வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
பெண்களின் சாதகம்
1. பெண்கள் சாதகத்தின் குறிப்புகள் என்பன ஆண்களின்
சாதகத்தினைப் போலவே தான் இருக்கும்; ஆனால் பெண்களுக்கு பொருந்தக் கூடிய பலன்கள் பெண்களுக்கு
மட்டுமே பொருந்தும், மற்றவை அவர்களின் கணவர்களுக்குப் பொருந்தும். வேறு சிலரின் கருத்துப்படி,
அனைத்து பலன்களும்(1) கணவருக்கு மட்டுமே பொருந்தும். கணவரின் மரணம் என்பது பெண்களின்
சாதகத்தின் 8-ம் இடத்தினை வைத்து தீர்மானிக்க வேண்டும். ஒரு பெண்ணில் உடலமைப்புகளை,
இலக்கினம், சந்திரன் இருக்கும் இராசி ஆகியவற்றைக் கொண்டும், அவரது மற்றும் அவரது கணவரின்
எதிர்கால பலனை 7-ம் வீட்டிலிருந்தும் தீர்மானிக்க வேண்டும்.
குறிப்பு:(1)
நற்பலனாக இருந்தாலும் கெடுபலனாக இருந்தாலும் இருவரும் அனுபவிப்பார்கள். அத்தகைய பலன்களில் பெரும்பான்மையானவற்றை கணவரும்,
உடல் தொடர்பான பலனை பெண் மட்டுமே, அனுபவிப்பர். எனவே, மிகச்சிறந்த யோகபலனில் பிறந்த
பெண்ணை மணப்பது ஆணுக்கு நல்லது.
2. உதய இராசியும் சந்திரன் இருக்கும் இராசியும் இரட்டை
இராசியாக இருந்தால் அந்த பெண் ஒரு நேர்மையான பெண்ணின் குணங்களைக் கொண்டிருப்பார்; அத்தகைய
வீடுகள் சுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அந்த பெண் நற்குணங்களும் எளிமையானவராகவும் ஆபரணங்கள் அணிந்தவராகவும் இருப்பார்(1). ஆனால் அத்தகைய
வீடுகள் ஒற்றை இராசிகளாக இருந்தால், அந்த பெண் ஆணுக்குரிய உடலமைப்புடனும் ஆணின் குணங்களையும்
கொண்டிருப்பார்; அந்த வீடுகளில் அசுபக் கோள்கள் இருந்தாலோ அல்லது அவைகளால் பார்க்கப்பட்டாலோ,
அவர் தீய குணங்களும், ஒரு சில நற்குணங்களும் கொண்டிருப்பார்(2).
குறிப்பு:
(1) வேறு
சிலரின் கருத்துப்படி, நல்லொழுக்கம் என்பது நல்ல அணிகலன்கள் என்பர்.
(2) உதய இராசி
அல்லது சந்திரன் இருக்கும் இராசிகளில் ஒன்று, ஒற்றைப்படையாகவும் மற்றொன்று இரட்டைப்படையாகவும்
இருந்தால் அவர், ஆணின் குணமும் பெண்ணின் குணமும் இணைந்தவராக இருப்பார். இதே போன்ற பலனே,
ஒரு இராசியில் அசுபக் கோள்களோ அல்லது சுபக்கோள்களோ இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அது
போலவே மற்றொரு வீட்டில் அதற்கு மாறாக இருந்தாலோ ஏற்படும்.
….பெண்களின்
சாதகம்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment