வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - இரண்டு (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக்
கொள்கைகளும்
[கோள்கள்]
13. அனைத்து கோள்களும் 3-வது மற்றும் 10-வது வீடுகளை கால் பார்வையில் தொடர்பு கொள்கின்றன; 5-வது மற்றும் 9-வது வீடுகளை அரை பார்வையில் தொடர்பு கொள்கின்றன; 4-வது மற்றும் 8-வது வீடுகளை முக்கால் பார்வையில் தொடர்பு கொள்கின்றன; 7-வது வீட்டினை முழு பார்வையில் தொடர்பு கொள்கின்றன; ஆனால் சனி 3-வது மற்றும் 10-வது வீடுகளை முழு பார்வையில் தொடர்பு கொள்கின்றது; வியாழன் 5-வது மற்றும் 9-வது வீடுகளை முழு பார்வையில் தொடர்பு கொள்கின்றது; செவ்வாய் 4-வது மற்றும் 8-வது வீடுகளை முழு பார்வையில் தொடர்பு கொள்கின்றது.
குறிப்புகள் (சிதம்பரம்)
சுற்று வட்டப்பாதையில் ‘அ’ எனும் புள்ளியில் ஒரு கோள் இருப்பதாகக் கொள்வோம்; சுற்று வட்டப்பாதையினை ஒவ்வொன்றும் 300 எனும் வீதத்தில், ‘அ’-விலிருந்து 12 பாகங்களாக பிரித்துக் கொள்வோம். எனவே, ‘அ’-விலிருந்து 12 பகுதிகளின் புள்ளிகள் என்பது முறையே, 300,, 600,, 900,,
1200,, 1500,, 1800,, 2100,, 2400,,
2700,, 3000,, 3300, மற்றும் 3600, என குறிக்கப்படும் நிலையில், கோள்களின் தொடர்பினைப் பொருத்தவரையில், அந்த புள்ளிகள் இவற்றின் மையப் புள்ளிகளாக, முறையே, 1வது, 2வது, 3வது, 4வது எனத் தொடர்ந்து 12வது வீடு வரை இருக்கும். அதன் படி ஒரு கோள், ‘அ’ புள்ளியிலிருந்து கால் பார்வையில், 3வது மற்றும் 10வது, அதாவது 600,, 2700, புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும்; அது போலவே, அதன் அரைப் பார்வையின் தொடர்பு என்பது 1200,, மற்றும் 2400,;
முக்கால் பார்வையின் தொடர்பு என்பது 900,, மற்றும் 2100,,
முழு பார்வை என்பது 1800, எனும் புள்ளிகளில் இருக்கும். அதன் தொடர்பு என்பது அந்த புள்ளியிலிருந்து 150, முன்னும் பின்னும் இருக்கும். இதே குறிப்புகள் சிறப்புப் பார்வையுடைய செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
குறிப்புகள் (நிமித்திகன்)
பொதுவாக சோதிடக் குறிப்புகளில், கோள்களின் பார்வை என்பது அனைத்து கோள்களுக்கும் 7-ம் இடம் என்றும், கூடுதலாக செவ்வாய்க்கு 4 மற்றும் 8-ம் பார்வையும், வியாழனுக்கு 5 மற்றும் 9-ம் பார்வையும், சனிக்கு 3 மற்றும் 10-ம் பார்வையும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூல நூல் ஆசிரியர், இன்னும் நுணுக்கமாக கோள்களின் கால் பார்வை, அரைப் பார்வை, முக்கால் பார்வைகளை எடுத்துரைக்கின்றார். உரை ஆசிரியர் அதனை இன்னும் தெளிவாக, ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து, முன்னும் பின்னும் 150, எனும் அளவில் வீச்சு கொள்ள வேண்டும் என தெளிவு படுத்துகிறார்.
14. சூரியன் ஆறு மாதங்களைக் குறிக்கிறது; சந்திரன் இரண்டு கதிகள் அல்லது 48 நிமிடங்கள்; செவ்வாய் ஒரு நாள்; புதன் இரண்டு மாதங்கள்; வியாழன் ஒரு மாதம், வெள்ளி பதினைந்து நாட்கள்; சனி ஒருவருடம் ஆகிய கால அளவைக் குறிக்கின்றன.
சூரியன் காரச் சுவைக்கு அதிபதி; சந்திரன் உவர்ப்பு சுவை; செவ்வாய் கடுகடுப்புச் சுவை; புதன் கலவையான சுவை; வியாழன் இனிப்புச் சுவை; வெள்ளி புளிப்புச் சுவை; சனி கசப்புச் சுவைக்கு அதிபதிகள்.
குறிப்பு (சிதம்பரம்) – இல்லை
குறிப்பு (நிமித்திகன்)
கால அளவானது எதற்கு என்று உரை ஆசிரியர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் முன்பு ஒரு பத்தியில் கூறியிருந்ததை நினைவில் கொண்டால், அது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பயன்படும் எனத் தெரியவருகிறது. அதாவது தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கப் பெறும் காலம், திருமணம் நடைபெறும் காலம் போன்று, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, வலிமையுள்ள கோளிற்குரிய காலத்தை பதிலோடு தொடர்புபடுத்தலாம். வேறு ஏதேனும் விளக்கம் இருந்தால் தெரிவிக்கவும்.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment