வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஐந்து
பிறப்பு நேரம் தொடர்புடைய தகவல்கள்
20. மேசம்,
கடகம், துலாம், விருச்சிகம் அல்லது கும்ப இராசியானது இலக்கினமாகவோ அல்லது நவாம்ச இலக்கினமாகவோ
(எது வலிமை வாய்ந்ததோ) இருக்க, பிறக்கும் இடமானது வீட்டின் கிழக்குப் பகுதியாக இருக்கும்;
தனுசு, மீனம், மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால், அது வடக்குப் பகுதியாக இருக்கும்;
ரிசபமாக இருந்தால் மேற்கு பகுதியாக இருக்கும்; மகரம் அல்லது சிம்மமாக இருந்தால், பிறப்பிடமானது
வீட்டின் தெற்குப் பகுதியாக இருக்கும்.
21. உதய இராசியானது மேசம் அல்லது ரிசபமாக இருந்தால், பிரசவிக்கும்
பெண்ணின் படுக்கையானது அறையின் கிழக்குப் பகுதியில் இருக்கும்; உதய இராசியானது மிதுனமாக
இருந்தால், அது தென்கிழக்குப் பகுதியாக இருக்கும்; கன்னி எனில், தெற்காகவும்; கன்னி
எனில் தென்மேற்கு பகுதியாகவும்; துலாம் அல்லது விருச்சிகம் எனில் மேற்கு பகுதியாகவும்;
தனுசு எனில் வடமேற்கு பகுதியாகவும்; மகரம் அல்லது கும்பம் உதய இராசி எனில் படுக்கையானது
அறையின் வடக்குப் பகுதியாகவும்; மீனம் உதய இராசி எனில், அது வடகிழக்குப் பகுதியாகவும்
இருக்கும். இதே விதியானது, பெண் படுத்திருக்கும் படுக்கை அல்லது கட்டிலுக்கும் பொருந்தும்.
கட்டிலைப் பொருத்தவரையில், முன்னிரண்டு கால்களானவை உதயத்திலிருந்து 12வது மற்றும்
3வது வீட்டின் கால்பாகம் இருக்கும் இடத்திற்கேற்பவும், பின் கால்கள் 6வது மற்றும்
9வது(1) வீடுகளின் கால்பாகம் இருக்கும் நிலைக்கேற்பவும் இருக்கும்.
குறிப்பு (சிதம்பரம் அய்யர்):
(1)
அதாவது, 12வது மற்றும் 3வது வீடுகள் முன்கால்களைக்
குறிக்கும்; 9வது மற்றும் 6வது வீடுகள் பின் கால்களைக் குறிக்கும்; 3வது மற்றும் 6வது
வீடுகள் இரண்டு இடதுபுற கால்களைக் குறிக்கும். மேலும் உதய இராசியும் 2வது வீடும் கட்டிலின்
தலைப்பகுதியைக் குறிக்கும், 4வது மற்றும் 5வது வீடுகள் வலதுபுறத்தினைக் குறிக்கும்;
7வது மற்றும் 8வது வீடுகள் பின்கால்களுக்கு இடையே உள்ள பகுதிகளையும், 10வது மற்றும்
11வது வீடுகள் இடது புறத்தினையும் குறிக்கும். இப்போது, பொது இராசிகளானவை கட்டிலின் எந்தெந்த பாகங்களைக் குறிக்கின்றனவோ,
கட்டிலின் அந்த பகுதியானது சற்று வளைந்து காணப்படும், அதே நேரத்தில் அந்த இராசியானது
அதன் சொந்த கோளினால் பார்க்கப்பட்டாலோ அல்லது சுபக் கோளினால் பார்க்கப்பட்டாலோ இவ்வாறு இருக்காது. மறுபடியும், கட்டிலைக் குறிக்கக் கூடிய
அந்தந்த பகுதியில் அசுபக் கோள்கள் இருந்தால் கட்டிலின்
அப்பகுதி பழுதடைந்து இருக்கும்; ஆனால் அந்த அசுபக் கோள்கள் உச்சநிலையில், அதன் மூலத்திரிகோணம், அதன் நட்பு வீடுகளில் அல்லது
அதன் சொந்த வீட்டில் இருந்தால் அவ்வாறு இருக்காது.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment