தொடர்ச்சி....
தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் அதற்குரிய பலன்கள் கிடைக்காமல்
போவதற்கு, சாதகக் கட்டத்தில் கோள்கள் எங்கு அமைந்திருக்கின்றன எனும் நிலையே காரணமாக
இருக்கிறது.
அதாவது, 9-க்கும் 10-க்கும் உரிய கோள்கள் நல்ல நிலையில் இருக்க
வேண்டியது முக்கியம். அதாவது, மறைவு, நீச்சம், பகை, வக்கிரம், பலமற்று இருத்தல், என்பன
போன்று இருப்பது முழுமையான அல்லது பலனே இல்லாது போவதற்கு காரணமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, எந்த ஒரு யோக அமைப்பின் பலனும் அதற்குரிய கால
திசையில் மட்டுமே பலனைக் கொடுக்கும் என்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆக தர்மகர்மாதிபதி
யோகத்தின் பலன் என்பது அவ்விரண்டு கோள்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து
மட்டும் அல்லாமல் அவைகளுக்குரிய காலதிசையினையும் பொருத்தே கிடைக்கக் கூடும்,
எடுத்துக்காட்டாக-
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சாதகங்களின் அமைப்பினைப் பார்ப்போம்
(1) இலக்கினம்
– மேசம்; 9-ம் இடம் தனுசு (அதிபதி – குரு); 10-ம் இடம் மகரம் (அதிபதி – சனி). இங்கு குருவும் உச்சம்; சனியும் உச்சம். அதே வேளையில் சனிக்கோளின் 10-பார்வையானது குருவின் மீது. எனவே,
இது தர்மகர்மாதிபதி யோகத்திற்கு உரிய அமைப்பு எனலாம். மேலும் இங்கு சிறப்பான நிலை என்னவென்றால்,
குரு முதல் நாற்கரத்தில்(கேந்திரத்தில்), சனியானது இரண்டாவது நாற்கரத்தில்(கேந்திரத்தில்)
இருப்பதும் சிறப்பான நிலை என்பதால், அந்த நிலைக்குரிய பலனும் கிடைக்கக் கூடும். [சனி
7-ல் இருக்கலாமா? குருவிற்கு கேந்திராதிபத்திய தோசம் உள்ளதா? என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம்].
(2) இலக்கினம்
– கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி-குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி-செவ்வாய்); இலக்கினத்தில்
குரு உச்சம்; 7-ல் செவ்வாய் உச்சம்; 7-ம் பார்வையாக இரு கோள்களும் ஒன்றை ஒன்று பார்க்கின்றன.
எனவே, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உண்டு. மேலும், இரு கோள்களும் உச்ச நிலையில் இருப்பதால்
மிக சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். [7-ல் செவ்வாய் – செவ்வாய் தோசமா என்பதை தனியாக
செவ்வாய் தோசம் பற்றிய பதிவில் அலசுவோம்]
(3) இலக்கினம்
– கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி – குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி – செவ்வாய்).
இரண்டும் ஒன்றை ஒன்று 7-ம் பார்வையால் பார்த்துக் கொள்கின்றன. எனவே தர்மகர்மாதிபதி
யோக அமைப்பு உண்டு. ஆனால், இங்கு 9-ம் அதிபதியும் நீச்சம், 10-ம் அதிபதியும் நீச்சம். எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் பலன்
என்பது கேள்விக்குறியே.
(4) இதுவும்
மேலே கூறிய அமைப்பே. தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் இரண்டும் நீச்ச நிலையில்
இருப்பதால் சிறப்பில்லை என கூறினாலும், இங்கு வேறொரு நிலையினை நாம் பார்க்க வேண்டும்.
இலக்கினாதிபதி சந்திரன் உச்ச நிலையில் இருப்பதால், சந்திரனின் வீட்டில் இருக்கும் செவ்வாய்
நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது. அதுபோலவே சனியின் வீட்டில் இருக்கும் குருவும்,
சனியின் உச்ச நிலையால் நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது. ஆக, 9, 10-க்கு உரிய கோள்கள் நீச்சம் அடைந்திருந்தாலும்,
அவை நீச்ச பங்கம் அடைந்திருப்பதால், தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவைகளின் தசாக்காலத்தில்
கிடைக்கும் எனலாம்.
மேலே கூறியவை எடுத்துக்காட்டுகளே. இதுபோன்று எண்ணற்ற இணைவுகளில்
தர்மகர்மாதியோக அமைப்பு உள்ள சாதகங்கள் அமையக் கூடும். ஆக, தர்மகர்மாதிபதி யோகத்தின்
பலன் என்பது அக்கோள்கள் இருக்கும் நிலையினில் மட்டுமல்லாமல், சாதகத்தில் உள்ள பிறக்கோள்களின்
அமைப்பிற்கேற்பவும், தசாபுத்திக் காலத்தின் நிலைக்கேற்பவும் பலன் இருக்கும் என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு என்பது 9, 10-ம் இடத்தின் அதிபதிகளின்
இணைவு அல்லது தொடர்பால் ஏற்படக்கூடிய அமைப்பாகும். அதற்குரிய பலன்கள் என்பது அவை இருக்கும்
நிலைகளுக்கு ஏற்ப, சிறப்பாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக் கூடும் அல்லது பலனே இல்லாமலும்
போகக் கூடும்.
[குறிப்பு: மேற்கூறிய விளக்கம் அனைத்து யோகங்களுக்கும் பொருந்தும்]
யோகங்கள்
தொடரும்……
No comments:
Post a Comment