வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
இறப்பு நிலை
…..தொடர்கிறது
2. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சூரியனும் செவ்வாயும் உதய இராசியிலிருந்து 4வது அல்லது 10வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் கல்லால் அடிபட்டு இறப்பார். 4வது, 7வது, 10வது வீடுகளில் முறையே சனி, சந்திரன், செவ்வாய் ஆகியவை இருந்தால், அந்த மனிதர் கினற்றில் விழுந்து இறப்பார். சூரியனும் சந்திரனும் கன்னியில் இருந்து, அவை அசுபக் கோள்களால் பார்க்கப்பட்டால் அவரது மரணம் உறவினரால் ஏற்படும். உதய இராசியானது பொது வீடாக (உபய) இருந்து அதில் சூரியனும் சந்திரனும் இருந்தால், இறப்பானது நீரில் மூழ்குவதால் ஏற்படும்.
3. ஒருவர் பிறக்கும் நேரத்தில், கடகத்தில் சனி இருக்க, சந்திரன் மகரத்தில் இருக்க, அந்த மனிதர் உடல் வீங்கி இறப்பார். சந்திரன் மேசத்திலோ அல்லது விருச்சிகத்திலோ அசுபக் கோள்களுக்கு இடையில் இருந்தால், அவரது இறப்பானது ஆயுதத்தால் அல்லது நெருப்பால் ஏற்படும். சந்திரன் கன்னியில் இருக்க, அது அசுபக் கோள்களுக்கு இடையில் இருந்தால், இறப்பானது இரத்த கெட்டுப்போனதால் அல்லது இரத்தம் தேவையால் ஏற்படும். சந்திரன் மகரத்தில் அல்லது கும்பத்தில் இருக்க, அது அசுபக் கோள்களுக்கு இடையில் இருந்தால், இறப்பானது தூக்கு மாட்டிக் கொண்டு அல்லது நெருப்பால் அல்லது கீழே விழுந்து ஏற்படும்.
……….
இறப்பு நிலை தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment