வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - இரண்டு (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக்
கொள்கைகளும்
[கோள்கள்]
4. சூரியன் சிவப்பு மற்றும் கரும்பழுப்பு நிறம் உடையது; சந்திரன் வெண்மையானது; செவ்வாய் உயரமில்லாத உருவமும், வெண்மையும் சிவப்பும் கலந்தது; புதன் வளைந்த பசும்புல்லின் பச்சை நிறம்; வியாழன் உருக்கிய தங்கம் போன்ற மஞ்சள்; வெள்ளி வெள்ளையும் அல்லாத கருப்பும் அல்லாத நிறம், சனி கருப்பு.(@)
5. சூரியன் செம்பின் நிறத்திற்கு அதிபதி; சந்திரன் வெண்மை நிறத்திற்கு அதிபதி; செவ்வாய் சிவப்பு நிறத்திற்கு அதிபதி; புதன் பச்சை நிறத்திற்கு அதிபதி; வியாழன் மஞ்சள் நிறத்திற்கு அதிபதி; வெள்ளி பல்வேறு நிறங்களின் கலவை நிறத்திற்கு அதிபதி; சனி கருப்பு நிறத்திற்கு நிறத்திற்கு அதிபதி. (1)
சூரியன் அக்னி; சந்திரன் வருணன்; செவ்வாய் சுப்ரமணியர்; புதன் விஷ்ணு; வியாழன் இந்திரன்; வெள்ளி இந்திரானி (இந்திரனின் மனைவி); சனி பிரம்மன். (2)
சூரியன் கிழக்கிற்கு அதிபதி; வெள்ளி தென்கிழக்கு; செவ்வாய் தெற்கு; ராகு தென்மேற்கு; சனி மேற்கு; சந்திரன் வடமேற்கு; புதன் வடக்கு; வியாழன் வடகிழக்கு ஆகியவற்றிற்கு அதிபதி. (3)
தேய்பிறைச் சந்திரன், சூரியன், செவ்வாய், சனி, இவைகளுடன் சேர்ந்த புதன் ஆகியவை தீயக் கோள்கள்.
(4)
குறிப்புகள் (திரு சிதம்பரம்)
(@) ஒருவன் பிறக்கும் நேரத்தில் உள்ள கோள்களில் வலிமையானதின் நிறம் அந்த மனிதனின் நிறமாக இருக்கும்.
(1)
இவை திருடுபோன பொருட்களின் நிறங்களை அறியவும், கோள்களை வணங்கிட உதவும் மலர்களின் நிறங்களை அறியவும் பயன்படுகிறது.
(2)
இதில் பிறக்கும்போது உள்ள வலிமை வாய்ந்த கோள்கள், அந்த மனிதன் எந்தக் கடவுளை வணங்கிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும்.
(3)
இவை பிரசவித்த பெண் இருந்த அறையின் நுழைவு வாயிலின் நிலையை அறியவும் தப்பித்துச் சென்ற திருடனின் திசையினை அறியவும் உதவும்.
(4)
வியாழன், வெள்ளி, மற்றும் இவைகளுடன் சேர்ந்த புதன் ஆகியவை நன்மை செய்யும் கோள்கள்.
குறிப்புகள் (நிமித்திகன்)
இந்தப் பகுதியில் ஆசிரியர் கோள்களின் தன்மைகள், பொறுப்புகள் ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். இதில் உள்ள சில கருத்துக்கள் பற்றி எதிர்மறையாகவும் கூறவேண்டியிருந்தாலும், இது முற்றிலும் தமிழ் மொழிபெயர்ப்பு என்பதால், அப்பணியை மட்டும் சிறப்புடன் செய்யவேண்டியக் கட்டாயம் உள்ளதால் அதனைத் தவிர்த்துள்ளேன். அது பற்றி சோதிட ஆய்வுக் கட்டுரைகளில் விரிவாக அதற்குரிய இடங்களில் எழுதுவேன்.
பத்தி 5-ல் ஆசிரியர் குறிப்பிடுவதை, ஒரு அட்டவணையில் தருகிறேன்.
கோள்கள்
|
நிறம்
|
கடவுள்
|
திசைகள்
|
தன்மை
|
சூரியன்
|
செம்பு
|
அக்னி
|
கிழக்கு
|
அசுபர்
|
சந்திரன்
|
வெண்மை
|
வருணன்
|
வடமேற்கு
|
தேய்பிறை – அசுபர்
வளர்பிறை - சுபர்
|
செவ்வாய்
|
சிவப்பு
|
சுப்ரமணியர்
|
தெற்கு
|
அசுபர்
|
புதன்
|
பச்சை
|
விஷ்ணு
|
வடக்கு
|
அசுபருடன் – அசுபர்
சுபருடன் - சுபர்
|
வியாழன்
|
மஞ்சள்
|
இந்திரன்
|
வடகிழக்கு
|
சுபர்
|
வெள்ளி
|
கலவை
|
இந்திரானி
|
தென்கிழக்கு
|
சுபர்
|
சனி
|
கருப்பு
|
பிரம்மா
|
மேற்கு
|
அசுபர்
|
இராகு
|
-
|
-
|
தென்மேற்கு
|
-
|
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
- 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment