Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, March 1, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-34 - கோள்களின் தன்மைகள்



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  இரண்டு

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[கோள்கள்]


1.         காலமகனின் (காலபுருஷன்), ஆன்மாவிற்கு சூரியனும், மனதிற்கு சந்திரனும், வலிமைக்கு செவ்வாயும், பேச்சிற்கு புதனும், அறிவிற்கும் நலனிற்கும் வியாழனும், ஆசைக்கு வெள்ளியும், துயரத்திற்கு சனியும் என உள்ளனர். அனைத்து கோள்களிலும், சூரியனும் சந்திரனும் அரசனாகவும், செவ்வாய் தளபதியாகவும், புதன் முதல் இளவரசனாகவும், வியாழனும் வெள்ளியும் அமைச்சர்களாகவும், சனி பணியாளனாகவும் உள்ளனர்.


2.         ஹீலி என்பது சூரியன்; சீதரஸ்மி என்பது சந்திரன்; ஹெம்னா, வித்தை, ஞானம், போதனா, இந்துபுத்திரன் (சந்திரனின் மகன்) என்பவை புதனின் பெயர்கள்; அற, வக்ர, க்ரூரதிருக், அவனேயா (பூமியின் மகன்) என்பன செவ்வாயின் பெயர்கள்; கோணன், மந்தன், சூர்யபுத்திரன் (சூரியனின் மகன்), அசிதா (கருப்புக் கோள்) என்பன சனியின் பெயர்கள்.


3.         ஜீவ, அங்கிரச, சுரகுரு (தேவர்களின் ஆசிரியர்), வாச்சசம்பதி, இஜயா என்பன வியாழனின் பெயர்கள்); சுக்ர, பிரிகு, பிரிகுசுத, சீதா (வெள்ளைக் கோள்), அஸ்புஜித் என்பன வெள்ளியின் பெயர்கள்; தாம (இருட்டு), அகு, அசுரன் என்பன ராகுவின் பெயர்கள் (சந்திரனின் மேல்சுற்று முனை); சிகி என்பது கேதுவின் (சந்திரனின் கீழ்சுற்று முனை). இந்த வார்த்தைகளுக்கு பொருந்தக்கூடிய அனைத்தும் ஏற்கக் கூடியவை (பல்வேறு கோள்களிற்கும் உரிய பெயர்கள்).





குறிப்புகள் - (திரு. சிதம்பரம்)ஏதும் இல்லை


குறிப்புகள் – (நிமித்திகன்)

            பத்தி இரண்டு மற்றும் மூன்றில் வந்துள்ள சொற்பதங்கள் அனைத்தும் கிரேக்க மற்றும் சமஸ்கிருத சொற்பதங்களே. அவற்றினை அப்படியே ஆங்கிலத்தில் திரு சிதம்பரம் அவர்கள் கொடுத்துள்ளார். அதற்குரிய தமிழ் ஒலியில் அவை இங்கு தரப்பட்டுள்ளன.

            [பத்தி-2 - Heli, Seetharasmi, Hemna, Vit, Gna, Bodhana, Induputra, Ara, Vakram Krurudrik, Avaneya, Kona, Manda, Suryaputra, Asita]
           
            [பத்தி-3 Jeeva, Angirasa, Suraguru, Vachasampati, Ijaya, Sukra, Bhrigu, Bhrigusuta, Sita, Asphujit, Tama, Agu, Asura, Sikhi].

            மூலநூல் ஆசிரியர் இராகு கேது பற்றி  இங்குதான் முதன்முறையாகக் குறிப்பிடுகிறார்.

                                                                                       தொடரும்...

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: