Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, July 5, 2017

பாவக பலன்களை தீர்மானித்தல் - பிருகத் ஜாதகா – 158



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


10.    இலக்கினத்திலிருந்து, பல்வேறு வீடுகளில் கோள்கள் இருக்கும் பலனுக்கு அந்த வீடுகளின் இயற்கை குணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும், அதாவது, அத்தகைய வீடுகளில் பல்வேறு கோள்கள் இருக்கும் நிலையில் அந்த வீடுகள் நட்பு வீடுகளா அல்லது எதிரி வீடுகளா அல்லது சொந்த வீடுகளா அல்லது உச்ச வீடுகளா போன்றவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், சத்யாச்சாரியாரின் கருத்துப்படி, சுபக் கோள்கள் பாவத்தில் பலனை அதிகரிக்கச் செய்யும், அசுபக் கோள்கள் குறைக்கச் செய்யும், ஆனால் 6வது 8வது 12வது வீடுகளில் இது எதிர்மறையாக இருக்கும்(2).

குறிப்பு: (1) காரகரின் கருத்துப்படி, உச்சம், மூலத்திரிகோணம், சொந்தம், அல்லது நட்பு வீடுகளில் இருக்கும் கோள்கள் அந்த வீட்டின் பலனை உயர்த்தும். பகை வீடு, நீச்ச வீடு ஆகியவற்றில் இருக்கும் கோள்கள், அந்த பாவத்தின் பலனை குறைக்கும். சம வீடுகளில் இருக்கும் கோள்கள் அந்த பாவத்தின் பலனை உயர்த்தவும் செய்யாது குறைக்கவும் செய்யாது.

(2) அதாவது, ஒரு சுபக் கோளானது 6வது வீட்டில் இருந்தால், எதிரிகளை அழிக்கும், அசுபக் கோள் இருந்தால், எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். மேலும், சுபக்கோளானது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வார், அசுபக் கோள் இருந்தால், அவரது வாழ்வில் ஆபத்துக்கள் அதிகரிக்கும். மேலும், ஒரு சுபக்கோள் 12வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு எவ்வித நட்டமும் ஏற்படாது, அசுபக்கோள் இருந்தால், நட்டங்கள் அதிகரிக்கும். இந்தக் கருத்தானது ஸ்வல்ப ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகும்.


11.    உச்ச வீட்டில் கோள்கள் இருந்தால் கொடுக்கக் கூடிய பலன்கள் அந்த வீட்டில் அவை இருந்தால் முழுமையாகக் கிடைக்கும். அவை மூலத்திரிகோண(1) வீட்டில் இருந்தால், அவை முக்கால் பாக பலனை வழங்கும், அவை சொந்த வீட்டில் இருந்தால், அவை பாதி பலனைக் கொடுக்கும், நட்பு வீட்டில் அவை இருந்தால் கால் பாக பலனைக் கொடுக்கும், பகை வீட்டில் இருந்தால், கால் பாகத்திற்கும் குறைவான பலனைக் கொடுக்கும், நீச்ச வீட்டில் இருந்தால் அல்லது அஸ்தங்கம் ஆகி இருந்தால்(2), அவைகள் கொடுக்கக் கூடிய நல்ல பலன்கள் முழுமையாக இழக்க நேரிடும்.

குறிப்பு:
(1)  பத்தி-14, பகுதி-1 பார்க்கவும்
(2)  பத்தி-2, பகுதி-7-ல் குறிப்பு – பார்க்கவும்
பலன் தீயதாக இருந்தால், அந்தக் கோள்கள் நீச்ச நிலையிலோ அல்லது அஸ்தங்கத்திலோ இருந்தால், தீய பலன்கள் முழுமையாக நேரிடும். அவை எதிரி வீட்டில் இருந்தால், முக்கால் பாகமாகவும், நட்பு வீட்டில் இருந்தால் அரை பாகமாகவும், சொந்த வீட்டில் இருந்தால் கால் பாகமாகவும், மூலத்திரிகோண வீட்டில் இருந்தால் கால் பாகத்திற்கும் குறைவாகவும் தீய பலன்கள் ஏற்படும். ஆனால் அவை உச்ச வீட்டில் இருந்தால், தீய பலன்கள் எதுவும் ஏற்படாது.


பாவங்களில் கோள்களின் பலன்கள் – முற்றும்



அடுத்து – பகுதி – 21 – பல்வேறு வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: