வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - நான்கு
கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்
12. (அந்த நேரத்தில்)(1) சனியானது உதய இராசியிலிருந்து ஒற்றைப்படை இராசியில்(2) இருந்தால், அந்த பிறப்பு ஆண் குழந்தையாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து நிலைகளிலும், பாலின நிலையானது அதிக பலன் மிகுந்த கோளின் நிலையினைப் பொருத்தே அமையும்.
குறிப்பு (திரு சிதம்பரம்)
(1) கருவுறுதல் அல்லது கேள்வி கேட்கும் நேரம் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2) இந்த யோகமானது முன்பு குறிப்பிட்ட யோகங்கள் இல்லாத நிலையில் மட்டுமே.
பி.கு. – யோகம் என்பது ஒன்று அல்லது மேற்பட்ட கோள்கள், அவை மற்றொன்றுடன் உள்ள தொடர்பிலோ, அல்லது முழுமையாகவோ, அதன் சுற்று நிலையில் அல்லது இரண்டிலும், இருக்கும் நிலை.
13. (கருவுற்ற நேரத்தில்), சந்திரனும் சூரியனும், முறையே இரட்டை மற்றும் ஒற்றை இராசியில் இருந்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புடன் இருந்தால்; அல்லது சனியும் புதனும் (முறையே இரட்டை மற்றும் ஒற்றை இராசியில் இருந்து) ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தால்; அல்லது செவ்வாய் (ஒற்றை இராசியிலிருந்து) இரட்டை இராசியில் உள்ள சூரியனுடன் தொடர்பில் இருந்தால்; அல்லது சந்திரனும் இலக்கினமும் ஒற்றை இராசியில் இருந்து செவ்வாயுடன்(இரட்டைப்படை இராசியிலுள்ள) தொடர்பில் இருந்தால்; அல்லது செவ்வாயானது முறையே இரட்டைப்படை இராசியிலுள்ள சந்திரனுடனும் ஒற்றைப்படை இராசியிலுள்ள புதனுடனும் தொடர்பில் இருந்தால்; அல்லது சுக்கிரன், இலக்கினம், சந்திரன் ஆகியவை (ஆண் இராசியில்) ஆண் நவாம்சத்தில் இருந்தால்; அந்த பிறப்பானது அலியாக(பொதுப்பால்) இருக்கும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
ஆண் பெண் யோகம் இல்லாத நிலையில்தான் நபும்சக (Napumsaka) யோகம் விளைவினை ஏற்படுத்தும்.
14. சந்திரனும் வெள்ளியும் இரட்டைப்படை இராசியில் இருந்து, புதன், செவ்வாய், வியாழன், இலக்கினம் ஆகியவை ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அல்லது ஒரு ஆண் கோள் இரட்டைப்படை இராசியில் உள்ள இலக்கினம், சந்திரன் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்தால், அல்லது புதன், செவ்வய், வியாழன், இலக்கினம் ஆகியவை பலமிகுந்து இருக்க, இரட்டைப்படை இராசியில் இருந்தால், அந்த பிறப்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளாக இருக்கும். மேலும், இலக்கினம் மற்றும் அனைத்து கோள்களும் உபய (பொது) நவாம்சத்தில் இருக்க, நவாம்சத்தில் உள்ள புதனுடன் தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பானது மூன்று குழந்தைகளாக இருக்கும். மிதுன நவாம்சத்தில் புதன் இருந்தால், அதில் இரண்டு குழந்தைகள் ஆணாக இருக்கும், அது கன்னி நவாம்சமாக இருந்தால் இரண்டு குழந்தைகள் பெண்ணாக இருக்கும். மேலும், மிதுன நவாம்சத்தில் புதன் இருக்க, பிற கோள்களும் இலக்கினமும் மிதுனம் மற்றும் தனுசு நவாம்சத்தில் இருந்தால், அந்த மூன்று குழந்தைகளும் ஆணாக இருக்கும்; புதன் கன்னி நவாம்சத்தில் இருக்க, பிற கோள்களும் இலக்கினமும் கன்னி மற்றும் மீன நவாம்சத்தில் இருந்தால், அந்த மூன்று குழந்தைகளும் பெண்ணாக இருக்கும்.
15. கடைசி நவாம்சமான தனுசு உதய இராசியாக, அனைத்து கோள்களும் தனுசு நவாம்சத்தில் பலமிகுந்து இருந்தால், மேலும் உதய இராசியானது பலமிகுந்த புதன் மற்றும் சனியுடன் தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பு மூன்றுக்கு(1) மேற்பட்டு இருக்கும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
(1) அதாவது 5 அல்லது 7 அல்லது 10 – உரையாசிரியரின் கருத்துப்படி..
பகுதி நான்கு – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment