வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
10. அவ்வாறு கிடைத்த எண்ணை 7-ஆல் பெருக்கி, உதய இராசி
சரம் (நகர்வு) எனில் அதனுடன் 9-ஐக் கூட்டவும், அல்லது உதய இராசி உபயம்(சமம்) எனில்
9-ஐக் கழிக்கவும், அல்லது உதய இராசி ஸ்திரம்(நிலை) எனில் அப்படியே எடுத்துக் கொள்ளவும்(1),
அவ்வாறு கிடைத்த எண் அல்லது வித்தியாச எண் அல்லது பெருக்கலின் எண், அவைகளுக்கேற்ப
27-ஆல் வகுக்கவேண்டும். மீதம் வருவது, கேள்வி
கேட்பவரின் பிறந்தபோது உள்ள நட்சத்திரத்தின் வரிசை எண் ஆகும். இதே போன்ற கணிதத்தினை,
3வது, 5வது, 6வது 7வது வீடுகளின் ஸ்புடத்திற்கும் செய்யவும்(2), அதன்படி, கேள்வி கேட்டவரின்
சகோதரர், மகன், எதிரி, மனைவி ஆகியோரின் நட்சத்திரத்தினை அறியமுடியும்.
குறிப்பு:
(1) பட்ட-உத்பலரின்
கருத்துப்படி, உதய திரேக்கானமானது வீட்டின் முதல் திரேக்கானம் எனில், பெருக்கிவந்த
எண்ணுடன் 9-ஐக் கூட்டவேண்டும்; 2வது எனில், 9-ஐக் கூட்டவும் வேண்டாம் கழிக்கவும் வேண்டாம்;
3வது திரேக்கானம் எனில் 9-ஐக் கழிக்கவும்.
(2) இலக்கின
ஸ்புடத்துடன் 2 வீடுகளைக் கூட்டினால், 3வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும் அது அவரின்
சகோதரரைக் குறிக்கும்; 4 வீடுகளைக் கூட்டினால், 5வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும் அது
அவரின் மகனைக் குறிக்கும்; இலக்கின ஸ்புடத்துடன் 5 வீடுகளைக் கூட்டினால், 6வது வீட்டின்
ஸ்புடம் கிடைக்கும், அது அவரின் எதிரியைக் குறிக்கும்; இலக்கின ஸ்புடத்துடன் 6 வீடுகளைக்
கூட்டினால், 7வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும், அது அவரின் மனைவியைக் குறிக்கும். இராசி
மண்டலத்தின் வீடுகளின் பல்வேறு ஸ்புடத்தினை அத்தகைய வீடுகளில் உள்ள கோள்களின் காரணிகளால்
பெருக்கி, அதனைக் கூட்டி, அவ்வாறு வருவதை 7-ஆல் பெருக்கி, தேவைக்கேற்ப அதனுடன் 9-ஐ
கூட்டி அல்லது கழித்து, அல்லது 27-ஆல் வகுத்து வரும் மீதியினைக் கொண்டு பல்வேறு மனிதர்களின்
நட்சத்திரத்தினை உங்களால் கண்டுபிடித்து கூறமுடியும்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment