வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
17. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சந்திரன் சனியுடன் சேர்ந்திருந்து,
செவ்வாயால் பார்க்கப்பட்டு அதனைச் சுற்றிலும் கோட்டை (வட்டம்) கட்டியிருந்தால், அந்த
மனிதர் கடுமையான சொற்களை உபயோகிப்பவராக இருப்பார், வலிப்பு நோய் உடையவராகவும், நுகர்வு
பிரச்சனை உடையவராகவும் இருப்பார்(1).
பிறக்கும்
நேரத்தில், சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை இலக்கினத்திலிருந்து 10வது வீட்டில் இருக்க,
அவை சுபக் கோள்களால் பார்க்கப்படாமல் இருந்தால், அந்த மனிதர் பலரின் கீழ் - உயர் அதிகாரி,
இடைநிலை அதிகாரி, கீழ் நிலை அதிகாரி ஆகியோரின்(1) கீழ் வேலை செய்பவராக இருப்பார்.
குறிப்பு:
(1) சந்திரனாது
முதல் யோகத்தில் இருந்தால் கடுஞ்சொல்லாளராகவும், இரண்டாவது யோகத்தில் இருந்தால், வலிப்பு
நோய உடையவராகவும், மூன்றாவது யோகத்தில் இருந்தால் நுகர்வு பிரச்சனை உடையவராகவும் இருப்பார்.
(2) மூன்று
கோள்களில் ஒன்று 10வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் உயர்நில வேலையாளாகவும், இரண்டு
கோள்கள் 10வது வீட்டில் இருந்தால் நடுத்தர வேலையாளாகவும், மூன்று கோள்கள் 10வது வீட்டில்
இருந்தால் கீழ்நிலை வேலையாளாகவும் இருப்பார்.
தீமைதரும்
யோகங்கள் முடிவுற்றது.
அடுத்து
.. பகுதி-24 – பெண்களின் சாதகம்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment