Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, November 21, 2017

சாதகம் இல்லாதவர்கள் – பகல்-இரவு-ஓரை- அறிதல் - பிருகத் ஜாதகா – 204


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது



13.    அவ்வாறு பெருக்கி வந்த(1) எண்ணை 7-ஆல் பெருக்க வரும் எண்ணைக் கொண்டு, பிறப்பானது பகலில் அல்லது இரவில் நடந்ததா என்பதையும் நட்சத்திரத்தினையும் அறிய முடியும்.


குறிப்பு:

1.   இது 11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் மூன்றாவது ஆகும், அதுனுடன் தேவையெனில் 9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். வரும் எண்ணை 2-ஆல் வகுக்க, மீதம் ஒன்று வந்தால் பகல் எனவும் என்றுக்கு மேல் வந்தால் இரவு எனவும் கொள்ள வேண்டும். அதேபோல் அந்த எண்ணை 27-ஆல் வகுக்க வரும் மீதியை அசுவனி முதல் கணக்கிட்டு நட்சத்திரத்தினைக் கண்டு பிடிக்க முடியும்.



14.    அவ்வாறு பெருக்கிவந்த(1) எண்ணை 5-ஆல் பெருக்க வரும் எண்ணைக் கொண்டு, கதி, உதய இராசி, ஓரை, உதய நவாம்சம் ஆகியவற்றை அறிய தீர்மானிக்கலாம்.


குறிப்பு:

1.   இது 11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் கடைசி ஆகும், அதுனுடன் தேவையெனில் 9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். அதனை பிறந்த பொழுதான் பகலின் கதியின் எண்ணிக்கை அல்லது இரவின் கதியின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்; அவ்வாறனதில் வரும் மீதியானது பிறந்தபோது உள்ள சூரிய உதயத்தின் கதிகை அல்லது மறைவின் கதியைக் குறிக்கும். அதே எண்ணை 12-ஆல் வகுக்க, வரும் மீதியானதை மேசத்திலிருந்து கணக்கில் கொண்டால், உதய இராசி கிடைக்கும். அதே எணை 2-ஆக் வகுக்க, கிடைக்கும் மீதியானது 1 எனில் முதல் ஓரையாகவும் ஒன்றிற்கு மேல் எனில் 2வது ஓரையாகவும் பிறந்த பொழுது உள்ளது என்பதை அறியலாம். அந்த எண்னை 9-ஆல் வகுக்க வரும் மீதியானது பிறந்தபோது உள்ள உதய இராசியிலிருந்து எண்ணிவர, நவாம்சத்தின் உதய நவாம்சம் கிடைக்கும்.
இதுபோலவே, அதனை 12-ஆல் வகுக்க வரும் மீதியானது உதய துவதசாம்சத்தினைக் கொடுக்கும்; 3-ஆல் வகுக்க, கிடைக்கும் மீதியானது உதய திரேக்காணத்தைக் கொடுக்கும்.

பின்குறிப்பு: மேற்சொன்ன எல்லா வழிகளிலும், மீதி என்பது இராசி, பாகை, நொடி ஆகியவற்றின் வடிவத்திலேயே உள்ளது. இராசியைக் குறிப்பிடும் எண்ணே, பிறக்கும்போது உள்ள குறிப்பிட்ட நட்சத்திரம், வருடம், பட்சம், திதி, கதி போன்ற எண்களைக் குறிக்கிறது – பாகையும் நொடியும் மட்டுமே எண்களை ஒட்டுமொத்தமாக அதிகப்படுத்திகிறது.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

No comments: