வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - இரண்டு (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக்
கொள்கைகளும்
[கோள்கள்]
20. சூரியனும் சந்திரனும் மகரத்திலிருந்து ஏதேனும் ஆறு இராசிகளில் இருந்தால் அவை சேஷ்டபலம் (நகரும் வலிமை) பெறும். இதர கோள்கள் இதற்கு எதிர்மறை நகர்வில் இருந்தால் அல்லது சந்திரனுடன் இணைந்திருந்தால் (சமகமம்) அல்லது அதிக ஒளிர்வுடன் இருந்தால்(1) அல்லது அவை வடக்கு கோள்களுடன், கோள்களின் இணைப்பில் (யுத்தத்தில்) இருந்தால், வலிமை பெறும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
(1)
எனவே, புதன் சூரியனிலிருந்து 290, வெள்ளி சூரியனிலிருந்து 470, மற்றவை சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும்போது.
21. சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகியவை இரவில் காலபலம் (தற்காலிக வலிமை) பெறும்; புதன் இரவிலும் பகலிலும் வலிமை பெறும்; மற்ற கோள்கள்(1) பகலில் வலிமை பெறும். நீச்ச கோள்கள் தேய்பிறை நாட்களிலும் (கிருஷ்ண பட்சம்) பிற கோள்கள் வளர்பிறையிலும் (சுக்ல பட்சம்) பலம் பெறும். மேலும், ஒவ்வொரு கோளும் அதனதன் ஆண்டு, மாதம், நாள், நேரம் ஆகியவற்றில் பலம் கொண்டிருக்கும்(2).
குறிப்பு: (திரு சிதம்பரம்)
(1)
அதன்படி, சூரியன், வியாழன், வெள்ளி ஆகியவையாகும். காலபல இராசிகள் – பத்தி 19, பகுதி-I
(2)
அத்தகைய வலிமைக்கு நைசார்கிகபலம் என்று பெயர்.
பின்வரும் பக்கங்களில் அடங்கியுள்ள சோதிட உண்மைகளை பயன்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு வீடு மற்றும் அதன் அதிபதிகளின் வலிமை, பலவீனம் ஆகியவற்றுடன், அந்த வீட்டில் உள்ள கோள்கள் அல்லது தொடர்புடைய கோள்கள் ஆகியவற்றினை இதனை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். இதற்காகவும் வேறு பல பயனிற்காகவும் வெறும் இராசி சக்கரம் அல்லது நவாம்ச சக்கரத்தினை மட்டும் கோள்களின் நிலையோடு தோராயமாக ஒப்பிடக் கூடாது. ரேவதியிலிருந்து கோள்களும் அத்துடன் இலக்னம் ஆகியவற்றின் சரியான அட்சரேகையினையும் (ஸ்புடம்) அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பு: (நிமித்திகன்)
அதாவது, சோதிட பலன்கள் உரைத்தல் என்பதில் வெறும் இராசியும் நவாம்சமும் மட்டுமின்றி இன்னும் பல அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் பெரும்பாலான சோதிடர்கள் (அவ்வாறு சொல்லிக் கொள்பவர்கள்) வெறும் இராசியை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் சொல்வதை நடைமுறையில் காண முடிகிறது. சோதிடம் பொய்யாவதற்கு இதுவும் ஒரு காரணம்.
பகுதி இரண்டு – முற்றிற்று
அடுத்த பகுதி-3, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான சாதகங்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment