வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினேழு
பல்வேறு இராசிகளில் சந்திரன்
1. மேச
இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் வட்டவடிவமான சிவப்பு விழிகளையும்,
காய்கறி உணவில் விருப்பம் உள்ளவராகவும், இளஞ்சூடான உணவினை உண்பவராகவும் இருப்பார்;
வெகுவில் இளகும் மனம் படைத்தவராகவும், பயணங்களில் ஆர்வம் உடையவராகவும், காம இச்சையில்
ஆர்வம் உடையவராகவும் இருப்பார்; வலிமையற்ற மூட்டுகளைக் கொண்டிருப்பார்; நிரந்தரமான
சொத்துக்களை வைத்திருக்க மாட்டார்; சண்டை இடுவதிலும், பெண்களிடத்தில் ஆசை உடையவராகவும்
இருப்பார்; பிறரின் கீழ் பணிபுரிவதில் திறமையானவராக இருப்பார்; நகங்கள் உடைந்தும்,
தலையில் காயங்களுடனும் இருப்பார்; செருக்கு மிகுந்தவராகவும், சகோதர்களில் மூத்தவராகவும்
இருப்பார்; கையில் ஆயுத இரேகையுடன் அதாவது சக்தி இரேகையுடன் இருப்பார்; அடிக்கடி மாறும்
மன நிலையுடனும், நீரைக் கண்டு பயப்படுபவராகவும் இருப்பார்.
2. ரிசப
இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறந்த தோற்றமும் அழகிய நடையும் கொண்டிருப்பார்;
பெரிய தொடைகளும் முகமும் கொண்டிருப்பார்; பின்புறம் அல்லது முகம் அல்லது பக்கவாட்டில்
வடுக்கள் இருக்கும்; கொடையாளியாக இருப்பார்; துயரங்களைத் தாங்குபவராக இருப்பார்; பெரிய
செல்வாக்கும் அதிகாரமும் கொண்டிருப்பார்; கழுத்தில் பெரிதாக புடைத்திருக்கும்; பெண்
குழந்தைகள் இருக்கும்; சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருப்பார்; சொத்துக்கள், உறவினர்கள்,
பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து, விலகியிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்;
அமைதியான குணம் உடையவராக இருப்பார்; நன்றாக உண்பவராகவும்; பெண்கள் மீது ஆர்வம் கொண்டவராகவும்
இருப்பார்; நண்பர்களோடு இணைந்திருப்பார்; நடுவயதிலும், வயதின் முதிர்விலும்(1) மகிழ்ச்சியுடன்
இருப்பார்.
குறிப்பு:
(1) எனவே இளமைக் காலத்தில் மகிழ்வில்லாமல் இருப்பார்.
இராசிகளில் சந்திரன் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment