Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, December 29, 2015

குழந்தை பிறக்கும்போது உடன் இருக்கும் செவிலியர்களின் எண்ணிக்கை - பிருகத் ஜாதகா – 62



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


22. தாதிகளின் (செவிலியர்) எண்ணிக்கையானது, உதய இராசிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள கோள்களின் எண்ணிக்கைக்கு இருக்கும். இத்தகைய கோள்களில், அரைவட்ட கோளத்தின் பார்வையில் இருக்கும் கோள்களின் எண்ணிக்கை அளவில் தாதிகளானவர்கள், அறைக்கு வெளியேயும், அரைவட்ட கோளத்தின் பார்வைக்கு தெரியாமல் இருக்கும் கோள்களின் எண்ணிக்கை அளவில், தாதிகள் அறைக்கு உள்ளேயும் இருப்பர். வேறு சிலரின் கருத்துபடி, இந்த வரிசையானது தலைகீழாக(1) இருக்கும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)  அதாவது, இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள கோள்கள் அரைவட்ட கோளத்தில் பார்வையில் உள்ள கோள்கள் எனப்படும், அதற்கேற்ப, அறையில் உள்ள தாதிகளின் எண்ணிக்கை இருக்கும், அரைவட்ட கோளத்தில் பார்வைக்கு உட்படாத கோள்களின் எண்ணிக்கையில் தாதிகள் அறைக்கு வெளியே இருப்பர். வராக மிகிரர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய ஸ்வல்ப ஜாதகாவிற்கு எதிராக உள்ளது.

இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் சுபக் கோள்கள் இருந்தால், தாதிகள் நல்ல உடையணிந்து அழகாக இருப்பார்கள்; அந்த இராசிகளில் அசுபக் கோள்கள் இருந்தால், அப்பெண்கள் அழுக்கான உடையணிந்து, ஆபரணங்கள் ஏதுமின்றி இருப்பர்.

இலக்கினத்திற்கும் சந்திரனுக்கும் இடையில் ஏதேனும் கோள்கள் உச்ச நிலையிலோ அல்லது வக்கிர நிலையிலோ இருந்தால், எண்ணிக்கையானது மும்மடங்காக இருக்கும். ஆனால், அவைகளின் சொந்த வீட்டில், நவாம்சத்தில் அல்லது திரேக்கானம் முதலியவற்றில் இருந்தால், அந்த கோள்களின் எண்ணிக்கைக்கேற்ப இருமடங்காகும்.


23.  உடலின் உருவ அமைப்பு மற்றும் சிறப்புத் தன்மைகள்(1) என்பன உதய நவாம்சத்தின் அதிபதி அல்லது வலிமை மிகுந்த கோள்களைக் கொண்டு தீர்மானிக்கப்படும்; உடலின் நிறம்(2) என்பது நவாம்ச(அதிபதி)த்தில் உள்ள சந்திரனால் தீர்மானிக்கப்படும்; தலையானது3) உதய இராசியில் தொடங்கி, உடலின் உறுப்புகளின் அளவானது இராசிகள் குறிப்பிடும் பாகங்களைக் கொண்டு, தீர்மானிக்கப்படும்.

குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)  இவை பகுதி-2, பத்தி 8 முதல் 11 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
உரையாசிரியரின் கூற்றுப்படி, உதய நவாம்சத்தைக் குறிக்கும் இராசியானது வலிமையாக இருந்தால், அப்போது உடலின் சிறப்புத் தன்மையானது அத்தகைய நவாம்ச அதிபதியைக் கொண்டு தீர்மானிக்கப்படும்; அவ்வாறு இல்லையெனில், அவை வலிமை மிகுந்த கோளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.

(2)  இது பகுதி-2, பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறு சிலரின் கருத்துப்படி, நிறமானது சந்திரன் இருக்கும் இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும், அதாவது பகுதி-1, பத்தி 20-ன்படி. இதை உரையாசிரியர் மறுக்கிறார். எந்த மனிதனும் பச்சைக் கிளியின் நிறத்தில் இருப்பதில்லை எனக் குறிப்பிடுகிறார். நிறத்தினைத் தீர்மானிக்கும்போது, நாடு, தட்பவெப்பம், தொழில் அது போன்றவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

(3)  இங்கு உடல் பாகங்களின் பிரிவு என்பது, பகுதி-1, பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டதேயாகும், இதில் வித்தியாசம் என்பது, முந்தையது மேசத்தினைக் கொண்டு தொடங்குகிறது, தற்போதையது உதய இராசியைக் கொண்டு தொடங்குகிறது. இந்த பிரிவுகள் என்பன:

உதய இராசியானது தலையைக் குறிக்கின்றது; 2வது வீடு முகத்தைக் குறிக்கின்றது; 3வது மார்பு, 4வது இதயம், 5வது வயிறு, 6வது இடுப்பு, 7வது அடிவயிறு, 8வது பிறப்பு உறுப்புகள், 9வது இரண்டு தொடைகள், 10வது இரண்டு முழங்கால்கள், 11வது கணுக்கால்கள், 12வது இரண்டு பாதங்கள். இராசி சக்கரத்தில் உள்ள பல்வேறு இராசிகளின் தொடர்புடைய அளவீடு என்பது குறித்து பகுதி-1, பத்தி-19ல் குறிப்பிடப்பட்டதானது:




இவற்றில், 4 இராசிகள் பிரிவு அ என்பது குறுகிய இராசிகள். பிரிவு ஆ என்பது மத்திம இராசிகள், பிரிவு இ என்பதில் உள்ளவை நீண்ட இராசிகளாகும். அதன்படி, உடலின் உறுப்புகளானது, நீண்ட அல்லது குறுகியவை என இராசிகளின் நீளம் மற்றும் குறுகலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். குறுகிய அளவுள்ள இராசி அதிபதியானவர், நீண்ட இராசியில் இருந்தால், அல்லது நீண்ட அளவுள்ள இராசியின் அதிபதியானவர் குறுகிய இராசியில் இருந்தால், உடலின் உறுப்பின் அளவானது மத்திம அளவு என குறிப்பிடப்படும். ஒரு இராசியில் பல்வேறு கோள்கள் இருந்தால், அதில் வலிமையானது கணக்கில் கொள்ளப்பட வேண்டும், ஒரு இராசியில் கோளே இல்லை எனில், உடலின் உறுப்பின் அளவானது அந்த இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Monday, December 28, 2015

குழந்தையைப் பிரசவிக்கும் அறையில் உள்ள கட்டிலின் அமைப்பு - பிருகத் ஜாதகா – 61


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்


20. மேசம், கடகம், துலாம், விருச்சிகம் அல்லது கும்ப இராசியானது இலக்கினமாகவோ அல்லது நவாம்ச இலக்கினமாகவோ (எது வலிமை வாய்ந்ததோ) இருக்க, பிறக்கும் இடமானது வீட்டின் கிழக்குப் பகுதியாக இருக்கும்; தனுசு, மீனம், மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால், அது வடக்குப் பகுதியாக இருக்கும்; ரிசபமாக இருந்தால் மேற்கு பகுதியாக இருக்கும்; மகரம் அல்லது சிம்மமாக இருந்தால், பிறப்பிடமானது வீட்டின் தெற்குப் பகுதியாக இருக்கும்.


21. உதய இராசியானது மேசம் அல்லது ரிசபமாக இருந்தால், பிரசவிக்கும் பெண்ணின் படுக்கையானது அறையின் கிழக்குப் பகுதியில் இருக்கும்; உதய இராசியானது மிதுனமாக இருந்தால், அது தென்கிழக்குப் பகுதியாக இருக்கும்; கன்னி எனில், தெற்காகவும்; கன்னி எனில் தென்மேற்கு பகுதியாகவும்; துலாம் அல்லது விருச்சிகம் எனில் மேற்கு பகுதியாகவும்; தனுசு எனில் வடமேற்கு பகுதியாகவும்; மகரம் அல்லது கும்பம் உதய இராசி எனில் படுக்கையானது அறையின் வடக்குப் பகுதியாகவும்; மீனம் உதய இராசி எனில், அது வடகிழக்குப் பகுதியாகவும் இருக்கும். இதே விதியானது, பெண் படுத்திருக்கும் படுக்கை அல்லது கட்டிலுக்கும் பொருந்தும். கட்டிலைப் பொருத்தவரையில், முன்னிரண்டு கால்களானவை உதயத்திலிருந்து 12வது மற்றும் 3வது வீட்டின் கால்பாகம் இருக்கும் இடத்திற்கேற்பவும், பின் கால்கள் 6வது மற்றும் 9வது(1) வீடுகளின் கால்பாகம் இருக்கும் நிலைக்கேற்பவும் இருக்கும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)     அதாவது, 12வது மற்றும் 3வது வீடுகள் முன்கால்களைக் குறிக்கும்; 9வது மற்றும் 6வது வீடுகள் பின் கால்களைக் குறிக்கும்; 3வது மற்றும் 6வது வீடுகள் இரண்டு இடதுபுற கால்களைக் குறிக்கும். மேலும் உதய இராசியும் 2வது வீடும் கட்டிலின் தலைப்பகுதியைக் குறிக்கும், 4வது மற்றும் 5வது வீடுகள் வலதுபுறத்தினைக் குறிக்கும்; 7வது மற்றும் 8வது வீடுகள் பின்கால்களுக்கு இடையே உள்ள பகுதிகளையும், 10வது மற்றும் 11வது வீடுகள் இடது புறத்தினையும் குறிக்கும். இப்போது, பொது இராசிகளானவை  கட்டிலின் எந்தெந்த பாகங்களைக் குறிக்கின்றனவோ, கட்டிலின் அந்த பகுதியானது சற்று வளைந்து காணப்படும், அதே நேரத்தில் அந்த இராசியானது அதன் சொந்த கோளினால் பார்க்கப்பட்டாலோ அல்லது சுபக் கோளினால் பார்க்கப்பட்டாலோ இவ்வாறு  இருக்காது. மறுபடியும், கட்டிலைக் குறிக்கக் கூடிய அந்தந்த பகுதியில் அசுபக் கோள்கள் இருந்தால் கட்டிலின் அப்பகுதி பழுதடைந்து இருக்கும்; ஆனால் அந்த அசுபக் கோள்கள் உச்சநிலையில்,  அதன் மூலத்திரிகோணம், அதன் நட்பு வீடுகளில் அல்லது அதன் சொந்த வீட்டில் இருந்தால் அவ்வாறு இருக்காது.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Sunday, December 27, 2015

குழந்தைகள் பிறக்கும் வீட்டின் அமைப்பு - பிருகத் ஜாதகா – 60

   
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்

18.  சந்திரனைக்(1) கொண்டு எண்ணெய் தீர்மானிக்கப்படுகிறது, உதய இராசியைக்(2) கொண்டு திரி தீர்மானிக்கப்படுகிறது;  இதர விவரங்களான விளக்கின் தன்மையானது சூரியன்(3) இருக்கும் இராசியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. கேந்திரத்தில்(4) இருக்கும் வலிமையான கோளைக் கொண்டு அல்லது அதிக பலம் மிகுந்த கோளைக் கொண்டு நுழைவு வாயில் தீர்மானிக்கப்படுகிறது.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1) அதாவது, சந்திரனானது ஒரு இராசியின் தொடக்க நிலையில் இருந்தால், பிரசவ அறையின்  விளக்கில் உள்ள எண்ணெய் முழுமையாக இருக்கும்; இராசியின் நடுவில் சந்திரன் இருந்தால், எண்ணெய் பாதியளவு இருக்கும், இராசியின் கடைசியில் சந்திரன் இருந்தால், விளக்கில் எண்ணெய் இருக்காது; அதாவது, எண்ணெயின் அளவானது சந்திரன் இருக்கும் இராசியின் நிலையைப் பொருத்து இருக்கும்.

சாரவளியின்படி, சந்திரன் முழுநிலவாக இருந்தால், எண்ணெய் முழுமையாக இருக்கும், எண்ணெயின் அளவானது சந்திரனின் ஒளியின் அளவினைப் பொருத்து இருக்கும். உரையாசிரியர் பட்ட உத்பலாவின் கருத்து என்னவெனில், குழந்தை அமாவாசையில் பிறக்கும் எனில் எப்போதும் இருட்டிலேயே பிறக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே.

(2)  அதாவது, உதய இராசியானது உதயத்தின் ஆரம்ப நிலையாக இருந்தால், திரியானது நீண்டதாகவும் புதிதானதாகவும் இருக்கும்; உதயத்தின் நடுவில் இருந்தால், திரியானது பாதி எரிந்த நிலையில் இருக்கும்; உதய இராசியின் இறுதியில் இருந்தால், திரியானது ஏறக்குறைய முழுதும் எரிந்த நிலையில் இருக்கும். அதாவது, திரியின் நீளமானது உதய இராசியானது கீழ்வானத்தின் புள்ளியைத் தொடும் அளவினைப் பொருத்து இருக்கும். திரியின் நிறம் உதய இராசியின் நிறத்தினைச் சார்ந்து இருக்கும்.

(3)  அதாவது, சூரியன் இருக்கும் இராசியானது ஸ்திர இராசியாக இருந்தால், விளக்கானது ஒரு இடத்தில் நிலையாக பொருத்தப்பட்டிருக்கும்; சரமாக இருந்தால், யாரேனும் ஒருவர் அதனை கையில் பிடித்தபடி இருப்பார்; உபய இராசியாக இருந்தால் விளக்கானது தொங்கும் விளக்காக இருக்கும். உரையாசிரியரின் கருத்துப்படி, விளக்கானது சூரியன் இருக்கும் இராசிக்கு உடைய திசையில் இருக்கும். வேறு சிலரின் கருத்துப்படி, சூரியன் இருக்கும் இராசியின் (அதாவது அறையினை 12 சம பாகங்களாகப் பிரித்தால்) இடத்தில் இருக்கும். இவ்வாறு பிரிப்பது பற்றி  இதன் ‘முன்னுரையில்” ஹோரை சோதிடம் பற்றி குறிப்பிட்டபோது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு சிலரின் கருத்துப்படி, பகல் இரவு கொண்ட ஒரு நாளின் 24 மணி நேரத்தினை 8 பாகங்களாக, ஒவ்வொன்றும் 3 மணி நேரம் என சூரிய உதயத்திலிருந்து கணக்கிட்டு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு என்பது போல், பிறக்கும் நேரத்தினை, எந்த பிரிவில் வருகிறதோ அந்த பிரிவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

(4)  கேந்திரத்தில் கோள்கள் இல்லையெனில், நுழைவு வாயிலானது, இலக்கினத்தின் திசையினைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என ஸ்வப்ல ஜாதகம் குறிப்பிடுகிறது.

குறிப்பு (நிமித்திகன்): 

விளக்கு, எண்ணெய், திரி, விளக்கு இருக்கும் திசை என்பன அன்றையக் காலக் கட்டத்திற்கு பொருந்தும். தற்போது, பிறப்பானது 99% மருத்துவமனைகளிலேயே நிகழ்வதாலும், மின் விளக்குகளின் பயன்பாட்டில் திரி விளக்குகளுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.



19. சனியானது வலிமை மிகுந்து இருந்தால், பிறப்பானது ஒரு பழைய, புதுப்பிக்கப்பட்ட வீட்டில் நிகழும். செவ்வாய் வலிமை மிகுந்து இருந்தால், பகுதி எரிந்த நிலையில் உள்ள வீட்டில் நிகழும்; சந்திரன் வலிமை மிகுந்து இருந்தால், அது ஒரு புதிய வீடாக இருக்கும்; சூரியன் வலிமை மிகுந்து இருந்தால், மரத்தால் அமைக்கப்பட்ட ஆனால் வலிமை குறைந்த வீடாக இருக்கும்; புதன் வலிமையாக இருந்தால், அது பல்வேறு நபர்களாள் கட்டப்பட்ட வீடாக இருக்கும்; சுக்கிரன் வலிமை மிகுந்து இருக்குமானால், கலைநயம் மிக்க அழகிய வீடாக இருக்கும்; குரு வலிமை மிகுந்து இருக்குமானால், அது உறுதிவாய்ந்த வீடாக இருக்கும்(1). வீட்டின் நான்கு பக்கங்களின் நிலையானது, ராசி சக்கரத்தில்(2) உள்ள கோள்களுக்குரியவாறு அமைந்திருக்கும்.


குறிப்பு (சிதம்பரம் அய்யர்):

(1)  சாரவளியின் கருத்துப்படி, மேற்குறிப்பிட்ட வரிகளின்படி, சூரியனானது வலிமைமிகுந்த கோள் இருக்கும் வீட்டில் இருந்தால், பிறப்பானது பூசை அறைக்கு அருகில் உள்ள அறையில் நிகழும்; சந்திரனானது, வலிமை மிகுந்த கோள் இருக்கும் வீட்டில் இருந்தால், பிறப்பானது குளியல் அல்லது தண்ணீர் உள்ள் அறையில் நிகழும்; செவ்வாயாக இருந்தால், சமையலறை அல்லது யாகசாலையில் நிகழும்; புதனாக இருந்தால் படுக்கையறை; வியாழனாக இருந்தால் பணம்வைத்திருக்கும் அறை; சுக்கிரனாக இருந்தால் விளையாட்டு திடல்; சனியாக இருந்தால், பிறப்பானது குப்பைமேட்டில் நிகழும்.

(2)  அதாவது, வலிமை மிகுந்த கோள் இருக்கும் வீட்டிலிருந்து, மூன்று இராசிகளில் மூன்று அல்லது மேற்பட்ட கோள்கள் இருக்குமானால், வீடுகள் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும்; அடுத்த மூன்று இராசிகள் எனில், வீடுகள் தெற்கு பகுதியில் இருக்கும்; அடுத்த மூன்று இராசிகள் எனில், வீடுகள் மேற்கு பகுதிகளில் இருக்கும்; கடைசி மூன்று இராசிகள் எனில், வீடுகள் வடக்குப் பகுதிகளில் இருக்கும்.  இந்த வீட்டின் விவரங்களை மேற்குறிப்பிட்ட உரையில் தெரிவிக்கப்பட்டவாறு  கொள்ளவேண்டும்.

இலகு ஜாதகப்படி, வியாழனானது, அதே நேரத்தில், இலக்கினத்திலிருந்து 10வது வீட்டில் இருந்தால், அதன் உச்ச வீடானது, அதன் உச்ச பாகையினை கடக்கும் எனில், பிறப்பானது இரட்டை மாடி வீட்டில் நிகழும்; உச்ச பாகைக்கு கீழே இருக்கும் எனில் பிறப்பானது மூன்று மாடி வீட்டில் நிகழும்; உச்ச பாகையிலே இருக்கும் எனில், அது நான்கு மாடி கட்டிடமாக இருக்கும்.

தனுசு இராசி வலிமைமிகுந்து இருக்குமானால், பிறப்பானது மூன்று உள் தாழ்வாரங்களைக் கொண்ட வீட்டில் நிகழும்; இலக்கினத்திலிருந்து 10வது வீட்டில் வியாழன் இருக்குமானால், அந்த இராசியானது மிதுனம், கன்னி, மீனாமாக இருக்குமானால், அது இரண்டு உள் தாழ்வாரங்களைக் கொண்ட வீடாக இருக்கும்.


குறிப்பு (நிமித்திகன்):

       முன்பே குறிப்பிட்டவாறு, அன்றையக் காலக்கட்டத்தில், பிறப்பானது வீடுகளிலும், வெளியிடங்களிலும் நிகழ்ந்தன. தற்போது, 99% பிறப்பானது மருத்துவமனைகளில் நிகழ்கிறது. எனவே, இது எந்த அளவிற்கு தற்போது பொருந்தும் என்பது வினாவிற்குரியது. இருப்பினும், வராக மிகரரின் காலத்தில், மூன்றுமாடி, நான்குமாடிக் கட்டிடம் இருந்திருக்க சாத்தியமில்லை. திரு. சிதம்பரம் அவர்கள் அவருடைய காலத்திற்கேற்ப இதற்கு குறிப்புகள் அளித்துள்ளார். அதாவது, 1885-ம் ஆண்டு வாக்கில் (இன்றைக்கு 130 ஆண்டுகளுக்கு முன்பு), நான்கு மாடிக் கட்டிடம் என்பதே மிகப்பெரும் கட்டிடமாக இருந்திருக்கக் கூடும். தற்போது மாடிகளின் எண்ணிக்கை மூன்று இலக்கதில் உள்ளன. தாழ்வாரங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. எனவே, மேலேக் குறிப்பிட்ட விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தும் என்பது ஒரு வினாவே. இச்சூழலில் ஒரு முக்கிய வேண்டுகோள் என்னவெனில், காலந்தோறும், சோதிடக் குறிப்புகளை அறிவார்ந்த வகையில் ஆராய்ந்து, தேவையற்றவைகளை ஒதுக்கிவிட்டு, தேவயானவைகளுக்கு புதியக் கணிதமும் அதன் அடிப்படையில் புதிய கொள்கைகளையும் வகுக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். அதைவிட முக்கியம், சோதிடத்தை பொதுவில் வைக்க (மதங்களுக்கு அப்பாற்பட்டு), முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


Saturday, December 26, 2015

குழந்தையின் தலையா? காலா? எது முதலில்? - பிருகத் ஜாதகா – 59

     
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்

16. தந்தைவழிக் கோள் வலிமையாக இருந்தால், குழந்தையானது தந்தையின் வீட்டில் பிறக்கும்(1); தாய்வழிக் கோள் வலிமையாக இருந்தால், பிறப்பானது தாயின் வீட்டில் நிகழும்(2); மூன்று சுபக் கோள்களும் அவைகளுக்கு பாதிப்பு தரும் வீட்டில் இருந்தால், பிறப்பானது சுவர்கள், மரங்கள் அது போல இடங்களின்(3) அடியில் நிகழும்; மேலும், அந்த மூன்று கோள்களும் ஒரே வீட்டில் இருக்க, அவை இலக்கினத்துடன் தொடர்பில் இல்லாமலும், சந்திரனும் ஒரு தனி வீட்டில் இருக்க, பிறப்பானது காட்டில்(4) நிகழும்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     அல்லது தந்தைவழி மாமன் அல்லது தந்தைவழி அத்தை வீட்டில்

(2)     அல்ல்து தாய்வழி மாமன் அல்லது தாய்வழி அத்தை வீட்டில்

(3)     இதுபோல, அதாவது ஆறுகள், கினறுகள், பூந்தோட்டங்கள் அல்லது குன்றுகளின் அருகில்.

(4)     ஆகவே, மூன்று கோள்கள் ஒரே வீட்டில் இருக்க, இலக்கினம் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் இருக்க, பிறப்பானது மக்கள் கூட்டமாக வசிக்கும் இடங்களில் நிகழும்.

17. சந்திரனானது சனியில் நவாம்சத்தில் இருக்க அல்லது இலக்கினத்திலிருந்து 4வது(1) வீட்டில் இருக்க, அல்லது அது சனியுடன் தொடர்பில் அல்லது நீர் நவாம்சத்துடன்(2) தொடர்பில் இருக்க அல்லது சனி இருக்கும் வீட்டிலேயே இருக்க, பிறப்பானது ஒரு இருட்டு பகுதியில்(3) நிகழும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் நீச்ச வீட்டில்(4) இருக்க, பிறப்பானது வெட்ட வெளியில்(5) நிகழும். எனவே பிறப்பானது உதய இராசியானது அடிவானில்(6) செல்லும் நிலைக்கேற்ப நடைபெறும். பாவக் கோள்களானது சந்திரனிலிருந்து 4வது அல்லது 7வது வீட்டில் இருக்க, தாயானவர் பெருந்துயரத்துடன் (7) பாதிக்கப்படுவார்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     யவனாச்சாரியா கேந்திரம் எனும் வார்த்தையினை பயன்படுத்துகிறார், அதாவது 1வது, 4வது, 7வது 10வது வீடுகள்

(2)     நீர் நவாம்சம் என்பன கடகம் மற்றும் மீனம்

(3)     சூரியன் வலிமைமிகுந்து இருக்க, செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால் இருள் கிடையாது

(4)     சாரவளியின்படி, சந்திரனானது இலக்கினத்திலோ அல்லது 4வது வீட்டிலோ இருக்க, அது அதன் பாதிப்பிற்குரிய வீடாக இருந்தால், அந்த பிறப்பானது வெட்ட வெளியில் நிகழும்.

(5)     உரையாசிரியரின் கருத்துப்படி, வைக்கோலால் மூடப்பட்ட திடல்

(6)     அதாவது, அது தலையால் எழும் இராசியாக இருந்தால், குழந்தையின் தலை முதலில் வெளியே வரும்; அது காலால் எழும் இராசியாக இருந்தால் குழந்தையின் கால் முதலில் வெளியே வரும்; தலையும் காலும் சேர்ந்து எழும் இராசியாக இருந்தால், அதாவது மீன இராசியாக இருந்தால், குழந்தையின் கை முதலில் வெளியே வரும்.

வேறு சில உரையாசிரியர்களின் கருத்துப்படி, இந்தபகுதியின் வரிகளானது வேறு விதத்தில் விளக்கம் தரப்படுகிறது: “உதய இராசியின் அதிபதியானவர் நேரான நகர்வில் இருந்தால், பிறப்பானது இயற்கையான ஒன்றாக நிகழும்; வக்கிர நிலையில் இருந்தால், பிறப்பானது முறையற்று நிகழும் ஒன்றாக இருக்கும்”. இதன் விளக்கம் மானித்தாவை(Maniththa) சார்ந்துள்ளது

(7)     அல்லது பாவக் கோள்களானது சந்திரன் இருக்கும் இராசியிலேயே இருந்தால், தாயானவர் பெருந்துயரத்திற்கு ஆளாவார்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15