வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….
3. மிதுன இராசியில்
சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருப்பார்;
காம இச்சையில் திறமையானவராக இருப்பார்;, சிவப்பு நிற விழிகளைக் கொண்டவராகவும் இருப்பார்;
சாத்திரங்களை கற்றவராகவும் இருப்பார். செய்திகளை சுமந்து செல்பவராக இருப்பார், சுருட்டை
முடியும் கூர்மையான அறிவும் கொண்டிருப்பார்; நகைப்பு திறனும், பிறரின் மனதில் உள்ளதை அறியும்
திறனும், விளையாட்டில் ஆர்வமும் கொண்டிருப்பார்; அழகிய குணாதிசயம் கொண்டிருப்பார்;
இனிமையாக பேசக்கூடியவராக இருப்பார்; நன்றாக உணவும் உண்ணுவார்; இசையில் ஆர்வமும், நாட்டிய
விதிகளில் திறனும் கொண்டிருப்பார்; திருநங்கையுடன் உறவு கொள்பவராக இருப்பார்; புடைப்பான
நாசியைக் கொண்டிருப்பார்.
4. கடக இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர்
உடலை வளைத்து வேகமாக நடப்பவராக இருப்பார்; உயரமான இடுப்பினைக் கொண்டிருப்பார்; பெண்களால்
ஆளப்படுபவராக இருப்பார்; நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பார்; சோதிடம் கற்பார்; நிறைய
வீடுகள் கொண்டிருப்பார்; சந்திரனைப்போல் இருக்கும் சொத்து அதிகரிக்கும் குறையும்; குட்டையாக
இருப்பார்; வலிமையான கழுத்தினைக் கொண்டிருப்பார்; அன்பான வார்த்தைகளால் வெற்றி கொள்ளும்
திறன் இருக்கும்; நண்பர்களுடன் இணைந்திருப்பார்; தண்ணீர் மற்றும் காடுகளில் ஆர்வம்
கொண்டவராக இருப்பார்.
இராசிகளில் சந்திரன் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment