வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - நான்கு (தொடர்ச்சி)
கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்
2. உயிரினங்களின் இயற்கையான சேர்க்கையான இருபாலின சேர்க்கையானது, அது மறைவு இராசிகளினால் குறிப்பிடப்படும். இருபாலின சேர்க்கை நேரத்தில், மறைவு இராசியானது அசுபக் கோள்களினால் ஆட்கொள்ளப்பட்டோ அல்லது அதன் தொடர்புடனோ இருக்குமானால், அந்த சேர்க்கையானது கோபத்துடனும், அது சுபக் கோள்களினால் இருந்தால், விளையாட்டும் சிரிப்புமாகவும் இருக்கும்.
குறிப்பு (திரு சிதம்பரம்)
உரையாசரியரின் கருத்துபடி, மறைவு இராசியானது சுப மற்றும் அசுபக் கோள்களினால் ஆட்கொள்ளப்பட்டோ அல்லது தொடர்புடனோ இருந்தால், அந்த சேர்க்கை நிகழ்வானது மகிழ்ச்சி மற்றும் வெறுப்பு இரண்டும் கலந்து இருக்கும்.
3. இருபாலின சேர்க்கை நேரத்தில், சூரியன், சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகியவை அவைகளின் நவாம்சத்திலும்(1), அல்லது வியாழன் உதய இராசியிலோ அல்லது அதிலிருந்து 5வது அல்லது 9வது வீட்டிலோ இருந்தால், அத்தகைய சேர்க்கையானது ஒரு குழந்தையை உண்டாக்கும். அவர்களிடம் வீரியத்தன்மை இல்லாது இருந்தால், சந்திரனின் வெளிச்சம் கண்பார்வையற்றவருக்கு போவதுபோல், மேற்படி யோகமானது (கோள்களின் நிலை) உபயோகமற்று போகும்.
குறிப்பு (திரு சிதம்பரம்)
(1) உரையாசிரியரின் கருத்துப்படி, மேற்படி நான்கு கோள்களும் அவைகளின் நவாம்சத்தில் இல்லையென்றாலும், சூரியனும் சுக்கிரனும் ஆணின் சாதகத்தில் உபசய வீட்டிலும் அவைகளின் நவாம்சத்திலும் இருந்தாலும் அல்லது பெண்ணின் சாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் உபசயவீட்டிலும் அதே நேரத்தில் அவைகளின் நவாம்சத்தில் இருந்தாலும் கரு உண்டாகும்.
பகுதி நான்கு – தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment