Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, August 30, 2015

பிருகத் ஜாதகா – 52 – கருவின் வளர்ச்சி


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  நான்கு

கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்

16.        கரு தரித்த முதல் மாதத்தில் கரு உண்டாகிறது; இரண்டில், அது சதையாக வளர்கிறது; மூன்றில் அதில் மூட்டுகள் உருவாகின்றது; நான்கில் எலும்புகள் உருவாகின்றன; ஐந்தில் தோல் உருவாகிறது; ஆறில் முடி வளர ஆரம்பிக்கின்றது; ஏழில் உணர்வுகள் உண்டாகின்றன(1)
முதல் மாதத்திலிருந்து ஏழாம் மாதம் வரை கருவின் வளர்ச்சிக்குரிய அதிபதிகள் முறையே; சுக்கிரன், செவ்வாய், வியாழன், சூரியன், சந்திரன், சனி மற்றும் புதன் ஆகும்.

குறிப்பு (திரு சிதம்பரம்):
(1)    எட்டாவது மாதத்தில் குழந்தையானது தொப்புள் கொடியின் மூலம் உணவை எடுத்துக் கொள்கிறது. ஒன்பதாவது மாதத்தில் குழந்தையானது முழுமையாகி, பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கிறது. எட்டாவது மாதத்தின் அதிபதி, கரு உண்டான சமயத்தில் உள்ள உதய ராசியின் அதிபதியாகும். ஒன்பதாவது மாதத்தின் அதிபதி சந்திரன் ஆகும், பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியனாகும். யவனேஸ்வரரின் கருத்துப்படி, முதல் மாதத்தின் அதிபதி செவ்வாய் இரண்டாம் மாதத்தின் அதிபதி சுக்கிரன் ஆகும்.
கருதரித்த நேரத்தில் பாதிப்படைந்திருக்கும் அதிபதியின் மாதத்தில் கருச்சிதைவு உண்டாகிறது; ஆனால் ஏதேனும் கோள்கள் பலம் குன்றி இருந்தால், கருவானது அந்த அதிபதியின் மாதத்தில் பாதிப்பை அடைகிறது. சூரியன் பலமிகுந்து இருந்தால், குழந்தை தந்தையின் உருவை ஒத்திருக்கிறது, சந்திரன் பலமிகுந்து இருந்தால் தாயின் உருவை ஒத்திருக்கிறது. குழந்தையின் நலமும் நிலைமாற்றமும் கருவுற்ற நேரத்தில் பெற்றோரின் நிலையினைச் சார்ந்தே இருக்கும்.

17.        புதனானது உதய இராசியிலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாவது வீட்டில்(1) இருந்தால், அதே நேரத்தில் மற்றக் கோள்கள் பலம் குறைந்து இருந்தால், குழந்தையின் முகம், கால்கள், கைகள் ஆகியவை இருமடங்கு எண்ணிக்கையில் இருக்கும். சந்திரன் ரிசபத்தில் இருக்க, பாவக்கோள்கள் ரிக்ஷ சந்தியில்(2) இருந்தால், அந்த பிறப்பானது ஊமைக் குழந்தையாக இருக்கும்; ஆனால் சந்திரனானது சுபக் கோளுடன் தொடர்பில் இருந்தால், நீண்ட காலத்திற்கு பிறகு அக்குழந்தை பேசும்(3).

குறிப்பு (திரு சிதம்பரம்):
(1)    வேறு சில உரையாசிரியர்களின் கருத்துப்படி, திரிகோணம் எனும் வார்த்தையானது, மூலத்திரிகோணம் என கருத்தில், அதாவது கன்னி இராசி என கொள்ளப்படுகிறது. ஆனால் இது காரகரின் கருத்திற்கு எதிரானது.
(2)    அதாவது, கடகம், விருச்சிகம் மற்றும் மீன இராசிகளின் கடைசி நவாம்சமாகும்.
ஆனால், அசுபக்கோள்கள் சந்திரனுடன் தொடர்பில் இருந்தால், அக்குழந்தை எப்பொழுதும் பேசாது; அசுப மற்றும் சுப ஆகிய இரு கோள்களும் சந்திரனுடன் தொடர்பில் இருந்தால், அடுத்துள்ள பலமிகுந்த கோளின் தன்மைக்கேற்ப இருக்கும்.


பகுதி நான்குதொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: