Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, March 8, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-36 - கோள்களின் உருவமும் குணமும்


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  இரண்டு (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[கோள்கள்]


6.         புதனும் சனியும் இருபால் (அலி) கோள்கள்(1), சந்திரனும் வெள்ளியும் பெண் கோள்கள்; மற்றவை(2) ஆண் கோள்கள். செவ்வாய்நெருப்பு;, புதன்பூமி; வியாழன் - ஆகாயம்; வெள்ளிநீர்; சனிகாற்று(3).


7.         வெள்ளியும் வியாழனும் வேதியர்கள்; செவ்வாயும் சூரியனும் சத்திரியர்கள்; சந்திரன் வைசியர், புதன் சூத்திரன், சனி சண்டாளன்.

    சந்திரன், சூரியன் மற்றும் வியாழன் ஆகியவை சத்வகுணம் (நற்குணம்) கொண்டவர்கள்; புதனும் சுக்கிரனும்  ரஜோகுணம் (உணர்ச்சி மிகுந்தவர்கள்); செவ்வாயும் சனியும் தமோகுணம் (கடின குணம்) கொண்டவர்கள்.


8.         சூரியன் கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்ட கண்களுடன், நெடிய உருவமும் நீண்ட இரண்டு கைகளுடன், இள நிலைத் தோற்றத்துடனும், தலையின்  கொஞ்சம் முடியுடனும் இருப்பார்.

    சந்திரன், மெல்லிய வட்ட வடிவ உடலுடனும், அதிக ஈரப் பதம் கூடிய காற்றின் தன்மையிலும், மென்மையான குரலும், அழகிய கண்களும்  கொண்டிருப்பார்.


9.         செவ்வாய் கூர்மையான கொடுமையான கண்களும், இளைய உருவமும், பொதுவாக இள நிலைத் தோற்றமும், நிலையில்லாத மற்றும் குறுகிய மனமும் கொண்டிருப்பார்.

    புதன் தடையுடன் கூடிய பேச்சும், நகைச்சுவையும், இள நிலைத் தோற்றமும், ஈரப் பதம் கூடிய காற்றின் தன்மையிலும் இருப்பார்.


10.        வியாழன் பெருத்த உருவத்துடனும்(4), மஞ்சள் நிற முடியும் கண்களும், அதிக புத்திசாலித்தனமும், ஈரத்தன்மையும் கொண்டிருப்பார்.

    வியாழன் வசதியான வாழ்வும், அழகிய உருவமும், கவரும் கண்களும், ஈரப் பதம் கூடிய காற்றின் தன்மையிலும், கருமை நிறம் கொண்ட சுருள் முடியும் கொண்டிருப்பார்.


11.        சனி சோம்பேறியாகவும், பொன்னிறக் கண்களும், மெல்லிய மற்றும் உயரமான உடலும், பெரிய பற்களும், முரட்டு முடியும், காற்றின் தன்மையும் கொண்டிருப்பார்.

    சனி வலிமையான தசைகளிலும், சூரியன் எலும்பிலும், சந்திரன் குருதியிலும், புதன் தோலிலும், வெள்ளி உயிரணுவிலும், வியாழன் சதையிலும், செவ்வாய் எலும்பின் மஜ்ஜையிலும் இருப்பர்.


குறிப்புகள் (திரு சிதம்பரம்)

(1)    புதன் பெண் தன்மையுள்ள அலி, சனி ஆண் தன்மையுள்ள அலி.
(2)    எனவே சூரியன், செவ்வாய், வியாழன் ஆகியவை ஆண் கோள்கள்.
(3)    அதுமட்டுமின்றி சூரியன்நெருப்பு; சந்திரன்நீர் கோள்கள்
(4)    வியாழன் அனைத்து கோள்களிலும் மிகப்பெரியது, இதனை இந்திய மூதாதையர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர்.


குறிப்புகள் (நிமித்திகன்)

     மூலநூல் ஆசிரியர், ஒவ்வொரு கோளினையும் மனித வடிவில் சித்தரித்து அவைகளின் பொதுவான உருவ அமைப்பினை வகைப்படுத்தியதோடு, அவைகளை அக்கால சமுதாயத்தில் இருந்துவந்த சாதிய அடிப்படையிலும் பிரித்துள்ளார். அவர் அவ்வாறு பிரித்துள்ளார் என்பதைக் காட்டிலும், அப்போதைய நடைமுறையில் இருந்த சோதிடப்பாடத்தைத் தொகுத்துள்ளார் என்பதே உண்மை. இவ்வாறு உருவகப்படுத்தியதே, சோதிடம் என்பது வான் அறிவியல் பார்வையிலிருந்து விலகிச் செல்லக் காரணமாக இருந்தது என்றால் மிகையல்ல. இது பற்றி சோதிட ஆய்வில் விரிவாகப் பதிவிடும்போது பார்க்கலாம்.   


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: