என்ன நேற்று மழை வந்ததா? யாருடைய கணிப்பு துள்ளியமாக இருந்தது. வானிலை நிலவரம் குறித்த கணிப்பின் அடிப்படைக் கணிதம் ஒன்றாக இருந்தாலும், அவரவர்கள் பின்பற்றும் கணிப்பு முறைகளில் சிற்சில வேறுபாடுகள் இருப்பதால், துள்ளியம் என்பதில் முழுமை பெறுவதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒருவரின் கணிப்பு மிகத் துள்ளியமாக இருக்கிறது. அல்லது பல் இளித்து வெயில் காய்கிறது. ஆனாலும் 1970-களில் வெளிவந்த வானிலைக் குறிப்புகளைக் காட்டிலும் இப்போது வெளிவரும் வானிலை குறிப்புகள் துள்ளியத்தில் மிக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றன. பிழை மதிப்பீட்டுக் கணிதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த வளர்ச்சி, சோதிடக் கணிப்பு முறைகளில் மேம்பட்டு இருக்கிறதா எனில், இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் நாட்டில் சோதிடர்களின் எண்ணிக்கையானது மால்த்யூசின் மக்கள் தொகைக் கோட்பாட்டில் கூறப்பட்ட வடிவியல் விகிதத்தில்(geometrical ratio) பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.
அப்படியானால் சோதிடம் என்பது மெய்ப்பிக்க முடியாத கோட்பாட்டைப் பின்பற்றுகிறதா எனும் கேள்வி எழுவதில் தவறில்லை.
ஒருமுறை திருச்சியில் நடைபெற்ற சோதிடக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் (பார்வையாளராக) வாய்ப்புக் கிடைத்து சென்றிருந்தேன். அங்கு ஒரு குறிப்பிட்ட நாளிதழில் சோதிட பலன் எழுதும் மக்கள் அறிந்த சோதிட அறிஞர் உரையாற்றினார். அவர் தமது உரையில் – சோதிட பலன் உரைக்கும்போது பொதுவான நல்ல செய்திகளை மட்டுமே கூறுங்கள். அது பலிக்கவில்லை என்றாலும் ‘சோதிடர் நல்லதாகத்தான் கூறினார், ஆனால் என் போதாத நேரம் பலிக்கவில்லை’ என்று சோதிடம் கேட்டவர் விட்டுவிடுவார். ஆனால், சரியாகச் சொல்லுகிறேன் என்று அவருக்கு ஏற்படக்கூடிய தீய பலன்களைக் கூறி, அது சரியாக பலித்துவிட்டால், ‘பாவி அப்போதே சொன்னான், அப்படியே பலித்துவிட்டது’ என்று திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் சரியாக கணித்து சொன்னீர்கள் என்று பாராட்ட மாட்டார்கள். எனவே, நல்ல பலன்களை மட்டும் கூறுங்கள் அது பலிக்காவிட்டாலும் பரவாயில்லை என்றார். அவர் கூறிய இந்த அணுகுமுறையானது உளவியல் அடிப்படையிலும், தொழில் முறையிலும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சோதிடக் கணித அடிப்படையில் அது மிகவும் தவறானது என்பது என் எண்ணம். அது தொழில் முறை சோதிடர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் சோதிட கணிதஅறிவியல் மேம்பட அல்லது வளர்ச்சி அடைய உதவாது. ஆனால் யதார்த்தத்தில் 90% சோதிடர்கள் தொழில்முறை சோதிடர்களாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மீண்டும் தலைப்பிற்கு வருவோம். சோதிட பலன் உரைத்தல் என்பது கற்பிதங்களையும் அனுமானங்களையும் மட்டுமே உள்ளடக்கியதா? ஆம் எனில் அது எவ்வாறு அறிவியற்கணிதமாக இருக்க முடியும்?
அறிவியல் என்றால் என்ன? நிரூபிக்கப்படும் எவ்வித கோட்பாடும் அறிவியல்தான். அது கற்பிதங்களையும் அனுமானங்களையும் உள்ளடக்கியதுதான். இது சரியான கருத்து இல்லை என்பவர்கள், இதற்கு பதி சொல்லுங்கள் -
அண்டவியல் (cosmology) என்பது அறிவியலா இல்லை அனுமானமா? அதன் அடிப்படைக் கோட்பாடான பெருவெடிப்பு கொள்கை என்பது அறிவியலா அல்லது அனுமானமா?
இது நாசாவின் தளத்திலிருந்து எடுத்த வரிகள் - The Big Bang. Astronomers combine mathematical
models with observations to develop workable theories of how the Universe came
to be. அதாவது இந்த அண்டம் எவ்வாறு உருவாகி இருக்கக்கூடும் என்பதை வானியலாளர்கள் கணித மாதிரிகளையும் உணர்ந்தவைகளும் ஒன்றிணைத்து உருவாக்கியது பெருவெடிப்பு கொள்கை.
ஆக பெருவெடிப்புக் கொள்கையானது ஒரு தேற்றம் (theory). அத் தேற்றத்தினை அறிவியலாளர்கள் அண்ட அறிவியல் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அப்படியானால் இது சோதிடத்திற்கும் பொருந்தும் அல்லவா? சோதிட ஆய்வாளர்கள் கணித மாதிரிகளையும் உணர்ந்தவைகளும் ஒன்றிணைத்து உருவாக்கியது சோதிடக் கொள்கை என்றும் கூறலாம் அல்லவா?
கொஞ்சம் பொறுங்கள் – பெருவெடிப்புக் கொள்கையே இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. வேறு சில அறிஞர்களின் கருத்துப்படி, அது ஒரு முட்டாள்தனமான கொள்கை. ஏனெனில் (1) It violates the first law of thermodynamics, which says you can't create
or destroy matter or energy (2) the formation of stars and galaxies violates
the law of entropy என்று நீண்டு செல்கிறது.
அப்படியானால் சோதிடம்?
மேலும் தொடர்வோம்….
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
2 comments:
super
https://www.youtube.com/watch?v=r0qsZBNxAg8
very nice
https://www.youtube.com/edit?o=U&video_id=IBMOoz_X-B4
Post a Comment