வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினாறு
நட்சத்திரங்கள் (அ) நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி
13. சதயம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் கடுமையாக பேசுபவராகவும், உண்மையானவராகவும், துன்பம் அனுபவிப்பவராகவும், எதிரிகளை வெற்றி கொள்பவராகவும், வேலையில் துணிந்து ஈடுபடுபவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார்.
பூரட்டாதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் துன்பங்கள் அனுபவிப்பவராகவும், தனது சொத்துக்களை பராமரிப்பதை தன் மனைவியிடம் கொடுப்பவராகவும், தனித்துவமான பேச்சு(1) உடையவராகவும் இருப்பார்.
குறிப்பு: (1) அல்லது பணம் சம்பாதிப்பதில் திறமையானவர்.
14. உத்திரட்டாதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் திறமையாக பேசுபவராகவும், மகிழ்ச்சியானவராகவும், குழந்தைகளும் பேரக்குழந்தகளும் கொண்டிருப்பவராகவும், எதிரிகளை வெல்பவராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் இருப்பார்.
ரேவதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் அழகான உடலமைப்பும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், சண்டையில் வீரம் மிக்கவராகவும், பிறரின் சொத்துக்களை அபகரிக்காதவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்.
குறிப்பு: மேற்கூறிய விளைவுகளானது, குறிப்பிட்ட நட்சத்திரத்தினைக் கடக்கும் போது சந்திரன் வலிமையாக இருந்தால் மட்டுமே நிகழும்.
நட்சத்திரங்களில் சந்திரன் முடிவுற்றது
…
அடுத்து இராசிகளில் சந்திரன்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment