Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, December 26, 2015

குழந்தையின் தலையா? காலா? எது முதலில்? - பிருகத் ஜாதகா – 59

     
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஐந்து

பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்

16. தந்தைவழிக் கோள் வலிமையாக இருந்தால், குழந்தையானது தந்தையின் வீட்டில் பிறக்கும்(1); தாய்வழிக் கோள் வலிமையாக இருந்தால், பிறப்பானது தாயின் வீட்டில் நிகழும்(2); மூன்று சுபக் கோள்களும் அவைகளுக்கு பாதிப்பு தரும் வீட்டில் இருந்தால், பிறப்பானது சுவர்கள், மரங்கள் அது போல இடங்களின்(3) அடியில் நிகழும்; மேலும், அந்த மூன்று கோள்களும் ஒரே வீட்டில் இருக்க, அவை இலக்கினத்துடன் தொடர்பில் இல்லாமலும், சந்திரனும் ஒரு தனி வீட்டில் இருக்க, பிறப்பானது காட்டில்(4) நிகழும்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     அல்லது தந்தைவழி மாமன் அல்லது தந்தைவழி அத்தை வீட்டில்

(2)     அல்ல்து தாய்வழி மாமன் அல்லது தாய்வழி அத்தை வீட்டில்

(3)     இதுபோல, அதாவது ஆறுகள், கினறுகள், பூந்தோட்டங்கள் அல்லது குன்றுகளின் அருகில்.

(4)     ஆகவே, மூன்று கோள்கள் ஒரே வீட்டில் இருக்க, இலக்கினம் மற்றும் சந்திரனுடன் தொடர்பில் இருக்க, பிறப்பானது மக்கள் கூட்டமாக வசிக்கும் இடங்களில் நிகழும்.

17. சந்திரனானது சனியில் நவாம்சத்தில் இருக்க அல்லது இலக்கினத்திலிருந்து 4வது(1) வீட்டில் இருக்க, அல்லது அது சனியுடன் தொடர்பில் அல்லது நீர் நவாம்சத்துடன்(2) தொடர்பில் இருக்க அல்லது சனி இருக்கும் வீட்டிலேயே இருக்க, பிறப்பானது ஒரு இருட்டு பகுதியில்(3) நிகழும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் நீச்ச வீட்டில்(4) இருக்க, பிறப்பானது வெட்ட வெளியில்(5) நிகழும். எனவே பிறப்பானது உதய இராசியானது அடிவானில்(6) செல்லும் நிலைக்கேற்ப நடைபெறும். பாவக் கோள்களானது சந்திரனிலிருந்து 4வது அல்லது 7வது வீட்டில் இருக்க, தாயானவர் பெருந்துயரத்துடன் (7) பாதிக்கப்படுவார்.

குறிப்பு(சிதம்பரம் அய்யர்):

(1)     யவனாச்சாரியா கேந்திரம் எனும் வார்த்தையினை பயன்படுத்துகிறார், அதாவது 1வது, 4வது, 7வது 10வது வீடுகள்

(2)     நீர் நவாம்சம் என்பன கடகம் மற்றும் மீனம்

(3)     சூரியன் வலிமைமிகுந்து இருக்க, செவ்வாயுடன் தொடர்பில் இருந்தால் இருள் கிடையாது

(4)     சாரவளியின்படி, சந்திரனானது இலக்கினத்திலோ அல்லது 4வது வீட்டிலோ இருக்க, அது அதன் பாதிப்பிற்குரிய வீடாக இருந்தால், அந்த பிறப்பானது வெட்ட வெளியில் நிகழும்.

(5)     உரையாசிரியரின் கருத்துப்படி, வைக்கோலால் மூடப்பட்ட திடல்

(6)     அதாவது, அது தலையால் எழும் இராசியாக இருந்தால், குழந்தையின் தலை முதலில் வெளியே வரும்; அது காலால் எழும் இராசியாக இருந்தால் குழந்தையின் கால் முதலில் வெளியே வரும்; தலையும் காலும் சேர்ந்து எழும் இராசியாக இருந்தால், அதாவது மீன இராசியாக இருந்தால், குழந்தையின் கை முதலில் வெளியே வரும்.

வேறு சில உரையாசிரியர்களின் கருத்துப்படி, இந்தபகுதியின் வரிகளானது வேறு விதத்தில் விளக்கம் தரப்படுகிறது: “உதய இராசியின் அதிபதியானவர் நேரான நகர்வில் இருந்தால், பிறப்பானது இயற்கையான ஒன்றாக நிகழும்; வக்கிர நிலையில் இருந்தால், பிறப்பானது முறையற்று நிகழும் ஒன்றாக இருக்கும்”. இதன் விளக்கம் மானித்தாவை(Maniththa) சார்ந்துள்ளது

(7)     அல்லது பாவக் கோள்களானது சந்திரன் இருக்கும் இராசியிலேயே இருந்தால், தாயானவர் பெருந்துயரத்திற்கு ஆளாவார்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15




No comments: