழனானது இலக்கினம் முதல் 12வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் முறையே, கற்றறிந்தவர், நல்ல பேச்சாளர், கருமி, வசதியான வாழ்க்கை, புத்திக் கூர்மையாளர், எதிரிகள் அற்ற நிலை, அவரின் தந்தையைக் காட்டிலும் புகழ்மிக்கவர், அவரது தகுதிக்கு குறைவான வேலைகளை செய்தல், பக்தர், சொத்துக்களை உடையவர், மிகுந்த இலாபம் அடைபவர், தீய குணங்கள் கொண்டவர்.
8. ஒருவர் பிறக்கும்போது, வெள்ளியானது இலக்கினத்தில் இருந்தால், காதல் செய்வதில் திறமை மிக்கவராக இருப்பதுடன் வசதியான வாழ்க்கையும் கொண்டிருப்பார்; வெள்ளியானது 7வது வீட்டில் இருந்தால், சச்சரவுகளில் ஈடுபடுபவராகவும் காம இச்சைக் கொண்டவராகவும் இருப்பார்; வெள்ளியானது 5வது வீட்டில் இருந்தால், அவர் வசதியான வாழ்க்கை வாழ்வார், இதர வீடுகளில் இருந்தால்(1) அத்தகைய வீடுகளில் வியாழன் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன்கள் கிடைக்கும்; ஆனால் வெள்ளியானது பிறக்கும் நேரத்தில் மீனத்தில் இருந்தால், அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்.
குறிப்பு: (1) அதாவது, 2வது, 3வது, 4வது, 6வது, 8வது, 9வது, 10வது, 11வது, 12வது வீடுகள்.
பாவங்களில் கோள்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment