இராசிகளைப் பிரித்ததில், பஞ்சபூதத் தத்துவம் மற்றும் உடற்கூறுபிரிவுகளைப் பார்த்தோம். இனி மற்ற பிரிவுகளைப் பார்ப்போம். இராசிகளை உடற்கூறு அடிப்படைக்கு பின்பு, பாலின பாகுபாட்டில் பிரித்துள்ளனர். அவைகளை ஆண், பெண் என இரு பாலின பாகுபாட்டில் பிரித்துள்ளனர். மூன்றாவது பாலினமான ‘இருபால்’ பிரிவில் எவ்வொரு இராசியும் இல்லை. அதே நேரத்தில், இவ்வாறு ஆண் பெண் பாலினமாகப் பிரித்ததற்கு எவ்வித கணித முறையும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. முதல் இராசி ஆண், இரண்டாவது இராசி பெண் எனும் வரிசைக் கிரமம் தான் இருக்கிறது. அதன்படி, மேசம் ஆண் இராசி எனத் தொடங்கி மீனம் பெண் இராசி என முடிவடைகிறது.
மீனம்
பெண்
|
மேசம்
ஆண்
|
ரிசபம்
பெண்
|
மிதுனம்
ஆண்
|
கும்பம்
ஆண்
|
இராசிகளில் ஆண் பெண் தத்துவம்
|
கடகம்
பெண்
|
|
மகரம்
பெண்
|
சிம்மம்
ஆண்
|
||
தனுசு
ஆண்
|
விருச்சிகம்
பெண்
|
துலாம்
ஆண்
|
கன்னி
பெண்
|
அதே வேளையில், ஒரே அதிபதியைக் கொண்ட இரண்டு இராசிகளில் ஒன்று ஆண் இராசியாகவும், மற்றொன்று பெண் இராசியாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இராசி
|
அதிபதி
|
பாலினம்
|
மேசம்
|
செவ்வாய்
|
ஆண்
|
விருச்சிகம்
|
பெண்
|
|
ரிசபம்
|
சுக்கிரன்
|
பெண்
|
துலாம்
|
ஆண்
|
|
மிதுனம்
|
புதன்
|
ஆண்
|
கன்னி
|
பெண்
|
|
தனுசு
|
குரு
|
ஆண்
|
மீனம்
|
பெண்
|
|
மகரம்
|
சனி
|
பெண்
|
கும்பம்
|
ஆண்
|
|
கடகம்
|
சந்திரன்
|
பெண்
|
சிம்மம்
|
சூரியன்
|
ஆண்
|
ஆக, பன்னிரெண்டு இராசிகளையும், வரிசை முறையில் ஆண் பெண் என வகைப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், ஒரு வீடு மட்டுமே உள்ள சூரியனின் சிம்மத்திற்கு – ஆண்; சந்திரனின் கடகத்திற்கு - பெண் என வரிசைப் படுத்தியுள்ளனர்.
ஆண்,
பெண் எனப் பிரித்ததில் ஒரு ஒழுங்கு முறை பின்பற்றியிருந்தாலும், இதனை வான் கணித அறிவியல்
அடிப்படையில் பிரிக்கவில்லை என்றே கூறத்தோன்றுகிறது. ஆனால், ஆண் - பெண் உறவின் முக்கியத்துவத்தினை
உணர்ந்து இரு இராசிகளில் ஒன்றினை ஆணாகவும், மற்றொன்றினை பெண்ணாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.
நமது பூமிக் கோளிற்கு சூரியனே முதன்மை என்பதால் அதன் இராசியான சிம்மத்திற்கு ஆண் எனவும்,
அதற்கு (ஒளி) இணையான சந்திரனின் இராசியான கடகத்திற்கு பெண் எனவும், பாலினப் பாகுபாடு
செய்துள்ளனர்.
அடுத்து – நிலைத் தன்மையில் இராசிகள்
No comments:
Post a Comment