வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
15. ஒருவரின்
பெயரில் உள்ள மாத்திரையை இரண்டால் பெருக்கவும்; நிழலின் நீளத்தினைக் கூட்டவும்; அவ்வாறு
கிடைத்ததை 27-ஆல் வகுக்கவும்; கிடைக்கும் மீதியானதை அவிட்டத்திலிருந்து எண்ணி வர பிறந்த
போது உள்ள நட்சத்திரம் கிடைக்கும்.
குறிப்பு:
பெயர் என்பது ஒருவருக்கு பிறந்தபோது சூட்டப்பட்ட பெயராகும். குற்றெழுத்து ஒலி ஒரு மாத்திரை,
நெட்டெழுத்து ஒலி இரண்டு மாத்திரை, மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை. நிழலின் நீளம்
என்பது சங்கு எனும் 12 அங்குல அளவுள்ள சங்கின் நிழலாகும்.
[நிமித்திகன்:
மாத்திரை – கைநொடிக்கும் பொழுது அல்லது கண் இமைக்கும் பொழுது என்பது ஒரு மாத்திரை அளவாகும்]
16. திக்கு
எண்கள் என்பன, கிழக்கு-2; தென்கிழக்கு-3; தெற்கு-14; தென்மேற்கு-10; மேற்கு-15; வடமேற்கு-21;
வடக்கு-9; வடகிழக்கு-8 ஆகும். கேள்வி கேட்பவர் பார்த்திருக்கும் திசைக்கு உரிய எண்ணை
15-ஆல் பெருக்கவும்; அவ்வாறு பெருக்கி வந்த எண்ணுடன், அதே திசையை பார்க்கும் உடன் வந்தவர்களின்
எண்ணிக்கையையும் கூட்டவும், அதனை 27-ஆல் வகுக்கவும். கிடைக்கும் மீதியானது அவிட்டத்திலிருந்து
எண்ணிவர, பிறந்தபோது உள்ள நட்சத்திரம் ஆகும்.
குறிப்பு:
இந்த
பத்தி மற்றொரு முறையில் பிறந்தபோது உள்ள நட்சத்திரத்தினை அறியும் முறையினைக் கூறுகிறது.
17. இவ்வாறு பல்வேறு கணித முறைகளைக் கொண்டு சாதகம்
இல்லாதவர்களுக்கும் உரிய சாதகத்தினைப் படைக்க முடியும். அறிவார்ந்தவர்கள் இவைகளைக்
கவனமுடன் படித்து பயன்படுத்தவும்.
சாதகம் இல்லாத நிலை – முற்றும்.
அடுத்து
– பகுதி – 27 - திரேக்காணத்தின் பலன்கள்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment