பொதுவாக
நாம் சாப்பிடும் உணவில், முருங்கைக்கீரை, அவரைக்காய், பீட்ரூட் எனும் சிவப்புக் கிழங்கு
ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவர். குறிப்பாகச்
சொல்லப்போனால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்தவகைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்
என அறிவுறுத்தப்படுவார்கள். அதாவது, இந்த வகைக் காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகம்
இருப்பதாகவும், அவை இரத்த உற்பத்திக்கும், இரத்த ஓட்டத்திற்கும் அவசியம் என்றும் மருத்துவர்கள்
கூறுவார்கள்.
இதற்கும்
செவ்வாய் கோளிற்கும் என்ன தொடர்பு. சென்ற பதிவில், செவ்வாயானது அதிக சிகப்பாக இருப்பதற்குக்
காராணம் ஃபெராக்சைடு எனப்படும் இரும்பு ஆக்சைடுகள் அதிகம் இருப்பதே என பதிவிட்டோம்.
இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், சோதிட வரையறைப்படி, செவ்வாய் ‘இரத்தம்
தொடர்பான செய்திகளுக்குக் காரகன்’ என அழைக்கப்படுகிறார். இரத்தம் – இரும்புச் சத்து;
செவ்வாய் – இரும்பு ஆக்சைடுகள்; செவ்வாய்-இரத்தம்; தொடர்பு இருக்கிறது அல்லவா?
செவ்வாயின்
சோதிடத் தன்மைப் பற்றி பல்வேறு சோதிட நூல்கள், பொதுவில் வைக்கும் தன்மைகளைக் காண்போம்.
செவ்வாய்
– சோதிட வரையறை
இரத்தம்
தொடர்புடையவை
உணர்ச்சி
வேகம்
உடன்பிறந்தோன்
நிலம்
வாகனம்
படைத்
தலைமை
இந்த
பொது வரையறைகள் என்பன பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இந்த வரையறைகளை விரிவுபடுத்தினால்,
இதன் நீட்சியின் தன்மைகளும் வரையறைக்குள் வந்துவிடும்.
இரத்தம்
தொடர்புடையவை எனும் போது – சோதிட நூல்களில் செவ்வாயை இரத்தக் கோள் (Bloody
Planet) என்றே அழைக்கின்றனர். இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின்கள் உருவாவதற்கு இரும்புச்
சத்து மிகவும் அவசியம். அதில் ஏற்படும் குறைபாடே இரத்த சோகை எனும் நோய் ஏற்படக் காரணமாகிறது,
செவ்வாயில் இரும்பு ஆக்சைடுகள் அதிகமாக இருப்பதே அது சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக்
காரணம் என இருந்தாலும், அதன் தாக்கம் அல்லது அங்கிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள்
நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, செவ்வாய் இரத்தம்
தொடர்புடையவற்றிற்கு காரகன் என்பது சற்று பொருத்தமாகவே உள்ளது.
அதே போல்,
இரத்தம் தொடர்புடையவை எனும் போது, விபத்துக்களால் ஏற்படும் இரத்த இழப்புகள்; இரத்தம்
தொடர்புடைய மகளிர் பிரச்சனைகள், வீரியம், கருச்சிதைவு
போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்,
உணர்ச்சி
வேகம் – எனும் பொதுத் தன்மையானது ஒருவரின் உள்ளம் சார்ந்த நிகழ்வாக இருந்தாலும், அதற்கு
அடிப்படைக் காரணம் நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டத்திற்கு தொடர்புடையது. இரத்த ஓட்டமானது
சீராக இருந்தால், உடலும் சீராக இருக்கும். அதில் மாற்றம் அடையும்போதுதான், மிகை அழுத்தம்,
குறை அழுத்தம் எனும் நிலைகள் ஏற்படுகிறது. அதன் விளைவாகவே, வெறி, கோபம், வீரம், போன்ற
நிலைகள் ஏற்படுகிறது. ஆகவே, உணர்ச்சி வேகம் என்பது இரத்த ஓட்டத்தின் விளைவாக ஏற்படுகிறது.
அதன் நீட்சியானது வெறித்தனம், அதீத கோபம் அல்லது அமைதி, வீரம், கோழை, தன்னம்பிக்கை
போன்ற வரையறைகளுக்கு காரணமாக உள்ளது.
உடன்
பிறந்தோன் – செவ்வாயின் பொது வரையறையில் மிக முக்கியமானது சகோதர உறவு அல்லது உடன் பிறந்தோன்.
சகோதரன் எனும் சொல்லே சகம் + உதிரம் (இரத்தம்) என்பதன் கூடுதலே ஆகும். ஆகவே உதிரமே
இங்கு தொடர்புடைய வரையறையாக உள்ளது. ஒரே வயிற்றில் பிறப்பவர்கள், சக (ஒரே) உதிரன்
(இரத்தம்) ஆகிறார்கள். அவர்கள் தொடர்புடைய செய்திகளுக்கும் காரகன் செவ்வாய்.
படைத்தலைமை
– வீரம் அதிக மிக்கவனே ஒரு படைக்கு அதிபதியாக இருக்க முடியும். வீரம் செவ்வாயின் பொது
வரையறையில் ஒன்றாக இருக்க, அதன் தொடர்பான் வீரத் தலைமை அதாவது படைத் தலைமை என்பதும்
இங்கு பொதுவரையறையில் வந்து விடுகிறது.
நிலம்
– இன்றைய நாளில் சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து வாழத் தகுதி உடையதாக இருக்க
வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் கோள் செவ்வாய். வாழிடம் தொடர்புடையது நிலம் என்பதால்,
செவ்வாய்க்கு நிலம் காரகனாக இருந்திருக்குமா என்பது தெரியவில்லை. அல்லது அக்காலத்தில்
வீரம் மிக்கவர்கள் அல்லது படைத் தலைவர்கள் எதிரியுடன் போரிட்டு ‘நிலங்களைக்’ கைப்பற்றியதால்,
நிலம் என்பது செவ்வாயின் காரகத்தில் வந்ததா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் நிலம்
தொடர்புடைய அனைத்து செய்திகளும் செவ்வாய்க் கோளிற்குரிய சோதிட பலன் காணும் மதிப்பீட்டில்
பொருந்தி வருகிறது.
வாகனம்
– இதனை தர்க்க முறையில் மெய்ப்பிக்கப் படுவதற்கு சற்று சிரமமாகவே இருக்கிறது.
மேலே
குறிப்பிட்ட பொது வரையறையில் உள்ள அனைத்தும் மற்றும் அவை தொடர்புடைய நீட்சிகளும் செவ்வாயின்
காரகத்திற்கு பெரும்பாலும் பொருந்தியே வந்துள்ளது – வருகிறது. எனவே இவையே செவ்வாயின்
பொது வரையறை என்பதாகக் கொள்ளலாம்.
விவாதத்திற்கு
இங்கு ஒரு கேள்வி எழுகிறது – செவ்வாயின் இயல்தன்மையோடு சோதிட வரையறைகள் ஒப்பு நோக்கில்
பொருந்திவருவதால், அதாவது அவனும் கருப்பு – அவன் போட்டிருக்கும் சட்டையும் கருப்பு
என்பதால் அவனுக்கு கருப்பு வண்ணம் பிடிக்கும் என தீர்மானிப்பது போல் – ஒப்பிடல் பொருந்தி
வருவதால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் எனும் கேள்வி எழுகிறது.
நமது
பிரபஞ்சத்தின் உண்மைகளை இது போன்ற தர்க்க முறை ஒப்பீட்டு முறைப்படிதான் கண்டறிய முயன்று
கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தர்க்க முறை விதிகள் மெய்ப்பிக்கப்பட்டும், ஒரு சில
தர்க்க முறைகள் விலக்கப்பட்டும் உள்ளன. இந்த விதி முறை, சோதிடம் போன்ற தர்க்க முறை
சார்ந்த, நிகழ்தகவு அடிப்படையில் கணிதம் செய்யப்படுவதிலும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
சில சமயங்களில் அது பொருந்தாமலும் போகிறது. அவ்வாறு பொருந்தாமல் போவதில், கணிதப்பிழையும்
தர்க்கப் பிழையும் காரணமாய் அமைந்து விடுகின்றன.
ஆகவே
மீண்டும் சொல்கிறேன் – நான் இங்கு வரையறைப்படுத்த முயன்றிருப்பது இப்படி இருக்கக்கூடும்
என்பதை தர்க்க முறை வாதத்தில்தான். அதே வேளையில் இந்த வரையறைகள் நிகழ்தகவின் அடிப்படையில்,
முன்னோர்கள் கண்டுணர்ந்து, கேட்டுணர்ந்து வகுத்தவை என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அடுத்து புதன்
No comments:
Post a Comment