வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
11. மேற்படி முறையில் கணித்த எண்ணை(1), தேவை எனில்
மேற்சொன்னவாறு 10, 8, 7, 5 ஆகியவற்றால் பெருக்கவும்; அதனுடன் 9-ஐக் கூட்டவும் அல்லது
கழிக்கவும்; அவைகளுக்குரிய எண்ணால் வகுக்கவும்(2), அதன்படி பிறந்த பொழுதின் ஆண்டு,
ரிது, மாதம், சந்திர நாள், பகல் அல்லது இரவு, நட்சத்திரம், கதி, உதய இராசி, உதய நவாம்சம்
ஆகியவற்றை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
குறிப்பு:
இந்த
பத்தியிலும், இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பத்திகளிலும், ஆசிரியர் மற்றொரு கணக்கீட்டு
முறையில், ஒருவரின் பிறந்த ஆண்டு, மாதம் போன்றவற்றைக் கண்டறியும் வகையினைக் குறிப்பிடுகிறார்.
(1) பத்தி
9-ன் இறுதியில் கண்டுபிடித்த எண்.
(2) பின்வரும்
மூன்று பத்திகளில் இத்தகைய மற்றும் வகுக்கும் முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.
12. 10-ஆல் பெருக்கிவந்த எண்ணைக் கொண்டு ஆண்டினையும்(வயது),
ரிது மற்றும் பிறந்த மாதத்தினையும்(1) கணிக்க முடியும்; 8-ஆல் பெருக்கிவந்த எண்ணைக்
கொண்டு பட்சத்தினையும் (15 நாட்கள்) திதியையும் (சந்திர நாள்) கணிக்க முடியும்(2).
குறிப்பு:
(1) பெருக்கிவந்த
தொகை என்பது கடைசி பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கல் தொகைகளுடன், தேவையெனில்
9-ஐக் கூட்டியது அல்லது கழித்தது. அவ்வாறான எண்ணிக்கையினை 120-ஆல் வகுக்க, வரும் மீதியைக்
கொண்டு அந்த மனிதரின் வயதினைக் கண்டுபிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை 6-ஆல் வகுத்தால்
வரும் மீதியைக் கொண்டு அந்த மனிதரின் சிசிர ரிதுவைக் கண்டு பிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை
2-ஆல் வகுக்க, வரும் மீதியைக் கொண்டு, முதல் அல்லது இரண்டாவது மாதத்தின் ரிதுவைக் கண்டுபிடிக்க
முடியும்.
(2) இந்த
பெருக்கம் என்பது சென்ற பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கத்தின் இரண்டாவது பகுதியாகும்,
அது தேவைக்கேற்ப 9-ஐக் கூட்டியது அல்லது கழித்ததாகும். இந்த எண்ணிக்கையினை 2-ஆல் வகுக்க
கிடைக்கும் மீதியானது பிறந்த பொழுதின் 15 நாட்களைக் கொடுக்கும். அதே எண்ணை 15ஆல் வகுக்க,
கிடைக்கும் மீதியானது சந்திர நாளைக் கொடுக்கும்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment