வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….
5. சிம்ம இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர்
முன்கோபியாகவும், பெரிய தாடையும், பரந்த முகமும், பழுப்பு நிறக் கண்களும் கொண்டிருப்பார்;
குழந்தை குறைவாக இருக்கும்; பெண்களை வெறுப்பார்; அசைவ உணவில் ஆர்வம் கொண்டவராகவும்,
காடு மலைகளை விரும்பவராகவும் இருப்பார்; சிறு செயல்களுக்காக நீண்ட நேரம் சண்டையிடுபவராக
இருப்பார்; பட்டினி, தாகம், வயிற்றுவலி, பல்வலி, மன உளைச்சல் ஆகியவற்றால் வலியால் துடிப்பார்;
தானம் வழங்குவதில் தாராளமாக இருப்பார்; சண்டையிடுவதில் கண்டிப்பாக இருப்பார்; தீர்மானித்த
கொள்கைகளைக் கொண்டிருப்பார்; செருக்குடனும், தாயிடம் பற்றும் கொண்டிருப்பார்.
6.
கன்னி இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர்
அழகிய கண்களையும், பணிவுடன் மெதுவான நடையும் கொண்டிருப்பார்; தோள்பட்டையும் கைகளும்
தாழ்ந்து இருக்கும்; வசதியாக வாழ்வார்; மென்மையான
உடலும் பேச்சும் கொண்டிருப்பார்; நேர்மையானவராக இருப்பார்; நாட்டியம், இசை, ஓவியம்,
புத்தகம் தயாரித்தல் ஆகியவற்றில் திறமையானவராக இருப்பார்; சாத்திரங்களை கற்றவராக இருப்பார்;
நல்லொழுக்கமும் புத்திசாலித்தனமும் கொண்டிருப்பார்; காம இச்சையில் ஆர்வம் கொண்டிருப்பார்;
பிறரின் வீடு மற்றும் சொத்துக்களை அனுபவிப்பார்; வெளிநாட்டில் வசிப்பார்; இனிய பேச்சினைக்
கொண்டிருப்பார்; பெண் குழந்தைகளும், குறைவாக மகன்களும் கொண்டிருப்பார்.
இராசிகளில் சந்திரன் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment